thampathiyarai-uruvagappatuththum-10-sirantha-uvamaikal

திருமண பந்தத்தில் இருமானதாய் இணைந்து, திருமண வாழ்வில் ஒருமானதாய் வாழும் தம்பதியரை உருவகப்படுத்தும் சிறந்த உவமைகளை இந்த பதிப்பில், கண்டு மகிழலாம்..!  

1. காதல் மழை..!

மழை பொழியும் பொழுது, உங்கள் மனதிற்கு பிடித்த துணையுடன் நனைவது என்பது ஒரு சுகமான அனுபவம். அந்த அனுபவத்தை நீங்கள் அனுபவித்தது உண்டா??

2. கட்டிக்கொள்ளுதல்..!

உங்கள் துணையினை கட்டிக் கொள்வது என்பது மனதிற்கு ஆனந்தத்தையும், நிம்மதியையும் தரும். சினிமாவில் காட்டப்படுவது போல் உங்கள் துணையை ஓடி வந்து அணைத்தது உண்டா..??

3. கட்டிக்கொண்டு உறங்குதல்..!

தினமும் இரவில் உங்கள் துணையை கட்டிக்கொண்டு உறங்குதல் என்பது உங்கள் மனதில் ஒருவித நிம்மதி கலந்த ஆனந்தத்தையும், பாதுகாப்பு உணர்வையும் அளிக்கும். நீங்கள் இப்படி உங்கள் துணையுடன் இரவுத் தூக்கத்தை கழித்ததுண்டா??

4. கடைசி வரை காதல்..!

உங்கள் துணை திருமணம் ஆவதற்கு முன் அல்லது திருமணம் நடந்த கணம் முதல் காட்டத் தொடங்கிய அன்பு மாறவில்லையா? எனில் உங்களை விட அதிர்ஷ்டசாலி எவரும் இலர்..! உங்கள் வாழ்விலும் காதலின் நிலை மாறாமல் உள்ளதா..??

5. இரவில் சினிமா..!

உங்கள் துணையோடு இணைந்து இரவில், மனத்திற்கு பிடித்த படத்தை வீட்டில் சேர்ந்து பார்ப்பதன் சுகமே சுகம்..! நீங்கள் இந்த சுகத்தை அனுபவித்தது உண்டா..?

6. அழகான காலை..

திருமண வாழ்வில் உங்களுடன் இணைந்து, வாழ்வில் எந்த கஷ்ட நஷ்டம் நேர்ந்தாலும், உங்களை விட்டு பிரியாது இருக்கும் துணையின் முகத்தில் விழித்து, காலை வணக்கம் கூறி புதிய நாளினைத் தொடங்குவதின் ஆனந்தமே ஆனந்தம். இந்த நிகழ்வு உங்கள் வாழ்வில் நடந்துள்ளதா? நடக்கிறதா?

7. இரவில் பிரிவு…

ஏதேனும் சில சமயங்களில், வேலை காரணமாக உங்களிடையே இரவில் பிரிவு ஏற்பட்டால், ஒருவரையொருவர் எண்ணிக் கொண்டே இரவைக் கழிக்கும் கணத்தின் கனமே.., தாங்க இயலாத கணம்..! இந்த மாதிரியான கனமான பாரத்தினை நீங்கள் சுமந்ததுண்டா..?

8. பாசப்பகிர்வு..!

உங்கள் துணைக்கு உணவினை ஊட்டும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சிக்கு இல்லை எல்லை. அந்த மகிழ்ச்சியை அனுபவித்தது உண்டா??

9. எல்லையில்லா கவனிப்பு..!

உங்கள் துணைக்கு உடல் நலம் சரியில்லாமல் போனால், அவர் அனுபவிக்கும் வலி உங்களில் ஏற்படுவதாய் எண்ணி வருந்தி, அவருக்கு பூரண கவனிப்பு வழங்கையில் ஏற்படும் வலி கலந்த நிம்மதியின் உணர்வே தனி..! இவ்வுணர்வை நீங்கள் அனுபவித்ததுண்டா??

10. சமையல் அரசி..!

நீங்கள் செய்த சமையலின் சுவையை உங்கள் துணை பாராட்டி, உங்களுக்கு சமையல் அரசி என்ற பட்டம் கொடுக்கையில், இந்த உலகையே வென்றதாய் உங்கள் மனம் ஆனந்தக் கூத்தாடும். நீங்கள் பெற்றுள்ளீரா இந்த பட்டத்தை..??

Leave a Reply

%d bloggers like this: