குழந்தையின் எடை அதிகரிக்கச் செய்யும், அதிசய சத்துமாவு..!

பொதுவாக, சில குழந்தைகள் அதிக உடல் எடையுடனும், சிலர் குறைவான எடையுடனும் காணப்படுவர். குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் வளர்வது, பெற்றோர்களின் கையிலேயே உள்ளது. குழந்தைகள் சில சமயங்களில், சத்தான பழங்களையோ, காய்களையோ, பாலையோ உண்ண மறுக்கலாம். அச்சமயங்களில், அவர்களுக்கு சத்தான, சத்துமாவு கஞ்சி அளிக்கலாம். அதுவும் உடல் எடையை ஏற்றும் வகையில் தயாரித்து அளிக்கலாம். இப்பதிப்பில், குழந்தைகளின் எடையை அதிகப்படுத்தும், சத்தான சுவையான சத்துமாவு எப்படி செய்வது என காணலாம்..!!

தேவையான பொருட்கள்

பாதாம் (100 கிராம்), முந்திரி (100 கிராம்), வாதுமை கொட்டை (100 கிராம்), பிஸ்தா (100 கிராம்), ஏலக்காய் (10 கிராம்), உளுந்து (200 கிராம்), பாசிப்பயறு (150 கிராம்), ஓட்ஸ் (150 கிராம்), பார்லி (150 கிராம்), எள் (150 கிராம்), விரல் தினைமாவு (500 கிராம்), சோயா மாவு (200 கிராம்)

செய்முறை

உளுந்து, பாசிப்பயறு, பார்லி, ஓட்ஸ் என அனைத்தையும் தனித்தனியாக வறுத்து, ஆற வைக்கவும். மற்ற அனைத்து பருப்பு வகைகளையும் வறண்ட நிலையில் வறுத்துக் கொள்ளவும்; பொன்னிறம் வரும் வரையில் வறுக்கவும்; 3-4 நிமிடங்களுக்கு வறுக்கவும்.

உளுந்து, பாசிப்பயறு, பார்லி, ஓட்ஸ், எள், பருப்புகள், விரல் தினைமாவு, சோயா மாவு இவற்றை நன்கு பொடியாகுமாறு தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும்; 5-6 நொடிகள் அரைக்கவும். பின் அனைத்தையும் கலக்கவும். சரியாக அரைபடாத பட்சத்தில், நன்கு பொடியாகும் வரை அரைக்கவும்.

அவ்வளவு தான் சத்துமாவு தயார்! குழந்தைகளுக்கு இம்மாவினை பாலில் கலந்து, தினமும் கொடுக்கவும். இந்த சத்துமாவினை தினமும் குழந்தைகளின் உணவில் சேர்க்க அவர்களுக்கு பிடித்த வகையில், கொடுக்கவும். அதாவது, சிறிது சாக்லேட்டை பாலுடன் சேர்த்தோ அல்லது தேனைக் கலந்தோ குழந்தைகளுக்கு கொடுக்கவும். இது குழந்தைகளிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். குழந்தை போதுமான எடை பெரும் வரை இந்த சத்துமாவு கஞ்சியை அளிக்கவும்.

Leave a Reply

%d bloggers like this: