சிசேரியன் பற்றி: முற்றிலும் நீங்கள் அறியாதவை..!

பிரசவம் என்பது, முற்றிலும் புத்தம் புதிய உயிரை இப்புவிக்கு கொண்டுவரும் ஒரு அதிசயமான விஷயம். இப்பிரசவம் இயற்கையான முறையிலேயே பெண்களுக்கு நடந்து கொண்டிருந்தது; நடக்கிறது; நடக்கும். ஆனால், தற்காலத்தில் பெண்கள் சுகப்பிரசவம் என்றால், மிகுந்த வலி இருக்கும் என்ற தவறான கருத்தை எண்ணத்தில் விதைத்தமையால், தாங்களே சுயமாக முன்வந்து அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். இது மிகவும் தவறான கண்ணோட்டம்; தவறான நடவடிக்கை.

எந்த வழியில் பிரசவம் நிகழ்ந்தாலும் வலி கண்டிப்பாக இருக்கும்; ஏனெனில், ஒரு புத்துயிரை பூமிக்கு கொண்டுவருவது சாதரண விஷயமல்ல; அது ஒரு அதிசயம். அந்த அதிசயத்தை நிகழ்த்த சில வலிகளைத் தாங்கித்தான் ஆகவேண்டும். உண்மையில், சுகப்பிரசவம் நிகழும் போது, ஏற்படும் வலி மிகக் குறைவே! சில நாட்களில் மிஞ்சிப் போனால், ஒரு மாதத்தில் குணமாகி, இயல்பு நிலைக்குத் திரும்பிவிடலாம்.

ஆனால், சிசேரியன் செய்து கொண்டால், நீங்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப பல மாதங்கள் ஆகலாம். ஏனெனில், அறுவை சிகிச்சை நிகழும் போது, நீங்கள் பலவித மயக்க மருந்துகள் அளிக்கப்பட்டு, பலவித ஊசிகள் செலுத்தப்பட்டு, உங்கள் உடல் பாகங்கள் அறுக்கப்பட்டு, குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருக்கும் நிலையில் இருப்பர்; இந்த இத்தனை செயல்களின் காயங்களும், நீங்கள் உட்கொண்ட மருந்து மாத்திரைகளின் உங்களை விரைவில், இயல்பு நிலைக்குத் திரும்ப விடாது.

ஆகையால், சிசேரியன் பற்றி நீங்கள் முற்றிலும் அறியாத சில விஷயங்களை இப்பதிப்பில் காணலாம்..!

1. பல வாரங்கள்..

சுகப்பிரசவம் நிகழ்ந்தால், பெரும்பாலும் அடுத்த நாள் அல்லது இரண்டு/மூன்று நாட்களில், நீங்கள் எழுந்து நடக்கவே ஆரம்பித்துவிடலாம்; எளிய வழக்கமான வேலைகளையும் மேற்கொள்ளலாம். ஆனால், சிசேரியன் மேற்கொண்டால் பல வாரங்களுக்கு படுக்கையிலேயே இருந்து ஓய்வு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனை பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

2. தாய்ப்பால் சுரப்பு..!

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியது தாயின் தலையாய கடமை ஆகும். ஆனால், சிசேரியன் மேற்கொள்ளும் பொழுது, அத்தகைய தலையாய கடமையிலிருந்து கூட தவறிடும் நிலை ஏற்படுகிறது. ஆம் பெண்களே! சிசேரியன் சிகிச்சை மேற்கொள்ளும் பெண்களுக்கு, தாய்ப்பால் சுரப்பு தாமதப்படுகிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3. காயம் ஆறுதல்..!

சிசேரியன் பிரசவம் மேற்கொண்டவர்களுக்கு, பிரசவத்திற்கு பின் ஏற்படும் உதிரப்போக்கின் காலம் அதிகமாக காணப்படும்; அதாவது 1.5 மாதங்களுக்கு இரத்தக்கசிவு நிகழும். மேலும் அறுவை சிகிச்சையின் மூலம் ஏற்பட்ட காயங்கள் மறைய அதிக காலம் ஆகலாம். சிலருக்கு, சிகிச்சையினால் ஏற்பட்ட அரிப்பு 3.5 வருடங்கள் வரை நீடிக்கலாம். இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா? யோசியுங்கள் பெண்களே!

4. மலச்சிக்கல்..

பெரும்பாலும் சிசேரியன் செய்து கொண்ட பெண்களுக்கு மலச்சிக்கல் என்பது பெரும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. இது தொடர்பாக நீங்கள் அதிக பிரச்சனைகளை எதிர்கொண்டால், உங்கள் மருத்துவரிடம் உடனே சென்று கலந்தாலோசிக்கவும்.

5. குனிய முடியாது..! நிமிர முடியாது!

பொதுவாகவே, இது அனைவரும் அறிந்த ஒன்றே! அறுவை சிகிச்சை நிகழ்ந்திருந்தால், நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்; குனிந்து, நிமிர்ந்து வேலை செய்யக் கூடாது. இது சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன் இரண்டிற்கும் பொருந்தும். ஆனால், சிசேரியன் செய்துகொள்ளும் பெண்களுக்கு காயம் ஆற, இயல்பு நிலைக்குத் திரும்ப என அனைத்து விஷயங்களுக்கும் அதிக காலம் எடுக்கும். ஆகையால், சிசேரியன் செய்து கொள்ளும் பெண்களால், குனிந்து, நிமிர்ந்து வேலை செய்ய இயலாத நிலை ஏற்படும்.

பெரும்பாலுமான பெண்கள் பிரசவம் நிகழும் அந்த ஒரு நிமிட வலியிலிருந்து விடுபட எண்ணி, வாழ்க்கை முழுதும் வலி அனுபவிக்கும் நிலைக்கு தயாராகின்றனர்; அவர்களை அறியாமலே! உண்மையை உணராமலே!! 

Leave a Reply

%d bloggers like this: