kulanthaikalin-vurakkam-patriya-9-vishayangal

பெற்றோர்களே! உங்கள் குழந்தைகள் சரியாக தான் உறங்குகிறார்களா? நீங்கள் சரியான உறக்க முறையை தான் உங்கள் குழந்தைகளுக்கு பழக்கப்படுத்துகிறீர்களா? இது பற்றியெல்லாம் நீங்கள் சிந்தித்ததுண்டா..?? உங்கள் குழந்தைகள் உறங்கையில் நீங்கள் சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம். அப்படி கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை பற்றி, இந்த பதிப்பில் படித்தறியவும்..!! 

1. ஒரு வயதிலிருந்து 2 வயது வரை தினமும் 10 – 13 மணி நேரம் வரை குழந்தைகள் உறங்குவார்கள். பகலில் அதிகபட்சம் 3 மணி நேரம் மற்றும் இரவில் 10 மணி நேரம் எனக் குழந்தையின் தூக்கத்தை முறைப்படுத்தலாம்.

2. புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்குச் சில தாய்மார்கள் தூக்கத்திலும் பால் பாட்டிலை வாயில் வைத்தபடியே இருக்குமாறு பழக்கப்படுத்துவார்கள். இது அவர்களின் பற்களின் ஆரோக்கியத்துக்கு எதிரானது என்பதால் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

3. குழந்தைகள் வாயால் சுவாசித்தவாறு தூங்கினால் தூக்கநிலையில் அதன் மூக்கு அழுத்தப்பட்டிருக்கிறதா அல்லது ஜலதோஷப் பிரச்னையால் மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும்.

4. ஆறு மாதத்துக்கு மேல் குழந்தையின் தொட்டிலை அதிக உயரமின்றித் தாழ்வாகக் கட்டுவது பாதுகாப்பானது. அதேபோல் தொட்டிலை ஆட்டும்போது பக்கவாட்டில், சுவரில், நாற்காலியில், மேஜையில் என இடிக்காத விசாலம் முக்கியம்.

5. ஒடுக்கமான தொட்டிலைவிட விரிதொட்டிலாகக் கட்டினால் குழந்தைக்குக் காற்றோட்டம் அதிகமாகக் கிடைக்கும்.

6. வீட்டில் மூத்த குழந்தைகள் இருந்தால், தொட்டிலில் கழுத்தைக் கொடுத்து விளையாடுவது, தூக்கம் கலைந்த தன் தம்பி/தங்கையைத் தொட்டிலிலிருந்து தூக்க முயல்வது போன்ற விபரீதங்கள் நிகழாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

7. ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தையை மெத்தையில் உறங்கவைக்கும்போது, தூக்கம் கலைந்து எழுந்ததும் உருண்டோ, கீழே இறங்கும் முயற்சியிலோ அது கட்டிலிலிருந்து தவறி விழும் ஆபத்துள்ளது. எனவே குழந்தை தூங்கும்போது பெற்றோர் வேறு வேலைகளில் இருந்தாலும் குழந்தைமீதும் ஒரு கண் அவசியம்.

8. ஒரு வயதுக்கு மேல் குழந்தையை மெத்தையில் உறங்கவைக்கப் பழக்குபவர்கள், பக்கவாட்டுத் தலையணைகள் முகம் புதையும் அளவுக்கு அதிக மிருதுவாகவோ உறுத்தும் அளவுக்குக் கடினமாகவோ இல்லாமல் நடுத்தரமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

9. உறங்கும்வரை அலைபேசி, ஐபாட்களில் கார்ட்டூன்கள், பாடல்கள்(rhyms) என ஒளிர்திரைகளைக் குழந்தைகளின் கண்களுக்குப் பழக்கி அவர்களின் பார்வை பாழாகப் பெற்றோர்களே காரணமாகாதீர்கள்.

Leave a Reply

%d bloggers like this: