karpakalathil-erpadum-parukalai-sari-seiya-6-vittu-maruthuva-kuripukal

கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களிலோ அல்லது இரண்டாவது மூன்று மாதங்களிலோ பெரும்பாலான பெண்களுக்கு முகத்தில் பரு ஏற்படுகிறது. இது பெரும்பாலும் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அதிகரிப்பதால் ஏற்படுகிறது. நம் சருமத்தில் எண்ணெய் தன்மை மற்றும் மெழுகு படலத்தை இந்த ஹார்மோன் தோற்றுவிக்கிறது. இந்த ஹார்மோன் அதிகரிப்பாலேயே, முகத்தில் பருக்கள் ஏற்படுகின்றன. இங்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் பருக்களை சரி செய்வதற்கான 6 வீட்டு மருத்துவ முறைகளை பார்க்கலாம். 

1 ஆப்பிள் சாறு வினிகர்

இது முகத்தில் எண்ணெய் பசையை உறிஞ்சுதல் மற்றும் முகத்தில் காய்ந்திருக்கும் எண்ணெய் திட்டுகளை அகற்ற உதவுகிறது. வடிகட்டப்படாத ஆப்பிள் சாறு வினிகரை பருத்தி பஞ்சில் நனைத்து முகத்தில் தடவவும். இந்த ஆப்பிள் சாறு வினிகருடன், மூன்று பங்கு காய்ச்சப்பட்ட தண்ணீர் சேர்த்து உங்கள் முகத்தை சுத்தப்படுத்தி அழகாக்கும் டோனர் தயாரிக்கலாம்.

2 சிட்ரஸ் பழங்கள்

எலுமிச்சை அல்லது ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் ஆசிட் கொண்ட பொருட்கள், பருக்களை நீக்குவதற்கு பெரிதும் உதவுகின்றன. இவற்றை சருமத்தில் தடவும் போது, அடைத்திருக்கும் துளைகளை சரி செய்வது மற்றும் இறந்த செல்களை நீக்குவது போன்றவற்றை செய்கிறது. இவை இயற்கையாவே பாக்ட்டீரியாக்களுக்கு எதிராக செயல்படுகின்றன. இவற்றை நேரடியாக பருக்களின் மீது பயன்படுத்தினால் உடனடி தீர்வு கிடைக்கும்.

3 சமையல் சோடா

சமையல் சோடாவை தண்ணீருடன் கலந்து, பசை போல் செய்து பருக்களின் மீது தடவி உலரவிடுங்கள். இது முகத்தின் அதிக எண்ணெய் பசையை குறைத்து, சருமத்தை பழைய நிலைக்கு சரி செய்ய உதவுகிறது. சமையல் சோடாவை அதே அளவு தண்ணீருடன் சேர்த்து கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

4 தேங்காய் எண்ணெய்

நம் உடலில் எண்ணெய் பசை அதிகமாக இருக்கும் போது, பெரும்பாலும் எண்ணெய் அல்லது எண்ணெய் சார்ந்த பொருட்களை தவிர்ப்போம். ஆனால், அது தேங்காய் எண்ணெய்க்கு பொருந்தாது. இது எந்தவகை சருமத்தாலும் எளிதில் உறிஞ்சப்பட்டு விடும். மேலும் இது சருமத்தை மென்மையாக்குகிறது. இது இயற்கையாகவே பூஞ்சைகள் மற்றும் பாக்ட்டீரியாக்களுக்கு எதிராக செயல்படுகிறது. நீங்கள் படுக்கைக்கு செல்லும் முன் இதை உபயோகப்படுத்தினால், சிறந்த மாய்சரைசராக செயல்படுகிறது.

5 ஓட்ஸ் மற்றும் வெள்ளரிக்காய்

இவை இரண்டும் குளிர்ச்சியளிக்க கூடிய பொருட்களாகும். இவற்றை கலந்து மாஸ்க் போட்டால் நல்ல பலன் தரும். இது நல்ல நிறத்தை தரவும், இறந்த செல்களை நீக்கவும் உதவுகின்றன. இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து, பிரீசேரில் வைக்கவும். பின் இதை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடம் வைத்திருந்தால் மாற்றத்தை உடனே பார்க்கலாம்.

6 தேன்

தேன் சிறந்த மாய்சரைசராகவும், சருமத்தை மென்மையாக்கவும் உதவுகிறது. இது பாக்ட்டீரியங்களுக்கு எதிராகவும், கிருமிநாசினியாகவும் இருப்பதால், பல வழிகளில் உபயோகிக்க முடியும். முழுமையான சுத்திகரிப்பிற்கு பிறகு, தேனை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் காயவிடவும். பின் சூடான தண்ணீரில் முகத்தை கழுவவும். இது தோலில் உள்ள வடுக்களை மென்மையாக்கி, சருமத்திற்கு தேவையான ஊட்டத்தினை அளிக்கிறது. 

Leave a Reply

%d bloggers like this: