kulanthai-pettruku-pinnana-thopaiyai-mataikka-vuthavum-valikal

குழந்தை என்பது கிடைத்த பின், பெண்கள் கொள்ளும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது. ஆனால் அவர்கள் மனதினுள் சிறிய கவலைகளும் குடியேறி இருக்கும். இந்த கர்ப்பகாலம் மற்றும் பிரசவக்காலத்தில் அவர்கள் உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் தான் இதற்கு காரணம். அவற்றுள் மிக முக்கியமான ஒன்று தான், பிரசவ கால தொப்பை. கடந்த ஆண்டு, பியோனஸ் மற்றும் கரீனா கபூர் ஆகிய இரண்டு பிரபலங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அவர்கள் குழந்தை பிறந்திருந்தாலும் எப்படி அதே அழகுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கும் பிரசவகால தொப்பை ஏற்பட்டிருக்கும் தானே. அவர்களால் மட்டும் எப்படி தேவதைகள் போன்று தோற்றமளிக்க முடிகிறது. அவைகளை அழகாக காட்ட ஸ்டைலிஸ்டுகள் இருப்பார்கள் என நீங்கள் நினைக்கலாம். இப்போது பல ஸ்டைலிஸ்ட்கள் பிரசவகால தொப்பையை மறைக்க கூறிய வழிகளை இங்கு பார்க்கலாம்.  

1 கருப்பு நிறம்

கருப்பு நிற சிறிய உடைகள், கருப்பு லெக்கின்ஸ்கள், கருப்பு நிறத்தில் தோல் போன்று இருக்கும் ஜாக்கெட்டுகள், கருப்பு நிற புடவைகள் அல்லது பட்டுப்புடவைகள் : இவற்றில் என்ன பொதுவாக இருக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா? அவை அனைத்தும் கறுப்பு நிறம். இந்த நிறம் உங்களது உடலின் அளவை மெலிதாகவும், ஒல்லியாகவும் காட்டக்கூடிய தன்மை உடையது. கருப்பு என்பது மாயையின் உலகளாவிய குறியீடாக இருக்கிறது. இது உங்களது உடல் அமைப்பையும், எடையையும் மாற்றி காட்டுகிறது.

பொதுவாக கருப்பு நிறம் என்பது குறைபாடுகளில் இருந்து அனைத்தையும் விலக்கி வைக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. நீங்கள் கருப்பு நிறத்திலான புடவையும், அதே நிற ஜாக்கெட்டும் அணிந்து அதற்கு ஏற்றாற்போல் உடை அணிந்தால் மிகவும் அழகான தோற்றத்துடன் காட்சியளிக்கலாம்.

2 பெரிய அளவுள்ள ஸ்வெட்டர்ஸ் மற்றும் மென்மையான கார்டிகன்ஸ்

நல்ல வசதியான கம்பளி ஆடைகளை விட சருமத்திற்கு சிறந்தது ஏதும் இல்லை. மென்மையான அடர் நிறம் கொண்ட கார்டிகனை வாங்கி கொள்ளுங்கள். லேசான நிறம் கொண்ட பூக்கள் போட்டிருக்கும் புடவைகள் மற்றும் ஜாக்கெட்களின் மீது அணிந்து கொள்ளுங்கள். ஸ்வெட்டர்களை வாங்கும் போது, எப்போதும் உங்களை விட சற்று பெரிதாக இருக்கும் படி வாங்கி கொள்ளுங்கள். அவற்றுடன் லெக்கிங்ஸ் சேர்த்து அணிந்தால், உங்களுக்கு மெலிந்த உடல் தோற்றத்தை கொடுக்கும்.

3 பாரம்பரிய கவர்ச்சி

பாரம்பரிய உடைகள் உடல் எடை மற்றும் தொப்பையை மறைத்து உங்களை அழகாக காட்டக் கூடியவையாகும். பருத்தி மற்றும் கதர் போன்ற உடைகள் பெரும்பாலும் குர்தாக்களில் பயன்படுத்தபடுகின்றன. இவை அணிவதற்கு இலகுவாவும், வசதியாவும் மற்றும் காற்றோற்றமாகவும் இருக்கின்றன. அழகாக அச்சிடப்பட்ட கலம்காரி ஆடைகளை, நன்றாக உடுத்தினால் ஒல்லியான தோற்றத்தை கொடுக்கும். குடும்ப நிகழ்ச்சிகளில் நீங்கள் அழகாக தோன்ற விரும்பினால், நன்றாக தைக்கப்பட்ட கலம்காரி அனார்கலி சுடிதார் மற்றும் பேண்ட் அல்லது லெக்கின்ஸ் உடன் சேர்த்து அணிந்து, அதற்கு தகுந்தாற் போல் பெரிய தோடு மற்றும் நகைகளை அணிந்தால், உங்கள் குழந்தை பிறந்த பின் ஏற்பட்ட தொப்பை மற்றும் எடை எங்கு சென்றது என்று தெரியாத அளவிற்கு உங்களை ஒல்லியாக காட்டும்.

4 ஸ்பான்டெக்ஸ் ரகசியங்கள்

ஸ்பான்டெக்ஸ் மற்றும் வடிவத்திற்கு சரியானவற்றை வாங்குவது சிறந்தது. குறிப்பாக நீங்கள் எதாவது மாலை நேர நிகழ்வுகளில் கச்சிதமான அழகுடன் பங்கேற்க வேண்டும் எனும் போது, இவை பயனுள்ளவையாக இருக்கும். இடுப்பிற்கு பயன்படுத்தப்படும் உடல் வடிவமைப்பு ஆடைகள்(shapewear) உங்கள் வயிற்று சதையை சமப்படுத்தி, தொப்பையை மறைக்கிறது. நீங்கள் உடலை மென்மையாக காட்டும் உடல் வடிவமைப்பு ஆடைகள் வாங்கும் போது, நல்ல தரமானதாக பார்த்து வாங்க வேண்டும். அவை தரம் குறைத்தவையாக இருந்தால், அவை சிராய்ப்பு மற்றும் எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்த கூடும்.

5 ஆடைகளை கட்சிதமாக தைத்தல்

உங்களது எடை கொஞ்சம் அதிகரித்திருக்கும் போது, தளர்வான உடைகளை அணிந்தால் மேலும் உடல் எடையை அதிகமாக மறைக்காமல் காட்டும். இது நீங்கள் செய்ய கூடிய மிக மோசமான ஒரு செயலாக அமையும். உங்கள் உடைகளை தைப்பவரை சந்தித்து, சரியான அளவுகளில் காட்சிதமாக தைத்து அணிந்தால், அது மெல்லிய உடல் தோற்றத்தை பெற்றிருப்பதாக உணரச்செய்து நம்பிக்கையையும் கொடுக்கும். நீங்கள் பாரம்பரிய உடைகளை தைத்து அணியும் போது, உங்களை அழகாகவும் நேர்த்தியாகவும் காட்டுவதுடன், விலையும் குறைவாக இருக்கும். 

Leave a Reply

%d bloggers like this: