தாய்ப்பால் புகட்டலால், முலைக்காம்புகளில் புண் ஏற்படுவதைத் தவிர்க்க 5 வழிகள்..!

புதிதாய் தாயாய் மாறிய இளம் தாய்மார்கள் குழந்தைகளுக்கு அதிக நேரம் மற்றும் அதிக முறை பால் கொடுக்க வேண்டியிருக்கும். இவ்வாறு பால் புகட்டுவதால், தாயின் மார்பகங்களில், முலைக்காம்புகளில் புண்கள், விரிசல்கள், பூஞ்சைத்தொற்றுகள் போன்றவை ஏற்பட்டு தாயின் உடல் நலம் கெடுகிறது. சில சமயங்களில், மார்பகங்களில் வீக்கங்களும் தடங்களும் ஏற்படுகின்றன. இந்த நோய்த்தொற்றுகளையும், பிரச்சனைகளையும் கையாள, இளம் தாய்மார்களுக்கு 5 எளிய வழிகள் இப்பதிப்பில் தரப்பட்டுள்ளன. படித்துப் பயனடையவும்..!

1. பூட்டுதல்..

தாய்ப்பால் புகட்டையில் குழந்தையின் வாயில், மார்பகத்தை பொருத்த நீங்கள் முயற்சிப்பதால், புண்களும் கீறல்களும் ஏற்படுகின்றன. அதை விடுத்து, குழந்தையின் போக்கில் சென்று பால் புகட்டுங்கள். குழந்தைக்குத் தோதான முறையில் குழந்தையே மார்பகத்திற்கு ஏற்றாற் போல், பால் குடிக்க முயலும்; அதை கவனித்து, சரியான முறையில் மார்பகத்தை குழந்தையின் வாயில் பூட்டிக்கொள்ளுமாறு செயல்பட்டாலே எந்த பிரச்சனைகளும் ஏற்படாதிருக்கும்.

2. குழந்தையின் வாய்..

பிறந்த குழந்தைகள் பால் மற்றும் அதிக மருந்து மாத்திரைகள் உட்கொள்வதால், அவர்களின் வாயில் பூஞ்சைத்தொற்று ஏற்பட்டிருக்கலாம். பால் குடிக்கையில் உங்களுக்கும் பரவும் வாய்ப்பு உள்ளது. ஆகையால், மருத்துவரிடம் குழந்தையினை காட்டி பரிசோதித்து விடுவது நன்மை பயக்கும்.

3. நீரின் அளவு..

குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கையில், தாய்மார்களின் உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படாதிருக்க வேண்டும். அப்படி ஏற்பட்டால், அதுவும் இத்தகைய பிரச்சனைகள் ஏற்பட காரணமாகி விடும். ஆகையால், இச்சமயங்களில், அதிக நீர் பருகுவது நல்லது.

4. காற்றோட்டம்..

குழந்தை பால் குடித்த பின் உடனே, மார்பகங்களை மறைக்காமல், பால் குடித்த ஈரம் மற்றும் தடங்கள், ஆறும் வரை மார்பகங்களை காற்றோட்டமான சூழலில் வைப்பது நல்லது. இம்முறை தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கும்.

5. ஆடைகள்..

சில சமயங்களில், நீங்கள் அணியும் ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் வீக்கம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்துவனவாக அமைகின்றன. இவற்றால், மார்பகங்களிலும், முலைக்காம்புகளிலும் பிரச்சனைகள் ஏற்படலாம். ஆகையால், இவ்விஷயங்களில் கவனம் செலுத்தி, அவற்றை தவிர்ப்பது நல்லது. 

Leave a Reply

%d bloggers like this: