ungal-kulanthaiyin-pirappu-adaiyaalangal-avakalai-patri-enna-solkirathu

குழந்தைகளின் பிறப்பு அடையாளத்துடன் தொடர்புடைய பல நம்பிகைகள் இருக்கின்றன. அதாவது அவர்கள் கடந்த வாழ்வில் எதாவது செய்திருக்கிறார்களா அல்லது அவர்களது நிகழ்காலம் எப்படி அமைய போகிறது என்றெல்லாம் பல நம்பிக்கைகள் இருக்கின்றன. உங்கள் குழந்தையின் காலில், கன்னத்தில் அல்லது உடலின் மற்ற பகுதிகளில் இருக்கும் பிறப்பு அடையாளங்கள், என்னவெல்லாம் சொல்கின்றன என்பதை அறிய நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களா? இங்கு பொதுவாக வெளியில் தெரியும் பிறப்பு அடையாளங்கள் உங்கள் குழந்தையை பற்றி என்ன சொல்கின்றன என்பதை பார்க்கலாம்.  

1 நெற்றி

பிறப்பு அடையாளம் உங்கள் குழந்தையின் நெற்றி வலது புறத்தில் இருந்தால், மிகவும் புத்திசாலியாகவும், கல்வியில் சிறந்தும் விளங்குவார்கள்.

உங்கள் குழந்தையின் நெற்றி இடது புறத்தில் இருந்தால், உங்கள் குழந்தை பொறுப்பற்ற மற்றும் ஊதாரியாக மாறிவிடுவார்கள். பெற்றோர்களே கவனம் தேவை.

உங்கள் குழந்தையின் நடு நெற்றியில் இருந்தால், இவர்கள் மற்றவர்களால் கவர கூடியவர்களாகவும், அனைத்தையும் வெற்றி பெறுபவர்களாகவும் இருப்பார்கள். அனைவரின் இதயத்தையும் மிக எளிதில் வெற்றி பெற கூடிய வித்தைக்காரர்கள்.

2 கன்னம்

ஆண் குழந்தைகளுக்கு, இடது கன்னத்தில் பிறப்பு அடையாளம் இருந்தால், அவர் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு செயலுக்கும் அவர் கடமைப்பட்டுள்ளார். அதேசமயத்தில் வலது கன்னத்தில் இருந்தால், அவர் நிதி பிரச்சினைகள் காரணமாக பாதிக்கப்படுவார் என்பதாகும்.

பெண் குழந்தைகளுக்கு, வலது கன்னத்தில் பிறப்பு அடையாளம் இருந்தால், ஒரு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைப் பெறுவார் என்றும், இடது கன்னத்தில் இருந்தால், அவர்களின் மீது நம்பிக்கையற்றவராக இருப்பதாக சுட்டிக்காட்டுகிறார்.

3 உதடு

இந்த பிறப்பின் அடையாளம் குழந்தையின் உதட்டுப்புள்ளியில் இருந்தால், அதிகமாக பேச கூடிய நபர் என்று கூறுகிறது. அது உதட்டையின் ஓரத்தில் இருந்தால், அது உங்கள் குழந்தை ரசித்து சாப்பிடுவதைக் குறிக்கிறது. உதட்டுக்கு கீழ் இருந்தால், குழந்தைகள் அவர்களின் அனைத்து பொறுப்புகளையும் தீவிரமாக மேற்கொள்ளுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

4 கழுத்து

கழுத்தில் பிறப்பு அடையாளம் கொண்ட, உங்கள் குழந்தை மிகவும் வெற்றிகரமான நபராக இருப்பார் என்பதைக் குறிக்கும். எனினும், அவர்கள் வெற்றியை அடைவதற்கான செயல்முறையில், அவர்களது அன்புக்குரியவர்களுடன் பங்கேற்க வேண்டும் எனவும் எதிர் பார்ப்பார்கள்.

5 கால்

உங்கள் குழந்தைக்கு காலில் பிறப்பு அடையாளம் இருந்தால், அவர்களது சொந்த முடிவிற்கே மற்றவர்களை சார்ந்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதுவே அவர்களின் பிறப்பு அடையாளம் தொடையில் இருந்தால், அவர்களது திருமண வாழ்கை சிறப்பாகவும், மற்ற அனைத்து செல்வங்களுடன் செழிப்பாக அமையும் எனவும் சொல்லப்படுகிறது.

6 முதுகு

முதுகின் கீழ் புறத்தில் பிறப்பு அடையாளம் இருந்தால், அவர்கள் ஒரு நேர்மையான நபராக இருப்பார் என்கிறார்கள். அதுவே, முதுகின் மேல் புறத்தில் இருந்தால், அவர்கள் நெகிழ்வாகவும், புதிய கருத்துக்களின் திறவுகோலாகவும் விளங்குவார்கள்.

7 கை

வலது மற்றும் இடது என எந்த கையில் உங்கள் குழந்தையின் பிறப்பு அடையாளம் இருந்தாலும், அது நன்மைக்கான அறிகுறியாகும். அவர்கள் சிறந்த திறன்களை கொண்டிருப்பார்கள் என்பதன் அடையாளமாகும். அதுவே, உங்கள் குழந்தையின் விரல்களில் இருந்தால், அவர்கள் சுதந்திரமாக இருப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.

இவை இருக்கும் இடத்தை மட்டும் சார்ந்தில்லாமல், வண்ணங்களை பொருத்தும் சொல்லப்படுகிறது. உங்கள் குழந்தையின் பிறப்பு அடையாளம், வெள்ளை நிறத்தில் இருந்தால் அது குழந்தையின் முந்தைய பிறவியில் ஏற்பட்ட காயம் என்றும், சிவப்பு நிறத்தில் இருந்தால் அது குழந்தையின் முந்தைய பிறவியில் எரிக்கப்பட்டதன் அடையாளமாக கருதப்படுகிறது.

இது பிறப்பு அடையாளங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று மற்றும் வெவ்வேறு கலாச்சாரங்களில் வெவ்வேறு அர்த்தங்கள் இருக்கிறது. எனவே, உங்கள் குழந்தையின் பிறப்பு அடையாளம் ஏதாவது எதிர்மறையானதாக இருந்தால், கவலைப்பட வேண்டாம். இவை உண்மையாக நிரூபிக்கப்பட்டவை அல்ல, எனவே நீங்கள் இவற்றை வேடிக்கையான ஒன்றாக எடுத்து கொள்ளுங்கள்.  

Leave a Reply

%d bloggers like this: