kulanthaikalukkana-unavu-valikatti-sirantha-10-unavukal

குழந்தைகள் கருவில் உருவான உடனேயே, கர்ப்பிணிகள் குழந்தைக்கான உணவுகளை பார்த்து பார்த்து உட்கொள்ள துவங்குவர். பின் குழந்தைகள் மண்ணில் ஜனித்தவுடன் குழந்தைக்கு சிறந்த உணவுகளை, பொருட்களை என எல்லாமே சிறப்பாக அளிக்க வேண்டும் என்று எண்ணுவாள் தாய். ஆகையால், தாய்மார்களே உங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் தர வேண்டிய சிறந்த 10 உணவுகள் என்னென்ன என்று இந்த பதிப்பில் படித்து அறியலாம்..! 

1. பயறு தண்ணீர்..!

பயறு வகைகளை வேக வைத்த தண்ணீரை குழந்தையின் உணவில் சேர்த்து அளிக்கலாம் அல்லது இந்த பயறு தண்ணீரில் சிறிதளவு சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து, குழந்தைக்கு அளிக்கலாம்.

2. வாழைப்பழங்கள்..!

குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய ஒரு முக்கிய பழம், சிறந்த உணவு வாழைப்பழமாகும். தினம் ஒரு வாழைபழத்தை குழந்தைக்கு அளித்து வருவது நல்லது.

3. வேக வைத்த ஆப்பிள்..!

ஆப்பிள் குழந்தைகளுக்கு சக்தி அளிக்கும் ஒரு சிறந்த, வைட்டமின்கள் நிறைந்த உணவாகும். குழந்தையின் உணவு முறையில் ஆப்பிள் இடம் பெறுமாறு உணவு அட்டவணை அமைப்பது நல்லது.

4. அரிசி..!

வேகவைத்த அரிசி சாதத்தை, நெய் சேர்த்து, குழந்தைக்கு அளித்தால், குழந்தைகள் நல்ல பலம் பெறுவார்கள்.

5. இட்லி..!

வேகவைத்த இட்லியை விட சிறந்த உணவு வேறெதுவும் இல்லை. குழந்தைகளுக்கு வாரம் இருமுறையாவது இட்லியில் பால் சேர்த்து கொடுப்பது நல்லது.

6. தோசை..!

எண்ணெயில்லாமல் தோசை சுட்டு, அதில் பால் மற்றும் சிறிதளவு சர்க்கரை சேர்த்து அளிப்பது குழந்தைக்கு பிடித்த உணவாக அமையும்.

7. வறண்ட அரிசி..

அரிசி அல்லது கோதுமையினை வறண்ட நிலையில் பயன்படுத்தி, உப்புமா அல்லது போகா செய்து குழந்தைகளுக்கு பற்கள் முளைத்த நிலையில் அளிக்கலாம்.

8. பிரட்..

குழந்தைகளுக்கு கோதுமையில் செய்த பிராட்டினை அளிக்கலாம்.

9. இனிப்புகள்..!

இனிப்புகளை முற்றிலும் ஒதுக்காமல், குழந்தைகளின் உணவில் சிறிதளவேனும் சேர்த்து வருவது, அவர்களின் உடலின் சர்க்கரைத் தேவையை சரி செய்யும். அதே சமயம் அளவுக்கு மீறி இனிப்புகளை குழந்தைகள் உட்கொள்ளா வண்ணம் பார்த்துக் கொள்ளவும்..

10. காய்கறிகள்..!

குழந்தைகளுக்கு அனைத்து வித காய்கறிகளையும், உணவில் சேர்த்து பழக்க வேண்டும்; இது குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதை நிச்சயிக்கும்.

எனவே, பெற்றோர்களே! குழந்தைகளுக்கு இயற்கையில் விளைந்த இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை அளித்து பழக்குங்கள்..! இதுவே அவர்களின் ஆரோக்கியத்தை நிச்சயப்படுத்தும்..! பதிப்பு உபயோகமாக இருந்தால், மற்றோர் பயனடைய பகிரவும்..!

Leave a Reply

%d bloggers like this: