ஆரோக்கியத்துடன் கூடிய அழகான குழந்தை பெற…!

பெரும்பாலான தம்பதியர், தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆரோக்கியமானதாகவும் அழகுடனும் காணப்பட வேண்டும் என்று விரும்புவர். அவர்களின் எண்ணத்தைக் குறை கூற இயலாது. குழந்தைகள் எப்படி இருந்தாலும், எந்த நிறம் கொண்டிருந்தாலும் அழகே! இருப்பினும் குழந்தைகளை ஆரோக்கியம் கூடிய அழகுடன் பிரசவிக்க இதோ ஒரு எளிய வழி..! அந்த எளிய வழி என்னெவன்று இந்த பதிப்பில் படித்தறிவோம், வாருங்கள் தம்பதியர்களே! 

இளநீர் ஒன்றை சீவி அவற்றில் பார்லி மற்றும் பனங்கற்கண்டு நான்கு கட்டுகொடிஇலை (தேவைபடுபவர்கள்)இட்டு இரவு முழுவதும் பனியில் வைத்து காலையில் எடுத்து குடித்து வர உடலில் ஏற்படும் புத்துணர்ச்சி தெம்பும் மற்றும் சுவை அற்புதமாக இருக்கும். இதற்கு இணையான ஒரு இயற்கை பானம் கண்டிப்பாக இருக்க முடியாது..

இதற்கும் குழந்தை எப்படி ஆரோக்கியமாக அழகாக பிறப்பதற்கும் என்ன தொடர்பு? என்று கேட்கிறீர்களா?

மேலும் படியுங்கள்..! நீங்களே அறிவீர்..

இளநீரில் உள்ள சோடியம் பொட்டாசியம் கால்சியம் இரும்பு மற்றும் அமினோஅமிலங்கள் பனங்கற்கண்டில் உள்ள சத்துக்கள் ஒன்று சேர்ந்து பார்லியில் மிகையாக உள்ள சுண்ணாம்பு சத்தை அயனியாக மாற்றுகிறது பார்லியின் புரதத்தையும் மதிப்பு கூட்டுகிறது இவையெல்லாம் ஒன்றாக இனைந்து மதிப்புகூட்டபட்ட உணவாக ஆதாவது value added product ஆக மாற்றமடைகிறது இவற்றை எடுத்துகொள்ளும் பெண்களுக்கு தேவையான நுண்ணூட்டம் கிடைப்பதன் மூலம் இது சாத்தியமாகிறது.

கால்சியம் இரும்பு புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் உடலுக்கு கிடைத்தால், அழகும் ஆரோக்கியமும் போட்டி போட்டுக் கொண்டு குழந்தையின் உடலில் குட்டி ஏறும்.

பல்லும்,எலும்பும் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் அழகாக மற்றும் வனப்பாகவும் இருப்பார்கள், குழந்தைகள். உடலில் உள்ள நுண்ணூட்ட சத்தின் அளவை பொருத்தே ஒருவரின் புத்திக்கூர்மையும் கணக்கிடப்படுகிறது.

பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மானுடருமே ஒவ்வொரு விதத்தில் அழகானவர் தான். எனினும் நீங்கள் உருவாக்கப்போகும் குழந்தை அழகு கலந்த ஆரோக்கியத்துடன் திகழ, நீங்கள் மெனக்கெடுவதில் எந்தவித தவறும் இல்லை. குழந்தையின் நலனே! பெற்றோரின் இலட்சியம்..! 

Leave a Reply

%d bloggers like this: