indiavil-kulanthaikalukku-seiyum-sadangukal-matrum-moodanampikaikal

இந்தியா பல கலாச்சாரங்கள் மற்றும் பலவிதமான நம்பிக்கைகள் நிறைந்த நிலமாக திகழ்கிறது. இவர்கள் மத்தியில் சில மூட நம்பிக்கைகளும் நிலவுகின்றன. இங்கு மட்டுமே ஆயிரக்கணக்கான மக்கள், இந்த கலாச்சார ரீதியான நம்பிக்கைகள் மற்றும் மூட நம்பிக்கைகளை பின்பற்றுகிறார்கள். இவர்கள் இவற்றை ஏன் பின்பற்றுகிறோம் என்கிற காரணம் கூட தெரியாமல், அவர்களின் குழந்தைகளையும் இதற்கு பழக்கப்படுத்திவிடுகிறார்கள். இங்கு இன்றளவிலும் இந்தியாவில் பின்பற்றப்படும் சடங்குகள் மற்றும் மூடநம்பிக்கைகளை பார்க்கலாம். 

1 குழந்தையை தூக்கி வீசுதல்

இந்த நடைமுறை பெரும்பாலும் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் 700 ஆண்டுகளாக பரவலாக பின்பற்றப்படுகிறது. அங்கு 2 வயதிற்கு குறைவான குழந்தைகளை, பக்தர்கள் 30 சதுர மீட்டர் உயரத்திலிருந்து தூக்கி எறிகிறார்கள். இதில் பயிற்சியுடையவர்கள் குழந்தைகளை துணியை வைத்து பிடித்து கொள்வார்கள். இது குழந்தைகளுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும், நீண்ட வாழ்வையும் தருவதாக நம்பப்படுகிறது.

2 மொட்டையடித்தல்

இது இந்து மதத்தில் செய்யகூடிய சடங்காகும். இதில் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் என இருவருக்கும் இந்த சடங்கு பின்பற்றப்படுகிறது. குழந்தைகளுக்கு முதலில் வளரும் முடியின் தன்மையானது, அவர்களின் முன் ஜென்மத்துடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. இது தலையில் இருக்கும் அசுத்தங்களை நீக்கி, புதிதாக முடிகளை வளர செய்வதற்காக மொட்டையடிக்கிறார்கள். இவர்கள் குழந்தையின் வயது ஒற்றைப்படையில் இருக்கும் போது மட்டுமே மொட்டையடிப்பார்கள்.

3 ஜாதகர்ம

இது குழந்தையை பூமிக்கு வரவேற்பதற்க்கு நடத்தப்படும் சடங்கு ஆகும். இது அப்பாவுக்கும், குழந்தைக்கும் இடையே அதிக பிணைப்பை உண்டாக்கும் என நம்பப்படுகிறது. நெய்யில் சிறிது தேனை கலந்து குழந்தையின் நாக்கில் வைத்துவிட்டு காதில் கடவுளின் பெயரை சொல்வார்கள். குழந்தை சுவைக்கும் முதல் சுவையே இனிப்பாய் இருந்தால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் இனிப்பான வார்த்தைகளையே பேசுவார்கள் என்பது நம்பிக்கையாகும்.

4 விருத்தசேதனம்

இது குழந்தையின் ஆண் உறுப்பின் முன் தோலை நீக்குவதாகும். இதன் மூலம் குழந்தையின் உடல் புனிதமடைவதாக நம்பப்படுகிறது. இது குழந்தை பிறந்த நாளிலிருந்து பருவ வயதை அடைவதற்குள் எப்பொழுது வேண்டுமானாலும் நிகழ்த்தப்படலாம். இது சிறுநீர் பாதை தொற்று, நுண்ணியிரிகளின் வீக்கம் போன்ற நோய்களை தடுக்கும் என்று மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

5 பெயர் சூட்டுதல்

இது சீக்கியத்தில் மிகவும் சிறப்பான சடங்காகும். குழந்தைகளை குருத்துவாராக்கு அழைத்து சென்று வேத நூல்களில் ஏதேனும் ஒரு எழுத்தை தேர்வுசெய்வார்கள். தேர்வு செய்த அந்த எழுத்தில்தான் குழந்தைக்கு பெயர் வைப்பார்கள். அதன்பின் சுற்றத்தார் அனைவருக்கும் பெயரை அறிவித்து, இனிப்புகள் வழங்கி விழாவாக கொண்டாடுவார்கள்.

Leave a Reply

%d bloggers like this: