varithalumbukalai-maayammai-maraiya-seiyum-thirvukal

நீங்கள் உங்கள் வரித்தழும்புகளை சரி செய்ய பல வழிகளை முயற்சித்திருப்பீர்கள். அதெற்கென செலவு செய்து விலை உயர்ந்த மருந்துகள் மற்றும் களிம்புகளை முயற்சித்திருப்பீர்கள். ஆனாலும் பலன் கிடைக்கவில்லை என நீங்கள் கவலை பட்டிருக்கலாம். இவற்றின் இரசாயனங்கள் உங்களுக்கு பக்கவிளைவை ஏற்படுத்தலாம். இப்படி விலை உயர்ந்த மருந்து மற்றும் களிம்புகளை உயயோகிப்பதை தவிர்த்து, வீட்டில் இருக்கும் சில இயற்கை பொருட்களை வைத்து வரி தழும்பை சரி செய்ய முயற்சிக்கலாம். இங்கு அந்த பொருட்கள் மற்றும் பயன்களை பார்க்கலாம்.  

1 முட்டையின் வெள்ளைக்கரு

சருமத்தின் நிறத்தை மென்மையாக்க முட்டையின் வெள்ளைக்கரு பெரிதும் உதவுகிறது. முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி விட்டு, வெள்ளைக்கருவை மென்மையாக அடித்து கொள்ளவும். இதை சுத்தமாக இருக்கும் சருமத்தில் தடவி உலரவிடவும். பின் குளிர்ந்த நீரில் கழுவி, ஈரப்பதத்தை தக்க வைக்க தேங்காய் எண்ணையை தடவி கொள்ளவும்.

2 எண்ணெய்

தோலின் ஈரப்பதத்தை தக்க வைத்து கொண்டால், தோல் நெகிழ்ச்சி அடைவதை நிலைப்படுத்தும். தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணையுடன் ஒரு சில துளி பாதம் எண்ணெய் சேர்த்து சருமத்தில் தினமும் பூசிவர, ஒரு மாதத்தில் நல்ல மாற்றத்தை காணலாம்.

3 கற்றாழை

கற்றாழை ஜெல் தோல் திசுக்களை குணப்படுத்தவும், சரிசெய்யவும் உதவுகிறது. இது திசுக்களை திரும்பவும் உருவாக்க கூடிய குணாதிசயத்தை கொண்டுள்ளதோடு, தழும்புகளை மறைய செய்ய பெரிதும் உதவுகிறது. கற்றாழையின் ஜெல்லை சருமத்தில் தடவி, 20 நிமிடத்திற்கு பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இதை தினமும் பயன்படுத்தினால், நல்ல பலன் தரும்.

4 உருளைக்கிழங்கு சாறு

உருளைக்கிழங்கு சாறு சருமத்தை மென்மையாக்கவும், சருமத்தில் உள்ள புள்ளிகள் மற்றும் தழும்புகளை மறைய செய்யவும் உதவுகிறது. உருளைகிழங்கு துண்டுகளை உங்கள் சருமத்தில் தேய்க்கவும் அல்லது உருளைக்கிழங்கு சாற்றினை தேய்க்கவும் அல்லது உருளைக்கிழங்கை துருவி உங்கள் சருமத்தின் மீது பரப்பி வைக்கவும். இதை நன்கு உலர செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

5 வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை

எலுமிச்சை சாறு இதற்கு நல்ல இயற்கை தீர்வாக அமைகிறது. மேலும் இது தழும்புகள் ஏற்படுவதை குறைகிறது. வெள்ளரிக்காயில் உள்ள இயற்கை குணாதிசியங்கள் உங்கள் சருமத்தை புத்துணர்வுடன் வைக்கிறது. இவை இரண்டும் சேர்ந்து உங்கள் தழும்புகளை சரி செய்ய பெரிதும் உதவுகின்றன. வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை சாற்றினை சம அளவு எடுத்து கலந்து, உங்கள் தோலில் தடவவும். 15 நிமிடங்களுக்கு பிறகு, மிதமான வெந்நீரில் கழுவவும்.

6 தேன்

தேனில் சரும பிரச்சனைகளை குணப்படுத்த மற்றும் சரி செய்ய கூடிய குணாதிசியங்களை கொண்டிருக்கிறது. பல நூற்றாண்டுகளாக தழும்புகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு, இது பயன்படுத்தப்படுகிறது. இயற்கை தேனை உங்கள் வரித்தழும்புகளின் மேல் தடவுங்கள். 10 நிமிடங்களுக்கு பிறகு வெந்நீரில் கழுவுங்கள். ஈரப்பதத்தை தக்க வைக்க ஆலிவ் எண்ணையை பயன்படுத்துங்கள். இதே போல் ஒரு நாள் விட்டு ஒரு நாளாக தொடர்ந்து 2-3 மாதங்களுக்கு செய்து வர மாற்றத்தை காணலாம்.

வரித்தழும்புகளை ஒரு நாள் இரவில் சரி செய்வது சாத்தியமில்லாத ஒன்று. இந்த இயற்கை வைத்திய முறைகள் சில காலம் எடுத்தாலும் எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் சரி செய்து விடும். மேலும் நீங்கள் தினமும் குறைந்தது 8 டம்ளர் தண்ணீராவது பருக வேண்டும். இது உங்கள் உடலில் ஈரப்பதத்தை தக்க வைத்து, உங்கள் தோலை ஆரோக்கியமாக உணர செய்யும். இரவில் நன்கு உறங்குவது மற்றொரு நல்ல தீர்வாகும். 

Leave a Reply

%d bloggers like this: