கருத்தரிக்கும் அத்துணை பெண்களுக்கு தன் குழந்தை கலையாமல் கருவாக உருவாகி, அவர்தம் கைகளில் தவழ வேண்டும் என்பதே பெரிய கனவாக இருக்கும். ஆனால், ஏதோ சில காரணிகளால் உருவான கரு, கலந்து போகையில் பெண்கள் அடையும் வேதனைக்கு அளவே இல்லை எனலாம். இந்த கருக்கலைப்பு ஏன் நிகழ்கிறது? அதை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து இப்பதிப்பில் படித்தறியலாம்…!
குரோமோசோம்களின் அசாதாரண நிலை..!
மனிதர்களின் உடலில் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. தந்தையிடமிருந்து பெற்ற 23 குரோமோசோம்களும், தாயிடமிருந்து பெற்ற 23 குரோமோசோம்களும் இணைந்து 23 ஜோடியாக மாறுகின்றன. இதில் ஏதேனும் மாற்றங்களோ அல்லது குறைபாடுகளோ ஏற்பட்டால், கருக்கலைப்பு ஏற்படலாம்.
செய்ய வேண்டியது..
இம்மாதிரியான நிலை ஏற்பட்டால், மீண்டும் கருத்தரிக்க முயற்சிக்கவும். இந்த காரணத்தால் கருக்கலைப்பு நிகழ்வது மிக அரிதே! ஒருமுறை இதனால், கருக்கலைப்பு நிகழ்ந்தாலும் மறுமுறை நிகழ இது காரணமாகாது. அப்படி நிகழ்ந்தால், மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
கர்ப்பப்பையின் வடிவம்..!
கர்ப்பப் பையின் வடிவம், சரியானதாக இல்லாமலோ அல்லது குறைபாட்டுடன் இருந்தால், அது கருக்கலைப்புக்கு காரணமாகலாம்.
செய்ய வேண்டியது..
கருக்கலைப்பு, இந்த கர்ப்பப் பையின் வடிவத்தால் நிகழ்ந்தால், நீங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து இப்பிரச்சனைக்கான சரியான தீர்வினை பெறலாம்.
கருப்பையின் கழுத்து..!
உங்கள் கருப்பையின் கழுத்துப்பகுதி பலவீனமானதாக இருந்தால், அது கருக்கலைப்பிற்கு காரணமாகலாம்.
செய்ய வேண்டியது..
இந்த பிரச்சனையால், உங்களுக்கு கருக்கலைப்பு நிகழ்ந்தால், நீங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து அதற்கான சரியான சிகிச்சையை பெறவும்.
பாலிசிஸ்டிக் ஓவரி கட்டிகள் (PCOS)
இவ்வித கட்டிகள் பெண்ணின் கருப்பையில், ஆணின் ஹார்மோன்களால் ஏற்படுகின்றன; பெண்களின் கருப்பையில், ஆண்களில் சுரக்கும் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோனால் கட்டிகள் ஏற்படலாம்.
செய்ய வேண்டியது..
இந்த கட்டிகளை மருத்துவ ஆலோசனையுடன் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.
தைராய்டு..!
உங்களுக்கு தைராய்டு பிரச்சனை இருந்தால், அது கருக்கலைப்பிற்கு காரணமாக அமையலாம்.
செய்ய வேண்டியது..
சரியான மருந்து மாத்திரைகள் உட்கொண்டு தைராய்டு பிரச்சனைக்கு தீர்வு காண்பது மற்றும் மருத்துவ ஆலோசனையுடன் இதற்கு தீர்வு காண முயற்சி செய்யலாம்.
வாழ்க்கை முறை..!
நீங்கள் மது மற்றும் குடி பழக்கங்கள் உள்ளவராக இருந்தால், அது உங்கள் கருக்கலைப்பிற்கு காரணமாக இருக்கலாம்.
செய்ய வேண்டியது..
நீங்கள் மேற்கூறிய பழக்கங்களிலிருந்து விடுபட்டு, ஆரோக்கிய வாழ்வு மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும். குழந்தை தரித்து, பிறக்கும் வரையிலாவது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். இப்பழக்கங்களில் இருந்து மீள மருத்துவர் மற்றும் மறுவாழ்வு மையங்களின் உதவியை நாடலாம்.
இந்த பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால், கருக்கலைப்பு நிகழலாம்; ஆகையால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடும் வழியினை அறிந்து, கருத்தரித்து, குழந்தைகளை பெற்று, வளமுடன் வாழவும்..!