puthiya-thaymarkalin-thukkap-pirachchanikku-5-thirvukal

புதிதாக குழந்தை பெற்றுக் கொண்ட பெண்களுக்கு உறங்குதல் என்பது சிம்ம சொப்பனமாக இருக்கும். ஏனெனில் குழந்தைகள் பிறந்த புதிதில் அதிகமாக தூங்குவார்; நேரம் பார்த்து அவர்களுக்கு பால் புகட்ட வேண்டும்; அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஒரு தாய்க்கான கடமைகளில் ஈடுபடுவதால், இளம் தாய்மார்களால் நன்றாக உறங்கி ஓய்வு பெற முடியாமல், அவர்களின் உடல்நலம் கெடுகிறது. தாய்மார்களின் தூக்கம் தொடர்பான துக்கத்தைப் போக்க சில வழிகளை இப்பதிப்பில் அளித்துள்ளோம்..! படித்துப் பயனடையவும்..  

1. குழந்தையின் உறக்க நேரம்..!

குழந்தைகள் எந்த நேரம் அழாமல் நிம்மதியாக உறங்குகின்றனர் மற்றும் அவர்களின் பால் அருந்தும் நேரம் எது நேரங்களை கணக்கிட்டுக் கொண்டு, நீங்கள் தூங்கும் நேரத்தை திட்டமிடுங்கள். இவ்வாறு செய்வதால், போதுமான அளவு ஓய்வையும், கலையாத உறக்கத்தையும் பெறலாம்.

 2. சூனியக்கார நேரம்..

குழந்தைகள் தினமும் காரணமே இல்லாமல் அழுது, உங்களை அலைக்கழிக்கும் அந்த சூனியக்கார நேரம் எது என்று தினசரி நடவடிக்கைகளின் மூலம் கணக்கிட்டு கண்டுபிடிக்க முயலுங்கள். பின் அந்த நேரத்தில் குழந்தையை அழாதவாறு விளையாட்டு காட்டியோ அல்லது அன்பால் அரவணைத்து, சமாதானப்படுத்தி உறங்கச் செய்ய தினம் ஒரு யுக்தியை கையாண்டு, அந்த நேரத்தின் சூனியத்தை வென்று காட்டுங்கள்..! உங்களுக்கான உறக்க ஓய்வினை மேற்கொள்ளுங்கள்.!

3. குழந்தையோடு உறக்கம்..

குழந்தைகள் எவ்வப்போதேல்லாம் உறங்குகின்றனரோ அப்பொழுது எல்லாம், அவர்களுடன் இணைந்து உறங்கி ஓய்வெடுங்கள். இதன் மூலம் குழந்தையையும் கவனித்தது போலாயிற்று; உங்களுக்குத் தேவையான ஓய்வும் உங்களுக்கு கிடைத்தவாறு இருக்கும்.

4. அதிக அரவணைப்பு..

நீங்கள் குழந்தையை தூங்க வைக்க அதிக அரவணைப்பினை காண்பித்தாள், இப்பழக்கம் நீங்கள் இல்லாது குழந்தையால், உறங்க இயலாது என்ற நிலையை ஏற்படுத்தும். ஆகையால், குழந்தைகளை உறங்க வைக்கையில் அதிக அரவணைப்பினை தவிர்ப்பது நலம்.

5. ஓரணியாக செயல்படுதல்..!

உங்கள் குழந்தை இரவில் விழித்தாள், நீங்கள் மட்டும் உங்கள் துக்கத்தைத் தொலைத்து, குழந்தையை கவனிக்காமல், சில சமயங்களில் கணவரின் உதவியை நாடுங்கள்; அவர் சிறிது நேரம் குழந்தையை பார்த்துக் கொள்கையில் நீங்கள் உறங்கி, உங்களுக்கான ஓய்வினை பெறுங்கள்..! இவ்வாறு ஓரணியாக செயல்படுவது உங்கள் இல்லறத்தின் இனிமையை அதிகரிக்கச் செய்து, மன நிம்மதியையும், அன்பையும் அதிகப்படுத்தும்..!

Leave a Reply

%d bloggers like this: