kulanthaikalukku-erpatum-kathu-thodarpana-pirachchanikalai-kantariyum-6-valikal

குழந்தைகளுக்கு 6-24 மாத காலகட்டத்தில், காது வலி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்த காத்து வலியானது, ஏதேனும் திரவம் குழந்தையின் மத்திய காதிற்குள் தேங்க நேர்ந்தால், பாக்டிரியா அல்லது வைரஸ் தொற்று ஏற்பட்டு, குழந்தைகளுக்கு காது வலி ஏற்படுகிறது; இத்திரவ தேக்கத்தால், இருசெவியிலும் செவிப்பறையுடன் இணைந்து செயலாற்றும் யூஷ்ட்டிசியன் குழாயில் வீக்கம் ஏற்படலாம். இந்த நோய்த் தொற்றுக்களை மருத்துவரின் உதவியுடன் சரி செய்து விடலாம். சில குழந்தைகளுக்கு ஒவ்வாமை காரணமாகவும் காத்து வலி ஏற்படலாம்.  

இவ்வாறு குழந்தைகளுக்கு நிகழும் காது வலியினை கண்டறியும் சில வழிகளை இப்பதிப்பில் படித்தறியலாம்..! வாருங்கள்.. 

1. உணவு உட்கொள்ளும் திறன்..

மனிதர்களின் காது, மூக்கு, தொண்டை இவை மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையதே! காதில் வலி இருப்பின், குழந்தைகளால் சரியாக உணவினை விழுங்க இயலாது; அவர்கள் உணவு உட்கொள்ளும் விதத்தை வைத்தே காது வலி குழந்தைக்கு இருக்கிறதா இல்லையா என கண்டறியலாம்.

2. திரவம் வெளியேறுதல்..

குழந்தைகளுக்கு காதில் வலி இருப்பின், அவர்களின் காதிலிருந்து சீழ் எனும் திரவம் வெளியேறும்; இதன் மூலம் குழந்தையின் பிரச்சனையை நம்மால் அறிய இயலும்.

3. துர்நாற்றம்..!

குழந்தைக்கு காது வலி ஏற்பட்டிருந்தால், அவர்களின் காதில் இருந்து துர்நாற்றம் எழும்; இதன் மூலமும் நாம் அறியலாம்.

4. உறக்கமின்மை..

குழந்தைக்கு வலி இருந்தால், அதனால் சரியாக உறங்க முடியாது; இந்த அறிகுறி மூலமும் குழந்தையின் பிரச்சனையை நம்மால் அறிய முடியம்..

5. அசாதாரண நிலை..

குழந்தைகள் வழக்கத்திற்கு மாறாக பதற்றத்துடன் இருந்தால், அழுது கொண்டு, காதினை தொட்டு சைகைகள் செய்து கொண்டு இருந்தால், குழந்தைக்கு ஏதோ பிரச்சனை என்று நாம் அறிந்து கொள்ளலாம்.

6. வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு..!

காதில் ஏற்படும் வலியால் குழந்தைகளால் உணவினை சரியாக சவைக்க முடியாமல், அப்படியே விழுங்க நேரிடலாம். இதனால் குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்..!

Leave a Reply

%d bloggers like this: