karuvil-kulanthaiyin-valarchi

நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது சிலவற்றை தெரிந்து கொள்ளவேண்டும். உங்களுள் கருவாக வளர துவங்கி இருக்கும் குழந்தை பயணிக்கும் வளர்ச்சி படிநிலைகளை, நீங்கள் அறிந்து கொள்ளுதல் அவசியம். உங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் ஒவ்வொரு அசைவுகளையும், உங்களை தவிர யாராலும் உணர்ந்து மகிழ முடியாது. அந்த இன்பமானது கற்பனைக்கு அப்பாற்பட்டது. இருப்பினும், உங்களுக்குள் வளர துவங்கி இருக்கும் கரு, முழு வளர்ச்சியுள்ள குழந்தையாக எப்படி மாறுகிறது என்ற ஆர்வம் ஏற்பட்டிருக்கலாம். இப்போது நாம் கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சி எப்படி ஒவ்வொரு மாதமும் எப்படி இருக்கும் என பார்க்கலாம்.  

1 கருத்தரித்தல்

நீங்கள் கர்ப்பமாக இருக்கும் அந்த தருணம், உங்கள் கருமுட்டையை விந்தணு ஊடுருவி விட்டதாக அர்த்தம். நீங்கள் வீட்டில் பரிசோதிக்கும் முறை கர்ப்பத்தை உறுதி அளித்தால், அதுவே உங்கள் கர்பத்திற்கான சான்றாக இருக்கும். கருத்தரித்தலுக்கு பிறகு, முதல் மூன்று மாதங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் கவனத்துடன் இருக்க வேண்டும்.

2 முதல் மாதம்

அந்த ஒரு செல் இரு பாகங்களாக பிரியும். பின் அது தலை, வயிறு மற்றும் மார்பு என வளர்ச்சி அடையும். இந்த கருவானது குழந்தையின் உடல் அமைப்பு போல வளர துவங்கும்.

3 இரண்டாவது மாதம்

உங்கள் சிறு குழந்தை சிறுநீரகத்தின் மிக அருகில் இருக்கும், அதாவது, சுமார் 1 அங்குல நீளம். இந்த மாதம் முக்கியமானது. எனவே ஆரோக்கியமான உணவை உட்கொள்வதில், அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உங்கள் மீது நீங்களே அதிக அக்கறை எடுத்து கொள்ளுங்கள்.

4 மூன்றாவது மாதம்

இப்போது, உங்கள் குழந்தை ஒரு பட்டாணி அளவுக்கு (ஏறத்தாழ 2-3 அங்குலம்) வளர்ச்சி அடைத்திருக்கும். அவர்களின் கை விரல்களும், கால் விரல்களும் இப்போது தான் வளர்ச்சியடைய துவங்கி இருக்கும் மற்றும் தனித்துவமான கைரேகைகள் கூட உருவாக துவங்கி இருக்கும். உங்கள் குழந்தையின் சிறிய அசைவுகளையும் மற்றும் குழந்தையின் இருதய துடிப்புகளையும் உணர முடியும்.

5 நான்காவது மாதம்

இந்த நான்காவது மாதத்தில், உங்கள் கர்ப்பப்பை விரிவடையும். இப்போது உங்கள் குழந்தையின் எடை மற்றும் உயரம் அதிகரிக்க துவங்கி இருக்கும். உங்கள் பரம்பரை மரபணுக்கள் உங்கள் குழந்தையின் உடலில் வளர்ச்சி அடையும். உங்கள் குழந்தையின் எடை 142 கிராம் மட்டுமே. அவர்களின் எலும்பு மண்டலம் மற்றும் குருத்தெலும்புகள் வளர்ச்சியடைய துவங்கி இருப்பதால், மிகவும் மென்மையானதாக இருக்கும். மேலும் குழந்தையின் இருதய துடிப்பு சற்று தெளிவாக இருக்கும்.

6 ஐந்தாவது மாதம்

உங்கள் குழந்தை 27 செமீ நீளமாக வளர்ந்திருக்கும். அவர்களின் கால்கள் நீண்டு வளர துவங்கும். உங்கள் குழந்தையின் கண் இமைகள் மற்றும் புருவம் வளர்ந்திருக்கும். உங்கள் குழந்தை உங்களை உதைக்கும் அந்த நிமிடம் உங்களை மிகவும் மகிழ்ச்சியடைய செய்யும்.

7 ஆறாவது மாதம்

நீங்கள் அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிற்கு தயாராகி இருப்பீர்கள். இது உங்கள் குழந்தையின் முதல் படம். இதை பத்திரப்படுத்தி வையுங்கள். சில ஆண்டுகளுக்கு பிறகு உங்கள் குழந்தைகள் எவ்வளவு சிறியவர்களாக இருந்தார்கள் என்பதை அவர்களுக்கு காண்பியுங்கள்.

8 ஏழாவது மாதம்

இப்போது உங்கள் குழந்தையின் எடை 600 கிராம். அவர்களின் உடல் அசைவுகள் உணர கூடியதாக இருக்கும் மற்றும் உடல் பாகங்கள் உறுதியான உடல் அமைப்பில் வளர்ந்திருக்கும். உங்கள் குழந்தை உங்களை அதிகமாக உதைக்க துவங்கி இருக்கும். இது உங்கள் குழந்தை நன்றாக வளர்ந்திருக்கிறது என்பதை உணர்த்தும்.

9 எட்டாவது மாதம்

உங்கள் குழந்தை கிட்டத்தட்ட முழு குழந்தையாக வளர்ச்சி அடைந்திருக்கும். குறை மாதத்தில் குழந்தை பிறந்தாலும், இந்த சமயத்தில் உங்கள் குழந்தை மிகுந்த மேற்பார்வையுடன் உயிர் வாழ முடியும். இப்போது உங்கள் குழந்தையின் எடை 2 கிலோவாக இருக்கும்.

10 ஒன்பதாவது மாதம்

உங்கள் குழந்தை முற்றிலும் வளர்ச்சி அடைத்திருக்கும். நீங்கள் உங்கள் குழந்தையை பிரசவிக்க தயாராக உள்ளீர்கள். இப்போது நீங்கள் குழந்தையை பிரசவிக்க போகும் தேதியை, உங்கள் மருத்துவர் கணித்து விடுவார். உங்கள் தினசரி பழக்கவழக்கங்கள் பற்றியும், அவர் உங்களுக்கு ஆலோசனை வழங்குவார்.

Leave a Reply

%d bloggers like this: