ammakkal-epothum-siranthavarkalaga-irupatharkana-6-karangal

நீங்களே அம்மாவின் உலகமாக இருப்பீர்கள். அவர்கள் உங்களை பாதுகாப்போதோடு நீங்கள் விழும் போதும் எழும் போதும் துணை நிற்பார்கள். அம்மாக்கள் உங்களை எப்போதும் திட்டலாம், ஆனால் உங்களை நேசிப்பதை அவர்கள் ஒருபோதும் நிறுத்தமாட்டார்கள்.நீங்கள் எங்கு இருந்தாலும் என்ன செய்து கொண்டிருந்தாலும் உங்கள் கடினமான நேரங்களிலும் இன்பமான நேரங்களிலும் உடனிருக்கும் ஜீவன் அம்மா மட்டுமே. உங்கள் மதிப்பெண் பற்றியோ அல்லது உங்கள் உடல்நிலை பற்றியோ அவர்கள் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது அவர்களின் அன்பின் வெளிப்பாடே.

1 ஒரே நேரத்தில் பல வேலை செய்தல்

அவர்களுக்கு அலங்காரம், வீட்டு வேலைகள், அலுவலக பணி என பல வேலைகள் இருந்தாலும் அவர்கள் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்காமல் இருக்கமாட்டார்கள். அம்மாக்களை விட இதை யாராலும் சிறப்பாக செய்ய முடியாது.

2 எப்போதும் சரியாக செய்தல்

சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு செயல்படுவதில் அம்மாக்களுக்கு நிகர் அம்மா மட்டுமே. அவர்களின் முடிவுகள் எப்போதும் சரியானதாக இருக்கும். உதாரணமாக, அம்மாக்கள் குழந்தையுடன் ஷாப்பிங் செல்லும்போது நிச்சயம் அதை எப்படி சரியாக செய்ய வேண்டுமென தெரிந்து வைத்திருப்பார்கள்.

3 குழந்தைகளுடன் நேரம் செலவிடுதல்

அவர்கள் எவ்வளவு களைப்பாக இருந்தாலும் உங்களுடன் விளையாடுவதை தவிர்க்கமாட்டார்கள். அவர்களுக்கு எதுவும் தெரியாவிட்டாலும் உங்களின் வீட்டுப்பாடங்களில் உதவ ஆர்வமாய் இருப்பார்கள். அது உங்களுக்கே நன்றாக தெரியும்.

4 குழந்தைக்குத்தான் முன்னுரிமை

ஆயிரம் பேர் இருந்தாலும் எப்போதும் குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்வதிலேயே கவனமாய் இருப்பார்கள். அவர்களின் தேவையை காட்டிலும் குழந்தையின் தேவைகளுக்கே முக்கியத்துவம் தருவார்கள்.

5 சரியான முடிவெடுத்தல்

அம்மாக்கள் எப்போதும் சிறந்த ஆலோசனையை வழங்குவார்கள். நீங்கள் அதை மறுக்க முடியாது, அவர்கள் பேச்சை நீங்கள் கேட்காத போதும் அவர்கள் அறிவுரையை நிறுத்த மாட்டார்கள். ஆனால் அவர்களின் முடிவே எப்போதும் சரியாய் இருப்பதுதான் ஆச்சரியம்.

6 முன்னுதாரணமாய் விளங்குதல்

பெரும்பாலான குழந்தைகள் அவர்களின் பெற்றோரின் செயல்களையே அப்படியே பின்பற்றுவார்கள். அம்மாக்கள் செய்யும் அனைத்து செயல்களும் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாய் இருக்கும். எல்லா சூப்பர் ஹீரோக்களும் தொப்பி அணிந்திருப்பதில்லை முக்கியமாக அம்மாக்கள். ஆனாலும் அவர்கள் எப்போதுமே சூப்பர் ஹீரோதான்.

அம்மாக்கள் மிகவும் விலையுயர்ந்தவர்கள் என்பதற்கான சில காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர்கள் எப்போதும் உங்கள் இதயத்தில் சிறப்பான இடம் பிடித்திருப்பார்கள். அந்த இடத்தை எவராலும் நீக்கவோ, நிரப்பவோ முடியாது. நீங்கள் அம்மாவை எவ்வளவு நேசிக்கிறீர்கள் மற்றும் எவ்வளவு மதிக்கிறீர்கள் என்று தெரியப்படுத்துங்கள். உங்கள் அம்மாவை விட அதிகமாக யாராலும் உங்களை நேசிக்க முடியாது.

Leave a Reply

%d bloggers like this: