நம் நாட்டில் பெரும்பாலான பெண்கள், குழந்தையின்மையால் வாடும் போது அவர்களை மேலும் துன்புறுத்த பயன்படுத்தப்படும் சொல்லே ‘மலடி’. குழந்தையின்மை என்பதற்கு பெண்கள் மட்டுமே கரணம் அல்ல என்பதை மக்கள் உணர வேண்டும். ஆண்களுக்கு இருக்கும் குறைகள் காரணமாகவும் குழந்தையின்மை ஏற்படலாம். ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும், குழந்தையின்மைக்காக ஒரு மருத்துவரை ஆலோசிப்பதற்கு முன்பாக நீங்களே சரி செய்து கொள்ள வேண்டிய சில விஷயங்களை பற்றி இந்த பதிப்பில் படித்தறியலாம் வாருங்கள்..!
உணவு
நல்ல போஷாக்கான உணவுகளை உட்கொள்வது அவசியம். நல்ல சத்தான உணவுகளை உட்கொண்டாலே கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது.
உடல் எடை
உடல் எடையை சீராக வைத்துக் கொள்வது அவசியம். குறிப்பாகப் பெண்கள் எடை அதிகமாகவும் குறைவாகவும் இருக்கக் கூடாது சரியான எடையிலிருந்தாலே இயல்பாக கருத்தரிக்க முடியும்.
உடற்பயிற்சி
முறையான உடற்பயிற்சி கருத்தரிக்கும் வாய்ப்பினை அதிகரிக்கும். ஆணுக்கும், பெண்ணுக்கும் உடற்பயிற்சி மிக முக்கியம்.
புகைப்பழக்கம்
புகை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். ஆண்களானாலும் பெண்களானாலும் புகை இனப்பெருக்க உறுப்புகளை பாதிக்கும். ஆண்களில் விந்தணு தரத்தை புகை குறைத்திடும்.
குடிப்பழக்கம்
போதைப் பொருட்களின் உபயோகம் விந்தணுக்களையும் முட்டை உற்பத்தியையும் வெகுவாக பாதிக்கும். குடி/போதை பழக்கத்தை முற்றிலும் தவிர்த்தல் அவசியம்.
பிற மருந்துகள்
ஆண்களில் பிற மருந்தகளின் உபயோகமும் வெகுவாக விந்தணுவின் தன்மையை பாதிக்கும். அல்சர் (வயிற்றுப் புண்) உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றிக்கான பிற மருந்துகளின் உபயோகமும் தவிர்க்கப்பட வேண்டும்.
உறவு
கருவுற வாய்ப்புள்ள காலங்களில் வாரத்திற்கு ஒரு முறை உறவு கொண்டால் போதாது குறைந்தது 3 முறையாவது உறவு வைத்துக் கொள்வது அவசியம்.
கருவுறும் காலம்
மிருகங்களுக்கு இயல்பாகவே எப்பொழுது கருவுற வாய்ப்புள்ளதோ அப்பொழுதே உறவு கொள்ள விருப்பம் ஏற்படுகின்றது. மாதவிடாய் போன்ற இரத்தம் போக்கும் ஏற்படுகின்றது. ஆனால், மனிதர்களில் அவ்வாறு அல்ல. எல்லா நாட்களிலும் உறவு கொண்டு முட்டை வெடிக்கும் சமயத்தில் உறவு கொள்ளாது போனால் வீணாகப் போய் விடும். எனவே, முட்டை வெடித்து சிதறும் சமயம் (இரு மாதவிடாய்களுக்கும் சுமாரான நடுப்பகுதி) உறவு கொள்வது அவசியம்.
உறவு முறை
எவ்வாறு வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம். ஆனால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முறை ஆண் மேல் புறமும் பெண் கீழ்ப்புறமும் இருந்தவாறு உறவு கொள்வதேயாகும். உறவு முடிந்ததும் உடன் எழுந்து விடக்கூடாது. குறைந்தது 5 நிமிடம் பெண்கள் படுத்திருக்க வேண்டும்.
இந்த 9 முறைகளை மேற்கொண்டால், மலடி என்னும் சொல்லை இல்லாமலே செய்யலாம்..! மேலும் குழந்தை செல்வம்