natsaththira-annaikal-ungaluku-viruppamanavar-yaar

சினிமா துறையில், தன்னந்தனியாய் நுழைந்து, சினிமாவில் தன் முத்திரையை பதித்து, சொந்த வாழ்விலும் தன் குழந்தைகள் மற்றும் கணவரின் நலம் பேணிக் காத்து, சிறந்த அன்னைகளாக சில நட்சத்திரங்கள், நட்சத்திர நடிகைகள் விளங்குகின்றனர். அவர்களை பற்றிய தகவல்களை சுருக்கமாக இந்த பதிப்பில் பார்க்கலாம்..! இவர்களில் உங்களுக்கு விருப்பமானவர் யார் என்று comment செய்யவும்..!

1. சுஷ்மிதா சென்..!

இவர் அலிஷா சென் மற்றும் ரீனி சென் என்று பெயர் கொண்டுள்ள இரண்டு பெண் குழந்தைகளை தத்து எடுத்து, பேணிக்காக்கும் சிறந்த அன்னையாவர்; தன்னந்தனி ஆளாய் இவர் தன் குழந்தைகளை வளர்த்து வருகிறார்.

2. ஸ்ரீதேவி..!

ஸ்ரீதேவி, இவர் தமிழில் பல படங்களில், முன்னனி நடிகர்களுடன் நடித்து, போனி கபூர் என்பவரை மணந்து, ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற இரு பெண்களுக்கு தாயாகி தன் கடமையை சீரும் சிறப்புமாக செய்து வருகிறார்.

3. மாதுரி தீக்ஷித்..!

இவர் ஒரு மருத்துவரை திருமணம் செய்து கொண்டு ராயன் நேனே மற்றும் ஆரின் நேனே என்ற இரு குழந்தைகளுக்கு தாயாகி, குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் சுகாதார விஷயத்தில் கண்ணும் கருத்துமாய் இருந்து வருகிறார்.

4. நீத்து சிங்..!

இவர் கபூர் காந்தன் என்பவரை மணந்து, பாலிவுட் திரையுலகிற்கு சிறந்த கபூர் நடிகரை உருவாக்கித் தந்துள்ளார். இவர் இன்றும் பாலிவுட் உலகினரால், சிறந்த அன்னையாகவும், சிறந்த தாயாகவும் போற்றப்படுகிறார்.

5. ஜெயா பச்சன்..

இவர் தன் குடும்பம் மற்றும் குழந்தைகளுக்காக, செய்து கொண்டிருந்த திரை தொழிலையே விடுத்து, முழுநேர குடும்ப ஸ்திரீ ஆகிவிட்டார். இப்பொழுது பொறுப்பான பாட்டியாகவும் இருந்து வருகிறார்.

6. ஹேம மாலினி..!

பாலிவுட்டில் மறக்க முடியாத முத்திரையை பதித்த ஹேம மாலினி, ஈஷா டியோல் மற்றும் அஹனா டியோல் என்ற இரு பெண்களுக்கு தாயாகி தன கடமையை சீரும் சிறப்புமாக செம்மையாக செய்து வருகிறார்.

7. கஜோல்..!

நடிகை கஜோல், அஜய் தேவ்கன் என்பவரை மணந்து, ந்யஷா மற்றும் யூக் தேவ்கான் என்ற இரு குழந்தைகளுக்கு தாயாகி அவர்களை ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் வளர்த்து வருகிறார்.

8. டிம்பில் கபடியா..!

இவர் தன் திரையுலக வாழ்வை விடுத்து குழந்தைகளுக்கு ஒரு சிறந்த பொறுப்பான அன்னையாக இருந்து வருகிறார். குழந்தைகளை நல்ல நிலைக்கு தன் வளர்ப்பால் உயர்த்தியுள்ளார்.

இந்த நடிகைகள் எல்லாம் தன் தொழில் துறையிலும் மைல்கல்லை பதித்து, குழந்தைகளை வளர்த்து, குடும்ப பொறுப்புகளில் பங்கெடுத்துள்ளனர். இவர்களே தங்கள் கடமையை சீரும் சிறப்புமாக செய்கையில், உங்களால் முடியாதா? உங்கள் வாழ்வில் குழந்தை குடும்பம் என்று வந்துவிட்டால், உங்கள் கனவுகளை மறக்க வேண்டும் என்பது பொருளல்ல; எல்லாவற்றையும் சமாளித்து, வாழ்வில் எதிர்நிச்சல் போடுங்கள்..! எதிர்நிச்சல் போட கற்றுக் கொள்ளுங்கள்..! வாழ்க கனவுகளுடன்..! வெல்க கனவுகளை..!! 

Leave a Reply

%d bloggers like this: