கர்ப்பிணிகளுக்கான 3 மூலிகைக் குறிப்புகள்…!

பெண்களே! நீங்கள் கர்ப்பம் தரித்த நாள் முதல் உங்கள் உடலில் பல புதிய ஹார்மோன்கள் சுரக்கத் தொடங்குகின்றன. இந்த  ஹார்மோன்களால், உங்கள் உடலில் பல வளர்சிதை மாற்றங்கள் நிகழ்கின்றன; அம்மாற்றங்களில் உங்கள் உடலின் வெளிப்புற பாதுகாவலனான தோலில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்களால் உங்கள் அழகு குறைந்து காணப்படுவதாய் தோன்றலாம். குறைந்த உங்கள் அழகினை எந்தவித பக்கவிளைவும் இல்லாமல் மீட்க்கொணர இந்த பதிப்பில் சொல்லப்பட்டிருக்கும் 3 இயற்கை மூலிகைகள் உதவும். வாருங்கள் அவை என்னவென்று பார்க்கலாம்..

1. சீசேம் எண்ணெய் (Sesame oil)

இந்த எண்ணெயை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் அழகான சருமத்தை பெறலாம். சீசேம் எண்ணெயில் வைட்டமின் இ மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை சருமத்தை மிருதுவாக்கி, அழகான தோற்றப்பொலிவினை அளிக்கின்றன; மேலும் என்றும் இளமையான தோற்றம் கொள்ள இந்த எண்ணெய் பெரிதும் உதவுகிறது.

2. கற்றாழை..

கற்றாழையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன; அவற்றை தற்கால மருத்துவமும் மருத்துவர்களும் உண்மையென ஒப்புக்கொண்டுள்ளனர். இதில் வைட்டமின் ஏ மற்றும் சி போன்றவை இடம் பெற்றுள்ளன. இவை சருமத்திற்கு புதுப்பொலிவு அளித்து, தோலில் உள்ள செல்களை புதுப்பிக்கவும் உதவுகின்றன.

3. Winter Cherry ( அஸ்வகந்தா)

அஸ்வகந்தா என்ற இயற்கை மூலிகை பழங்காலத்திலிருந்து அழகு மற்றும் வலி நிவாரணியாக பயன்பட்டு வந்திருக்கிறது. இது சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்கி உடலிற்கு புத்துணர்ச்சியை வழங்கி, நீங்கள் மாசற்ற அழகு பெற உதவுகிறது.

இந்த 3 மூலிகை மருந்துகளுமே இயற்கை அழகினை அள்ளிக் கொடுக்கும் சிறந்த மருந்துகள்..! பயன்படுத்தி வளம் பெற்று வாழுங்கள்..!

Leave a Reply

%d bloggers like this: