கர்ப்ப காலம்: உறங்கும் முறைகள்..!

கர்ப்பகாலம் தொடங்கிய நாள் முதல், பெண்களின் இயல்பு வாழ்வில் பல மாற்றங்கள் உண்டாகத் தொடங்கும். இம்மாற்றங்களை ஒரு பெண் ஏற்றுக் கொண்டு, தன் இயல்பு வாழ்வை மாற்றுவது என்பது கடினமான காரியமே! உணவு முறைகளில் தொடங்கி, உறங்கும் முறைகள் வரை அனைத்திலும் மாற்றங்களை காண்கிறாள் கர்ப்பிணி. 

கர்ப்பிணிகளின் அன்றாடம் செயல்களில், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சாப்பிடுவது, உறங்குவது என பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இப்பதிப்பில், கர்ப்பகால உறக்க முறைகள் பற்றி காணலாம்…!

ஹார்மோன்கள்-வழக்கமான குற்றவாளிகள்..!!

கடவுள் பெண்களை படைக்கையில், அவர்கள் பல மாற்றங்களுக்கு ஆளாகி, பல கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து, சோதனைகளை சந்தித்து, அவற்றை சாதனையாகும் சக்தியை அளித்திருக்கிறான் போலும். ஏனெனில், பெண்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் தான், அவளின் குணத்தை, அவளின் நலத்தை, உடற்செயலிய மாற்றத்தை என அனைத்தையும் தீர்மானிக்கின்றன.

பிரசவ காலத்தில், பெண்களின் உடலில் பல ஹார்மோன்கள் சுரக்கின்றன. அவை: ப்ரோஜெஸ்டிரான், ஈஸ்ட்ரோஜன், ப்ரோலேக்டின், ஆக்சிடோசின், மெலடோனின். இவை பெண்களின் உடலில், பல வேதியியல் மற்றும் உடலியல் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

ப்ரோஜெஸ்டிரான்

இது அதிகமானால், பெண்களின் உடலில், அடிக்கடி சிறுநீர் கழித்தல், உறக்கமின்மை, நெஞ்செரிச்சல் போன்ற உணர்வுகள் மேலுழும்பி, அவர்களை பாடாய்ப்படுத்துகிறது. இது சரியான அளவில் இருந்தால் மட்டுமே பெண்களால், கர்ப்ப காலத்தில் சரியாக உறங்க முடியும்.

ஈஸ்ட்ரோஜன்

இது, பெண்களில் மூக்கடைப்பு, இரத்தக்குழாயினை பெரிதாக்குதல் மற்றும் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இது உறங்கும் முறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

ஆக்சிடோசின், ப்ரோலேக்டின் மற்றும் மெலடோனின்

மெலடோனின் இது மார்பகங்களை பெரிதாக்குதலிலும், ப்ரோலேக்டின் பால் சுரப்பிற்கும், ஆக்சிடோசின் சுருக்கங்களை ஏற்படுத்துவதிலும் ஈடுபடுகின்றன. இவைகளும் பெண்ணின் உறங்கும் முறைகளில், மாற்றத்தை விளைவிக்கின்றன.

பிரசவத்தின் ஒவ்வொரு 3 மாதகால உறக்க முறைகள்..!
முதல் 3 மாதகாலம்..!!

கர்ப்பத்தின் முதல் 12 வார காலங்களில், பெண்களில், பகல் தூக்கம் மிகுந்தும், இரவுத் தூக்கம் குன்றியும் காணப்படும்; இரவில் கண் விழிப்பது அதிகமாய் இருக்கும். இக்கால கட்டத்தில், அடிக்கடி சிறுநீர் கழித்தல், உறக்கமின்மை, முதுகு வலித்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

இரண்டாவது 3 மாதகாலம்..!!

கர்ப்பத்தின் 13- 28 வாரகாலம், சற்று இயல்பு உறக்க நிலையில் காணப்படும்; இரவில் கண் விழிப்பது வெகுவாக குறைந்திருக்கும். இக்கால கட்டத்தில், மூக்கடைப்பு, நெஞ்செரிச்சல், குறட்டை, வயிற்றுவலி போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.

மூன்றாவது 3 மாதகாலம்..!!

கர்ப்பத்தின் 29 வாரம், மீண்டும் பழைய நிலை, அதாவது., பகல் தூக்கம் மிகுந்தும், இரவுத் தூக்கம் குன்றியும் காணப்படும்; இரவில் கண் விழிப்பது அதிகமாய் இருக்கும். இக்கால கட்டத்தில், அடிக்கடி சிறுநீர் கழித்தல், உறக்கமின்மை, நெஞ்செரிச்சல், கால் வலி, பிரமைகள், கனவுகள், மூட்டுவலி போன்றவை ஏற்படலாம்.

இத்தகைய வலிகளையும், உணர்வுகளையும் கடந்த பின்னரே, பெண்கள் ஒரு புத்துயிரை புவிக்கு கொண்டு வருகின்றனர். போற்றுவோம் பெண்மையை! பெண்களை!

Leave a Reply

%d bloggers like this: