penkale-mukaththil-ulla-karumpullikalai-nikka-8-valikal

பெண்களே! உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் உள்ளனவா? இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகிறீர்களா? இனி கவலை வேண்டாம். அழகு நிலையங்களுக்கு செல்லாமலே வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே முகத்தில் வரும் கரும்புள்ளிகளை நீக்க முடியும். அது எப்படி,? இந்த பதிப்பில் படித்தறிவோம் வாருங்கள்..!  

1. உருளைக்கிழங்கை நறுக்கி அதனை முகத்தில் 15 நிமிடம் தேய்த்த பின்னர் காயவைத்து, குளிர்ந்த நீரில் கழுவிடவேண்டும். இதனால் கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கிவிடும்.

2. வெந்தயக் கீரையை நன்கு அரைத்து பேஸ்ட்செய்து கொள்ளவேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி விடும்.

3. கொத்தமல்லியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பேஸ்ட்செய்து முகத்தில் தடவி காயவைத்து கழுவ வந்தால் கரும்புள்ளிகள் மறையும். இதை வாரம் இரு முறை செய்யலாம்.

4. எலுமிச்சை சாற்றுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும் இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று காணப்படும்.

5. கரும்புள்ளியை நீக்க சிறந்த ஒரு வீட்டு மருந்து என்னவென்றால் ஓட்ஸை பவுடர்செய்து, ரோஸ் வாட்டருடன் கலந்து முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் கழுவ வேண்டும்.

6. இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் சீக்கிரம்போய் விடும்.

7. தக்காளியை நன்கு பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், கரும்புள்ளியை நீக்கிவிடலாம்.

8. பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து, அதனை முகத்தில் தடவி, 30நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் போய்விடும்.

மேற்கூறிய குறிப்புகளையெல்லாம் செய்து வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீக்கி, அழகான சுத்தமான சருமத்தை பெறலாம்.

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link-ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link: http://bit.ly/2lLVpTJ

Leave a Reply

%d bloggers like this: