பிறந்த குழந்தையின் அழுகையை நிறுத்த 5 வழிகள்..!

ஒவ்வொரு தாயும் தன் குழந்தை எப்போதும் புன்னகைக்க வேண்டும் என விரும்புகிறாள். முழுதாய் வளர்ந்த குழந்தையாய் இருந்தாலும் சரி, இப்போது பிறந்த குழந்தையாய் இருந்தாலும் சரி அவர்கள் கண்ணீர் சிந்துவதை விரும்பவில்லை. வளர்த்த குழந்தைகள் பெரும்பாலும் அழுவதில்லை, ஆனால் பிறந்த குழந்தைகள் காரணங்களுடனும், காரணம் இல்லாமலும் அழுகிறார்கள். புதிதாக அம்மாவானவர்களுக்கு அழும் குழந்தையை சாமாதானப்படுத்துவது கடினமான ஒன்றாக இருக்கும். குழந்தை தொடர்ந்து அழும் போது அம்மாக்கள் மிகவும் கவலையடைவார்கள். அவர்களுக்கு உதவவே இங்கு பிறந்த குழந்தையின் அழுகையை நிறுத்த உதவும் 5 வழிகளை பார்க்கலாம். 

1 தூக்கி பிடித்தல்

மிகவும் பழமையான, நமக்கு தெரிந்த சிறந்த வழி குழந்தையை கைகளில் வைத்து கொள்வது தான். குழந்தையை பராமரிப்பதில் இதுவும் ஒரு கலைதான். இதன் பின்னும் அழுதால், குழந்தையை தூக்கி தோளில் படுக்க வைத்து ஒரு கையை தலையின் பின் புறமும், மற்றொன்றை குழந்தையின் இடுப்பு பகுதியிலும் வைத்து குழந்தையை பிடித்துக் கொண்டால் வசதியாக உணர்வார்கள். இப்படியே வைத்து கொண்டு கொஞ்சம் நடந்து கொடுங்கள்.

2 ஸ்ஸ்ஸ்ஸ்

நீங்கள் இதை முயற்சிக்கும் வரை கட்டாயம் நம்பமாட்டீர்கள். ஸ்ஸ்ஸ்ஸ் எனும் சப்தம் உங்கள் குழந்தையை அமைதியடைய செய்யும். இதே சப்தத்தை அவர்கள் கருவறையில் கேட்டிருப்பார்கள். இதனால், இது அவர்களை பாதுகாப்பாக உணர செய்யும்.

3 பாடல் பாடுங்கள்

உங்கள் குழந்தை கேட்கும் படி தாலாட்டு பாடல்கள் அல்லது வேறு ஏதேனும் குழந்தை பாடல்களை பாடுங்கள். தொடர்ந்து தாயின் குரலை கேட்கும் போது, குழந்தைகள் சௌகர்யமாகவும் பாதுகாப்பாவும் உணருவார்கள். இதனால் குழந்தைகள் தூங்க துவங்கி விடுவார்கள்.

4 அவர்களை நகர்த்துதல்

சில நேரங்களில் காரணம் இல்லாமல் அழுவார்கள். குழந்தைகள் சலிப்படியும் போது தான் காரணமின்றி அழுவார்கள். இதை அம்மாக்களால் புரிந்து கொள்ள முடியாது. அவர்கள் பல வழிகளை முயற்சித்து, கவலையடைவார்கள். இதனால் உங்கள் குழந்தை அழுதால் அவர்களை வெளியில் அழைத்து சென்று வேடிக்கை பார்க்க செய்யுங்கள். அவர்களுடன் பேசுவது, விளையாடுவது போன்றவற்றை செய்யுங்கள்.

5 தேன் இரப்பர்

இது அழும் குழந்தையை சமாதானபடுத்துவதில் பெரிதும் உதவுகிறது. அது குழந்தையை தாயிடம் பால் குடிப்பது போல் உணர செய்யும். இது குழந்தையை அமைதியாக்கவும், திருப்திப்படுத்தவும் உதவுகிறது.

Leave a Reply

%d bloggers like this: