கர்ப்ப காலத்தில், பெண்களின் உடலில் பலவித ஹார்மோன்கள் சுரக்கத் தொடங்குகின்றன; இந்த ஹார்மோன் சுரப்பு அவர்களின் உடலளவிலும் மனதளவிலும் பல்வேறு மாற்றங்கள், நிகழ்கின்றன. கர்ப்பிணிகள், தங்களுக்கு அறியாமலேயே, இம்மாற்றங்கள் அனைத்தும் அவர்களின் உடலில் ஏற்படுகின்றன.
அப்படி உடலளவில் ஏற்படும் மாற்றங்கள் என்னவெல்லாம் என்று இந்த பதிப்பில் படித்து அறியலாம்..!
1. Montgomery tubercles
உங்கள் மார்பகங்களின் முலைக்காம்புகளைச் சுற்றி ஏற்படும் தோலுரிதல் போன்ற மாற்றங்கள் நிகழும்; இதற்கு நீங்கள் எந்தவித மருந்துகளையும் உபயோகித்து போக்க வேண்டியதில்லை. கர்ப்பகாலத்தில் தோன்றிய இந்த மாற்றங்கள் தாய்ப்பால் கொடுக்கும் காலம் முடிந்தவுடன் மறைந்து விடும்.
2. Varicose veins
உங்கள் உடலிலுள்ள இரத்த தமனிகளில், வீக்கங்கள் ஏற்படலாம்; இந்த வீக்கம் உங்கள் உடலின் மேற்பரப்பில் ஆங்காங்கு தோன்றலாம். இவை கர்ப்பகால மாற்றங்களே! குழந்தை பிறப்புக்கு பின் மறைந்துவிடக்கூடிய மாற்றங்களே!
3. Change in libido
கர்ப்பகால ஹார்மோன் சுரப்பு, உங்கள் உடலுறவில் பல மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில் உடலுறவு கட்டாயம் கொள்ள வேண்டும் என்றும், சில நேரங்களில் வேண்டவே வேண்டாம் என்றும் உங்கள் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும்.
4. Bladder explosion
கர்ப்பம் தரித்தது முதல், உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்; இது சாதாரணமாக அனைத்து பெண்களுக்கும் ஏற்படும் மாற்றமே..!
5. Skin pigmentation
கர்ப்ப காலத்தில், உங்கள் தோலின் நிறத்தில் மாற்றம் அடையலாம். உங்கள் உடலில் மெலனின் உற்பத்தி, அதிகரித்து, கருமை நிறம் தோன்றலாம்.
6. மார்பகங்களில் மாற்றங்கள்..
மார்பகங்களின் முலைக்காம்புகலில் ஏற்பட்ட தோலுரிதல் மாற்றங்களைத் தொடர்ந்து, அந்த பகுதி நன்கு கருமை நிறம் அடைந்துவிடும். மேலும் மார்பகங்கள் நல்ல வளர்ச்சியும், வட்ட வடிவமான மாற்றங்களும் ஏற்படும்.
7. Luscious hair
கர்ப்ப காலம் தொடங்கிய சமயம் முதல், பெண்களுக்கு முடி உதிர்வு அதிகம் ஏற்படும்; மிகச் சிலருக்கு கர்ப்ப கால மாற்றங்கள் முடி வளர்ச்சியினைத் தூண்டலாம். ஒரு நாளைக்கு 70-100 முடிக்கற்றைகள் வரை உதிர்வு ஏற்படலாம்.
8. Dysgeusia
கர்ப்ப கால ஹார்மோன் சுரப்பால், பெண்களின் சுவை மொட்டுக்களில் மாற்றங்கள் நிகழலாம்; உணவின் சுவைகளை சரியாக உணர முடியாத நிலை அல்லது சாப்பிட முடியமால் குமட்டல் போன்ற மாற்றங்கள் நிகழலாம்.
9. மலச்சிக்கல்
கர்ப்ப காலத்தில், கர்ப்பிணிகளுக்கு மலச்சிக்கல் என்பது பெரும் பிரச்சனையாக விளங்கும். இந்த சமயத்தில், பெண்கள் அதிக உணவு உண்ண வேண்டி இருப்பதால், பெரும்பாலான பெண்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனைகள் ஏற்படலாம்.
10. Linea nigra
கர்ப்ப கால மாற்றங்களில், பெரும்பாலான பெண்கள் இந்த மாற்றத்தை அறிந்திருப்பர்; கர்ப்ப கால ஹார்மோன் மாற்றத்தால், வயிற்றில் கருப்பு நிறத்தில் கோடுகள் ஏற்படலாம்.
இந்த மாற்றங்கள் அனைத்தையும் கர்ப்பிணிகள் பொறுமையோடு கையாள வேண்டியது அவசியம்; இவற்றையெல்லாம் எண்ணி மன உளைச்சல், மனஅழுத்தம் கொள்ளாமல், நீங்கள் மகிழ்ச்சியோடு இருந்தால் தான் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும், வளரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் கர்ப்பிணிகளே! பதிப்பு பிடித்திருந்தால், பயனுள்ளது என்று கருதினால், மற்றோர் பயனடைய பகிரவும்..!