ungal-kanavarudan-kolla-ventiya-5-pechchuvarththaikal

திருமணம் என்ற பந்தத்தில் இணைந்த இருவரும், ஒருவருக்கொருவர் நண்பர்கள் போல் நன்கு பேசிக்கொள்ள வேண்டும்; எந்த ஒளிவு மறைவும் தம்பதியருக்குள் இருக்கக் கூடாது. என்னதான் உங்கள் கண்ணசைவுகளை, சைகைகளை உங்கள் துணை புரிந்து கொண்டாலும், வார்த்தைகளால் மட்டுமே உணர்வுகளை உங்கள் துணையிடம் சரியாக வெளிப்படுத்த முடியும்; ஆகையால், மனைவிகளே கணவரிடம் கட்டாயம் கொள்ள வேண்டிய பேச்சுவார்த்தைகள் பற்றி படித்தறியலாம் வாருங்கள்..! 

1. நிதிநிலைமை..!

குடும்பத்தின் நிதி நிலைமையில், கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் சரிபாதி பொறுப்பு உண்டு; எனவே குடும்ப நிதி நிலைமை பற்றி இருவரும் கண்டிப்பாக கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டும். இது வீட்டின் நிதி நிலைமை பற்றிய தெளிவினை இருவருக்கும் அளித்து, குடும்பத்தை சிக்கனமாக நடத்த உதவும்.

2. உடலுறவு..!

உடலுறவு பற்றிய உங்கள் எண்ணங்கள் எதுவாயினும், அதை உங்கள் துணையிடம் பேசி தெளிவு பெற வேண்டும்; உங்கள் உடலுறவு ரீதியான உணர்வுகளையும் உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

3. கனவுகளும் வருங்காலமும்..

தம்பதியர் இருவரும் தங்கள் துணையின் கனவுகளைப் பற்றி அறிந்து, அதை அவர் அடைய மற்றவர் உதவ வேண்டும் மற்றும் உங்கள் வருங்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய சரியான திட்டத்தை இருவரும் பேசி முடிவெடுக்க வேண்டும். இது ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.

4. பால்ய பருவம்..!

உங்கள் துணையை பற்றி ஆதி முதல் அந்தம் வரை முழுமையாக நீங்கள் அறிந்திருப்பது நல்லது; உங்களின் குழந்தைப்பருவ நிகழ்வுகளையும் அனுபவங்களையும் துணையுடன் பகிந்து கொள்ளுங்கள்; தினம் ஒரு ½ மணி நேரமாவது துணையுடன் பேசி காலம் கழிக்க முயலுங்கள்.

5. பயம்..!

உங்கள் துணையின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பது பற்றி கலந்தாலோசித்து அறியுங்கள்; அவர் பயத்தைப் போக்கி, பலவீனத்தைக் குறைக்க பக்கபலமாக இருங்கள்..! உங்கள் துணையிடம் தாழ்வு மனப்பான்மை போன்ற எண்ணங்கள் இருந்தால், அவற்றிலிருந்து அவர் விடுபட வழிவகை செய்யுங்கள்…!

தம்பதியர்களே! உங்களுடன் காலம் முழுதும் வாழவிருக்கும் உங்கள் துணையை பற்றி, முழு விவரங்கள் அறிந்து கொள்ளுங்கள்; இது உங்கள் இல்லற வாழ்க்கையை இனிமையாக்க உதவும்..! வாழ்க வளமுடன்..! பதிப்பு பிடித்திருந்தால், நண்பர்களுடன் பகிரவும்..! 

Leave a Reply

%d bloggers like this: