கர்ப்பகாலத்தில் உங்கள் மேனியழகை மேம்படுத்த 5 வழிகள்..!

பொதுவாக, பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது, அது அவர்களின் அழகை மேம்படுத்திக் காட்டும்; ஆனால், நாட்கள் செல்ல செல்ல பிரசவத்தின் காரணமாக ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால், பெண்கள் மிக சோர்வடைந்து விடுகின்றனர்; இது அவர்களின் அழகையும் கெடுப்பதாய் எண்ணம் கொள்கின்றனர். கர்ப்பிணிகளின் இந்த பிரச்சனையைத் தீர்த்து, அவர்களின் மனஅழுத்தத்தைக் குறைக்கவே இப்பதிப்பு. படித்து பயனடையுங்கள்..!

1. தண்ணீர்! தண்ணீர்!

கர்ப்பிணிகளே! நீங்கள் எவ்வளவு அதிகம் தண்ணீர் பருகுகிறீரோ அத்துணை அளவு நன்மையை நீங்கள் பெறலாம்..! தண்ணீர் உங்கள் உடலை பொலிவுடன் வைத்திருக்க உதவும். உங்களை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் ஒரே விஷயம் நீர் தான். ஆகையால் அதிகம் தண்ணீர் குடியுங்கள்..

2. பச்சைக் காய்கறிகள்..!

உங்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தாலே, மேனியழகும் மேம்பட்டுவிடும். ஆகையால், சத்தான பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் உண்டு உடல் பொலிவை பெற முயலுங்கள்..!

3. சூரிய ஒளி..!

கர்ப்பகாலத்தில், சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களை தவிர்க்க முயலுங்கள். இதனாலும் உங்கள் மேனியழகும் ஆரோக்கியமும் பாழாகலாம். சூரியன் வெயிலைக் கொளுத்தும் சமயங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கவும்..

4. முகம் கழுவுங்கள்..

நல்ல குளிர்ந்த நீர் கொண்டு ஒரு நாளுக்கு இருமுறையேனும் முகம் கழுவுங்கள்; இது உங்கள் முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படாமல் தடுக்க உதவும்.

5. ஜங்க் மற்றும் எண்ணெய் பொருட்கள்..!

பிரசவ காலத்தில், அதிகம் உண்ணத் தோன்றும்; ஆனால், எண்ணெயில் செய்த உணவுகளையும், ஜங்க் உணவுகளையும் உண்ணாமல் தவிர்ப்பது உங்கள் உடலுக்கும், குழந்தையின் நலனுக்கும், உங்கள் மேனியழகிற்கும் மிக நல்லது; பெரும் நன்மை பயக்கும்.

மேற்கூறிய விஷயங்களை, அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த முயலுங்கள் கர்ப்பிணிகளே..! பணம் செலவழிக்கலாமலே, நல்ல ஆரோக்கியமான தேகம் மற்றும் அழகிய சருமம் பெறலாம்..! பதிப்பு பிடித்திருந்தால், மற்றோர் பயனடைய வேண்டும் என்ற எண்ணமிருந்தால், பதிப்பினை பகிரவும்..!

Leave a Reply

%d bloggers like this: