உங்கள் உடலின் இரும்புச் சத்தினை அதிகரிக்க உதவும் 5 பழங்கள்..!

நம்மில் பெரும்பாலானோர், நம் உடலுக்கு தேவையான சத்துக்களை சரியாக எடுத்துக் கொள்கிறோமா என்றால், கண்டிப்பாக இல்லை. இந்த அவசர உலகில், வேலை செய்ய வேண்டும், அதை சரியாக முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதே தவிர, நாம் நலமாக உள்ளோமா? நம் உடலுக்கு தேவையான சத்துக்களை சரியாக பெறுகிறோமா என்று சிந்தித்து பார்க்கிறோமா என்றால், நிச்சயம் இல்லை. 

இந்த பதிப்பில், நம் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தினை அளிக்கும் சில வகை பழங்கள் எவை என்று படித்து அறியலாம்..!

1. பிக்ஸ்..!

பிக் பழங்கள் அதிக இரும்புச் சத்து கொண்டவை. அவற்றை நேரடியாகவோ அல்லது ஏதேனும் உணவிலோ, கார்ன் பிளக்சிலோ, கேக், ஐஸ் கிரீம் போன்றவற்றுடனோ சேர்த்து உண்டால் சுவையாக இருக்கும் மற்றும் உடலுக்கு தேவையான இரும்பு சத்தினையும் வழங்கும்.

2. பேரீட்சை..

பேரீச்சம் பழத்தில் இரும்புச் சத்து மிகுந்து காணப்படுகிறது. 250கி பேரீச்சையில் 3மிகி இரும்பு சத்து உள்ளது. பேரீச்சையை நாம் பாயசத்தில், உணவில், அல்வாவில், பாலில் என எல்லாவற்றுடனும் சேர்த்து உட்கொள்ளலாம்.

3. உலர் திராட்சைகள்..!

உலர் திராட்சைகளில், ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அவற்றில் இரும்புச்சத்தும் ஒன்று. இந்த திராட்சைகளை தினம் உட்கொள்வது, உடலுக்கு தேவையான இரும்புச்சத்தினை அளிப்பதுடன், ஹீமோகுளோபின்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இரத்தத்தினை பெருக்கவும் இது உதவுகிறது.

4. ஆப்ரிகாட்..!

ஆப்ரிகாட் பழத்தில், வைட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், இரும்பு, புரதம் என பலவகை சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த பழங்களை கோடை காலத்தில் எளிதில் பெறலாம். இவற்றை அடிக்கடி உண்பது, உடலின் இரும்புச் சத்தினை பலப்படுத்த உதவும்.

5. மாதுளம் பழம்..!

மாதுளம் பழம் மிகுந்த இரும்புச் சத்து கொண்டது. இதை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தினம் உணவில் சேர்த்துக் கொள்வது, அவர்களின் உடலின் நலனை மேம்படுத்தி, அதிக இரும்புச் சத்தினை உடலுக்கு அளித்து, பலமாக்கும்.

நண்பர்களே! இந்த 5 பழங்கள் மட்டுமல்ல, இது போல் இயற்கை அளித்த அத்தனை பழங்கள் மற்றும் காய்கறிகளும் ஏரளமான சத்துக்களை வாரி வழங்குவதாய் உள்ளன. அனைத்தையும் சாப்பிட்டு சக்தி பெற்று வாழுங்கள்..! வாழ்க வளமுடன்..!

Leave a Reply

%d bloggers like this: