புதுமணத் தம்பதியர் தெரிந்து கொள்ள வேண்டிய 9 விஷயங்கள்..!

திருமணம் என்பது இருவேறுபட்ட மனிதர்களை உறவுகளை இணைக்கும் பந்தம். இதில் இணையும் இரு உள்ளங்களும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, விட்டுக்கொடுத்து வாழ்க்கை நடத்த வேண்டும். திருமண வாழ்வில், கணவன் மற்றும் மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய சில விஷயங்களை பற்றி இப்பதிப்பில் காணலாம்..  

1. பரிசுகள்..!

திருமண நாளன்று பரிசுகள் வழங்கி அன்பை பரிமாறிக் கொள்வது, தம்பதியரிடையே உள்ள அன்பை வளர்க்க உதவும். ஏதேனும் வேலை காரணமாக உங்கள் கணவர் அந்நாளை மறந்து விட்டால், பொறுமை கொள்ளுங்கள்; கோவப்படாதீர்கள். அவர் மறதிக்கு பின்னுள்ள காரணத்தை கேட்டறியவும்.

2. குழந்தைகள்..

உங்கள் இருவருக்கும் எப்பொழுது குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்பொழுது அதற்கு முயற்சிக்கவும். உங்கள் கருத்துக்கள் இவ்விஷயத்தில் மாறுபட்டால், பொறுமையாக இருவரும் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வரவும்.

3. நேரம்..!

கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் போதிய அளவு நேரம் ஒதுக்கி, பேசிக்கொள்ளுங்கள்; உடலுறவு கொள்ளும் எண்ணம் இருந்தால் அதை செயல்படுத்துங்கள். நேரமில்லை என்று கூறி, துணையை ஒதுக்காதீர்கள். கணவர்கள் விடுமுறை நாட்களில் மனைவியுடன் வீட்டிலிருந்து நேரம் செலவிடுங்கள்..

4. ஏற்றுக்கொள்ளுங்கள்..!

கணவனோ மனைவியோ இருவரும், ஒருவரையொருவர் அவரின் பிறவி குணம் மற்றும் இயற்கை குணாதிசயங்களுடன் ஏற்றுக் கொள்ள பழக வேண்டும். எனக்காக இதை மாற்றிக்கொள், அதை மாற்றிக்கொள் என்று உங்கள் துணையை நச்சரிக்காதீர்கள். துணையின் இயற்கையான குணத்தை, அப்படியே ஏற்று, துணையை காதலிக்கத் தொடங்குங்கள்..

5. நண்பர்கள்..

கணவன்-மனைவி இருவரும் வாழ்க்கைப் பயணத்தில், சிறந்த நண்பர்களாக விளங்க வேண்டும். சந்தேகம் என்பதோ சண்டை என்பதோ கணவன்-மனைவிக்குள் வரக்கூடாத சில விஷயங்கள். அப்பிரச்சனைகள் உங்கள் இருவருக்குள்ளும் ஏற்படாவண்ணம் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முயலுங்கள்..

6. சேமிப்பு..!

இன்றைய காலகட்டத்தில், ஒரு குடும்பம் நடத்த எவ்வளவு பணம் செலவாகிறது என்று புரிந்து கொண்டு, கணவன்-மனைவி இருவரும் தேவையற்ற செலவுகளைக் குறைத்து, சேமிப்பைத் தொடங்கி செழிப்பான வாழ்க்கையை மேற்கொள்ள முயற்சி செய்யுங்கள்..

7. விருப்பு வெறுப்புகள்..

தம்பதியர் இருவரும், தங்கள் விருப்பு வெறுப்புகளை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்; இது உங்கள் இல்லற வாழ்க்கை மேம்பட உதவும். இதனால், உங்களுக்குள் சண்டை ஏற்படுவது தவிர்க்கப்பட்டு, காதல் ஏற்பட நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

8. காதலர்கள்..!

உங்களை பற்றி என்னென்ன தகவல்களை உங்கள் துணை தெரிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீரோ, அவற்றை பகிருங்கள். நீங்கள் திருமணத்திற்கு முன்னால், காதல் வயப்பட்டிருந்தால் அதை பகிர்வது உங்களின் தனிப்பட்ட விஷயம். உங்களின் கணவரின் குண நலனைப் பொறுத்தது. யோசித்து முடிவெடுத்து, பகிருங்கள்..

9. சிறந்த துணை..!

உங்களுக்கு கிடைத்த துணை எப்படிப்பட்டவராயினும், அவரின் நிறைகளை மட்டும் காண கற்றுக் கொள்ளுங்கள். இது உங்கள் இல்லற வாழ்க்கையை சிறப்பாக்க உதவும்.

Leave a Reply

%d bloggers like this: