பெண் குழந்தைகளுக்கான அழகிய 10 பெயர்கள்

திருமண பந்தத்தில் கணவன் மனைவியாய் இணைந்த உங்கள் வாழ்வில், அனைத்து இன்பங்களையும் அள்ளி தர வந்திருக்கும் உங்கள் சின்ன தேவதையின் வரவை கண்டு இன்பத்தில் மகிழ்திருப்பீர்கள். இப்போதே அவளுக்கு அடையாளமாய் விளங்க போகும் பெயரை தேடி கொண்டிருப்பீர்கள். அதெற்கென புத்தங்கள் வாங்கி தேடலை துவங்கி இருப்பீர்கள். உங்களுக்கு உதவவே இங்கு பெண் குழந்தைகளுக்கான அழகிய 10 பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

1 யஸ்மிதா

யஸ்மிதா என்றால் பிரபலமான அல்லது புகழ்பெற்ற என்று அர்த்தம். உங்கள் குழந்தை வாழ்வில் பெற வேண்டியதை, பெயரிலே சுட்டி காட்ட உங்கள் சின்ன மலருக்கு இந்த பெயரை சூட்டுங்கள்.

2 வம்ஷிகா

வம்ஷிகா என்றால் கிருஷ்ணரின் கையில் இருக்கும் இசைக் கருவியான புல்லாங்குழல் என்று அர்த்தம். இது இனிமையான இசையை ஏற்படுத்த கூடியது. உங்கள் குழந்தையின் வாழ்வை இனிமையாக்க இந்த பெயரை தெரிவு செய்யுங்கள்.

3 நைநிஷா

நைநிஷா என்றால் வானம் என்று அர்த்தம். உங்கள் சிறிய தேவதை எல்லையற்ற அறிவுடன், வானத்தை போல் எங்கும் புகழ் பரவி பெயர் பெற்றிட இந்த பெயரை வையுங்கள்.

4 அத்விகா

அத்விகா என்றால் தனிப்பட்ட என்று அர்த்தம். எதிலும் எதற்கும் யாரையும் சார்ந்திராமல் தனித்துவமாகவும், வித்தியாசமாகவும் இருப்பதற்கு இந்த பெயர் பொருத்தமாக இருக்கும்.

5 மதுஜா

மதுஜா என்றால் தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட, இனிப்பு, தேன்கூடு, பூமி என்று அர்த்தம். உங்கள் செல்வத்தின் வாழ்கை தேன் போல் எப்போதும் தித்திப்பாய் இருக்க இந்த பெயரை தேர்ந்தெடுங்கள்.

6 கர்நிகா

கர்நிகா என்றால் தாமரை, இதயதாமரை, காதணி என்று அர்த்தம். தாமரை தண்ணீர்க்கு தகுந்தாற்போல் உயரத்தை மாற்றி கொள்ளும். உங்கள் குழந்தை மகிழ்ச்சியோடு தாமரை போல் மலர்ந்திருக்க சிறந்த பெயர் இது.

7 ஆரீத்யா

ஆரீத்யா என்றால் எதையும் செய்து முடிக்க கூடிய மற்றும் எதையும் சாதகமாக்க கூடிய என்று பொருள். உங்கள் குழந்தை எதையும் சாதகமாக்கி வெற்றி பெற இந்த பெயரை தேர்ந்தெடுங்கள்.

8 தக்ஷிண்யா (Dakshinya)

தக்ஷிண்ய என்பது சிவ பெருமானின் மனைவி பார்வதின் அவதார பெயராகும். உங்கள் குழந்தைக்கு தெய்வீக பெயராகவும், நவீன பெயராகவும் வைக்க விரும்பினால், இது உங்கள் குழந்தைக்கு பொருத்தமாக இருக்கும்.

9 ஹம்சிகா

 

ஹம்சிகா என்பது அண்ண பறவையை வாகனமாக கொண்ட கல்வி கடவுள் சரஸ்வதின் பெயர்களுள் ஒன்று. இது நவீன பெயரவும், கடவுளின் பெயரவும் விளங்குவது.

10 சைத்ரா

சைத்ரா என்றால் புதிய வெளிச்சம் என்று பொருள். உங்கள் வாழ்விற்கு புதிய வெளிச்சத்தை கொண்டு வந்த குட்டி தேவதைக்கு இந்த பெயர் பொருத்தமாக இருக்கும். 

Leave a Reply

%d bloggers like this: