pirasavaththirku-pinnana-mutiuthirvai-thatukka-7-koonthal-paanikal

கர்ப்பம் தரித்த காலம் முதல் பிரசவம் முடிந்து குழந்தை பிறக்கும் வரை, பெண்களின் உடலில் பலவித ஹார்மோன் மாற்றங்களும், ஹார்மோன் சுரப்புகளும் நிகழும். இதனால் பெரும்பாலான பெண்களுக்கு பல உடலியல் மாற்றங்கள் ஏற்படலாம்; இம்மாற்றங்களுள் பெண்களை மனஅழுத்தத்திற்கு உட்படுத்தும் ஒரு மாற்றம் முடிஉதிர்வு..!

பெண்களின் இப்பிரச்சனைக்கு தீர்வளிக்கும் வகையில் புதிய கூந்தல் பாணிகளை (hairstyles) இந்த பதிப்பில் அளித்துள்ளோம். எனவே, பதிப்பை படித்து, உங்களுக்கு பிடித்த கூந்தல் பாணியை தேர்ந்தெடுத்து மனஅழுத்தத்தில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியுடன் வாழ முயற்சியுங்கள்..!

A. வட்ட முகத்தவருக்கு..!

1. Short Bob..!

குழந்தைகளுக்கு முடி வெட்டும் போது, பாப் கட் (bob) என்பார்களே, அது மாதிரியான கூந்தல் பாணியை வட்ட வடிவமுள்ள பெண்கள் முயற்சி செய்யலாம்; பிரசவ ஹார்மோனால், முடிகள் அனைத்தும் உதிர்ந்து அடர்த்தியில்லா கூந்தலுடன் காட்சியளிப்பதற்கு இது மாதிரியான கூந்தல் பாணியை சில காலத்திற்கு வைத்துக் கொள்ளலாம்..! 

2. Wavy-mid length..!

கூந்தலை அலைக்கற்றைகளை போல், மிதமான நீளத்திற்கு வெட்டிக் கொள்வதே இந்த wavy-mid length. நீங்கள் வட்டவடிவ முகம் கொண்டிருப்பவரானால், இது உங்களுக்கு ஏற்ற கூந்தல் பாணி..! உங்களுக்கு பிடித்தால், முயற்சி செய்து பாருங்கள்..!

B. சதுர முகத்தவருக்கு..!

3. Curly Bob..!

சதுர முகம் கொண்ட பெண்கள், குழந்தைகளுக்கு வெட்டப்படுவது போல், Curly Bob கூந்தல் பாணியை முயற்சி செய்யலாம்; இது உங்களை மேலும் அழகாக்கி, புதுவிதமாய் தோன்ற செய்யும்..!

C. நீள்வட்ட முகம் கொண்டவருக்கு..!

4. நீளமான கூந்தல்..!

நீள்வட்ட முகம் கொண்ட பெண்கள், நீளமான கூந்தல் பாணியை முயற்சி செய்து பார்க்கலாம். இது அவர்களின் முடிஉதிர்வினால் ஏற்படும், மனஅழுத்தத்தைக் குறைத்து தன்னம்பிக்கையை கூட்ட உதவும்..

D. நீளமான முகம் கொண்டவருக்கு..!

5. Pixie..

நீளமான முகம் கொண்ட பெண்கள், சிறு பையன்களுக்கு வெட்டிவிடப்படுவது போன்ற, pixie அமைப்பிலான கூந்தல் பாணியை முயற்சி செய்யலாம்..! இது அவர்களுக்கு நல்ல முகத்தோற்றத்தை அளிக்கும்.

E. இதயம் அமைப்பு கொண்ட முகத்தவருக்கு..!

6. நீளமான அலைகள்..!

இதயம் போன்ற முக அமைப்பு கொண்ட பெண்கள், நீளமான அலைகள் போன்ற கூந்தல் பாணியை முயற்சி செய்து பார்க்கலாம். இது உங்களை புதுவிதமாய் காட்சியளிக்க செய்யும்..

F. வைரம் அமைப்பு கொண்ட முகத்தவருக்கு..!

7. Tousled waves..!

வைரம் போன்ற முக வடிவமைப்பு கொண்ட பெண்களே! நீங்கள் Tousled waves – என்ற கூந்தல் பாணியை முயலலாம். இது உங்களின் அழகை மிகைப்படுத்த உதவும்…!

பெண்களே! கர்ப்ப மற்றும் பிரசவ காலத்தில், நீங்கள் அடையும் பல மன மற்றும் உடல் வலிகள், உணர்வுகளுடன் உங்கள் முடிஉதிர்வு பிரச்சனையையும் சேர்த்து, உங்களை நீங்களே வருத்திக் கொள்ளாமல், மேற்கண்ட கூந்தல் பாணிகளில் உங்களுக்கு எது பொருந்துமோ, எது பிடிக்கிறதோ அதை முயன்று மனதை மகிழ்வுடன் வைத்துக் கொள்ளுங்கள்; உங்களின் மனப்போக்கு குழந்தையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறவாதீர்..! பதிப்பு பயனென்று கருதினால், தோழிகளுடன் பகிர்ந்து, அவர்களின் மனஅழுத்தம் குறைய, அவர்கள் அழகாக உதவுங்கள்..! வாழ்க வளமுடன்… 

Leave a Reply

%d bloggers like this: