தண்ணீர் பிரசவம் பற்றி தெரியுமா..?

மிகவும் இயற்கையான முறையில் உங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், தண்ணீர் பிரசவத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். மருத்துவ மனையில் குழந்தையை பிரசவிக்காமல், சிறு குளத்தில் குழந்தையை பிரசவிக்க உங்களுக்கு கொஞ்சம் பயமாக இருக்கலாம். ஆனால் இந்த தண்ணீர் பிரசவத்தில் நிறைய நன்மைகள் இருக்கின்றன. இங்கு தண்ணீர் பிரசவத்தின் நன்மைகள் மற்றும் ஆபத்துகளை பற்றி பார்க்கலாம். 

தண்ணீரில் குழந்தையை பிரசவிப்பது, தண்ணீர் பிரசவம் எனப்படுகிறது. இது பொதுவாக சிறிய நீச்சல் குளத்தில் பிரசவத்திற்கென வெதுவெதுப்பான தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும். இது உங்கள் வசதிக்கு ஏற்றபடி வீட்டிலோ அல்லது தண்ணீர் பிரசவத்திற்கென இருக்கும் நிலையங்களிலோ செய்யப்படுகிறது. இதில் உங்களுக்கு உதவ செவிலியரோ அல்லது பேறுகால உதவியாளரோ அங்கு இருப்பார்கள். பெரும்பாலான பெண்கள் மருத்துவமனை படுக்கையில் குழந்தை பெற்று கொள்வதை விட, தண்ணீர் பிரசவ முறையில் தளர்வாகவும், குறைவான வலியை உணர்வதாகவும் நம்புகிறார்கள்.

சூடு தண்ணீரானது மயக்க மருந்து போல் செயல்படுவதாகவும், அவர்களுக்கு வசதியாக இருப்பதாகவும் உணர்கிறார்கள். இது பிரசவ காலத்தில் தாயின் மன அழுத்தத்தை குறைப்பதாக நம்புகிறார்கள். மேலும் இது குழந்தைக்கான ஆபத்தையும் குறைகிறது என நம்பப்படுகிறது.

சில பெண்கள் அவர்களின் முதல் நிலை பிரசவ வலியை மட்டும் நீரில் உணர்ந்ததாக சொல்கிறார்கள். ஏனென்றால் அது வலியை குறைக்கவும், செயல்முறைகளை விரைவாக்கவும், அனஸ்தேசியாவின் பாதிப்பை தடுக்கவும் செய்கிறது. தண்ணீர் பிரசவம் பல ஆண்டுகளாக இருந்தாலும், இப்போது தான் பிரபலமாகி வருகிறது.

தண்ணீர் பிரசவத்தின் நன்மைகள்

தண்ணீரில் மிதப்பதன் காரணமாக, உங்கள் எடையை உணரமாட்டீர்கள். மேலும் நீங்கள் உங்கள் வசதிக்கு ஏற்ற படி நகரவும் அனுமதிப்பார்கள். இது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, குழந்தைக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்க செய்கிறது.

மேலும் இது மன அழுத்தம் இல்லாத சூழ்நிலையில் செய்யப்படுவதால், உங்கள் குழந்தை அதிக எண்டோர்பின்னை வெளியிடுகிறது. இது உங்களது வலியை குறைக்க உதவுகிறது.

உங்கள் பிறப்புறுப்பில் அதிக காயம் ஏற்படுவதை குறைப்பதால், அதற்கென தையல் போடும் சூழ்நிலையையும் குறைகிறது.

தண்ணீர் பிரசவத்தின் ஆபத்துகள்

இயற்கை மற்றும் பயன்மிக்க தண்ணீர் பிறப்பு என்பது, நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய அபாயங்கள் மற்றும் கவலைகளின் நியாயமான பங்கையும் கொண்டுள்ளதால் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

பிரசவத்தில் சிக்கல்கள் இருக்கும் பெண்களுக்கு இது பரிந்துரைக்க படுவதில்லை. உங்கள் குழந்தை தொப்புள் கொடியுடன் சுற்றி கொண்டிருந்தால், தண்ணீரை தொடர்பு கொள்ளும் போது மூச்சு திணறல் ஏற்படும்.

தண்ணீருக்கு அடியில் குழந்தை பிறப்பதை சரியான முறையாக அறிவியலில் நிரூபிக்க படாததால், இது சோதனைக்கான செயல் முறையாக பெரும்பாலானவர்களால் கருதப்படுகிறது.

தண்ணீரில் குழந்தை பிறப்பதால் அதிக அளவில் நோய் தொற்றுகளால் பாதிக்கப்படுவதற்கான அபாயம் உள்ளது. 

Leave a Reply

%d bloggers like this: