ungal-kanavarin-manathaith-thoda-7-valikal

திருமணமான புதிதில், கணவர்கள் தங்கள் மனைவியை பூஜித்து போற்றுவர்; பின் சில பல மாதங்களில் மனைவியை கண்டு கொள்வதை நிறுத்திவிடுவர். இது உங்களை புறக்கணிப்பதற்காக கணவர்கள் செய்வதில்லை, அவர்களின் வேலைப்பளுவாலும் குடும்ப நிதி நிலையை மேம்படுத்த அவர்கள் எடுக்கும் முயற்சியாலும் உங்களை கவனிக்கும் தன்மை குறையும் நிலை உருவாகிறது. 

இப்படிப்பட்ட நிலையில் உங்கள் கணவரின் கவனத்தை உங்கள் பக்கம் திருப்பி, அவரைக் கட்டுக்கடங்கா காளையாய் மாற்றும் கலையை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும் 7 வழிமுறைகளை படித்தறியுங்கள்..! 

1. ஆடைகள்..!

உங்கள் கணவரின் கவனத்தை, உங்கள் பக்கம் திருப்பும் வகையில் ஆடை ஆபரணங்கள் அணியுங்கள்..! உங்கள் கணவருக்கு பிடித்த வண்ணம் ஆடைகளை அணிந்து அவரை மகிழ்ச்சி படுத்துங்கள்..! முடிந்தால் உங்கள் கணவரின் முன் ஆடைகளை மாற்றி, அவரை கிளர்ச்சியடைய செய்யுங்கள்..!

2. கொஞ்சுதல்..!

உங்கள் கணவரிடம் பேசும் பொழுது,அவரின் எண்ணம் உங்களை சுற்றி வட்டமிடும் வகையில், கொஞ்சலாக கணவரின் மனதைக் கவரும் வகையில் பேசி, அவரை மகிழ்ச்சிப் படுத்துங்கள்..! பின் அவரை உங்களை மகிழ்ச்சிப்படுத்த அனைத்து வேலைகளையும் செய்யத் தொடங்குவார்..

3. சூழ்நிலை..!

உங்கள் கணவருடன் சண்டையிடாமல், உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவுமாறு வழிவகை செய்யவும்; என்ன நடந்தாலும் பொறுமையுடன் இருந்து கணவரை புரிந்து கொள்ள முயலுங்கள். இது உங்கள் கணவருக்கு உங்கள் மீதான காதலை அதிகரிக்கச் செய்யும்..!

4. ஓரணியாதல்..!

உங்கள் கணவர் செய்ய நினைக்கும் காரியங்களில் அவருக்கு பக்கபலமாக இருந்து, அவருக்கு உதவுங்கள்; வாழ்வில் கணவன் மனைவி இணைந்து ஓரணியாக செயல்படுதல் எப்பொழுதும் வெற்றியை ஏற்படுத்தும் மற்றும் உங்கள் கணவருக்கு உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும்.

5. கணவரை கவனித்தல்..

கணவரை கவனித்து, அவரின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அவர் சோகத்தில் இருக்கிறீரா? கவலைப்படுகிறாரா? அவரின் மனநிலை என்ன என்பதை அறிந்து செயல்படுங்கள். இது உங்களுக்கிடையே இருக்கும் புரிதலை அதிகரிக்கும்.

6. கணவரின் தலைமை..!

குடும்ப நிர்வாகத்தை கணவர் நடத்த நீங்கள் அவரை பின் தொடர்ந்தீரானால், அவர் மனம் சற்று ஆனந்தம் அடையும். பொதுவாக திருமண வாழ்க்கை என்பது கணவன் மனைவி இருவரும் இரு சக்கரங்களாக இருந்து இணைந்து வழி நடத்த வேண்டிய ஒன்று. அதில் மனைவியின் அதிகாரம் மட்டுமோ அல்லது கணவரின் அதிகாரம் மட்டுமோ இருந்தால், அது நல்லதொரு குடும்பமாகாது. ஆகையால் இருவரும் இணைந்து குடும்பத்தை நடத்த முயலுங்கள்..! 

7. மரியாதை..!

உங்கள் கணவரை நீங்கள் தனிமையில் பெயர் சொல்லி அழைத்தாலும், செல்லமாக அழைத்தாலும் அது சகஜமே! ஆனால், சபையிலோ அல்லது பொது இடத்திலோ மரியாதையை அளித்து பேசுவது, உங்கள் கணவரின் மனதை பெரிதும் கவரும்; அவரும் உங்களுக்கு மரியாதை அளித்து நடத்துவார்…!

Leave a Reply

%d bloggers like this: