இன்றைய அவசர காலகட்டத்தில், கணவர் ஒரு பக்கம் வேலை, பணம் என்று ஓடினால், மனைவி மற்றோரு பக்கம் வேலை, குழந்தை, சமையல், குழந்தைக்கு படிப்பு, கணவரை கவனித்தல், வீட்டிலுள்ளோரை கவனித்தல் என பம்பரமாக சுற்றிக்கொண்டிருக்கிறாள். இதற்கிடையில் கணவரும் மனைவியும் ஒருவருக்கொருவர் பேசி அன்பு செலுத்தும் நேரம் என்பது முற்றிலும் குறைந்து கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் கணவருக்கு மனைவி நம்மை மறந்து விட்டாலோ என்ற எண்ணமும், மனைவிக்கு கணவர் நம்மை கவனிப்பதே இல்லை என்ற எண்ணமும் எழுகிறது.
இந்த பிரச்சனையை சரிசெய்ய மனைவியரே! நீங்கள் உங்களுக்கு கணவரின் சேவை, தேவை என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும். அதை எப்படி செய்வது என்ற குழப்பமா? உங்கள் குழப்பத்தை போக்கவே இந்த பதிப்பு, படித்து காதலில் விழுங்கள்..!
1. பேப்பர் தூது..!
உங்கள் இருவருக்கும் அதிக வேலை இருந்து, ஒருவரைக்காண ஒருவருக்கு நேரம் இல்லாது போனால், அவரைக் காணாமல் நீங்கள் எவ்வளவு தவிக்கிறீர் என்பதை ஒரு துண்டு பேப்பரில் எழுதி உங்கள் கணவர் கண்ணில் படுமாறு வையுங்கள்..! இது நிச்சயம் உங்கள் கணவர் மனதில் சிறு மாற்றத்தை உண்டு செய்யும்.
2. குரல் செய்தி..
அலைபேசியில் நீங்கள் அவரை காதலிப்பதை, அவருக்கான காதல் மொழிகளை பேசி உங்கள் ஆருயிர் கணவருக்கு அனுப்புங்கள்..
3. பேசிவிடுங்கள்..!
உங்கள் கணவர் மிகவும் வேலையாக இருந்து உங்களுடன் நேரம் செலுத்தாமல் இருந்தால், அவரை உங்கள் அருகில், மிக அருகில் இழுத்து உங்கள் காதலை, தேவையை அவருடன் பேசுங்கள்.
4. சேர்ந்து சமையுங்கள்..
உங்கள் இருவருக்கும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சேர்ந்து சமைக்க முற்படுங்கள்; அப்படி சமைக்கும் போதெல்லாம், இருவரும் மனம் விட்டு பேசுங்கள்.
5. இரவு உணவு..!
சில சமயங்களில், உங்கள் கணவருடன் இரவு உணவிற்கு, ஏதேனும் அழகான உணவு விடுதிக்கு சென்று உணவு அருந்தி, அவருடன் நேரம் செலவிடுங்கள்..
6. நடைபயணம்..!
உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், இருவரும் சேர்ந்து நடைபயணம் மேற்கொண்டு இருவரும் உங்கள் காதலை பரிமாறிக் கொள்ளுங்கள்.
7. கட்டிக்கொள்ளுங்கள்.!
உங்கள் கணவரின் மீதான காதல் எல்லை மீறும் போதோ அல்லது உங்கள் காதலை அவருக்கு புரிய வைக்க வேண்டும் என்று என்னும் போதோ, உங்கள் கணவரை கட்டி அனைத்துக் கொள்ளுங்கள்.
8. கை கோர்த்து கொள்ளுங்கள்..
உங்கள் கணவருடன் வெளியில் செல்லும் போதோ அல்லது அவருடன் தனித்து நேரம் செலவிடும் போதோ, அவரின் கையுடன் உங்கள் கைகளை கோர்த்துக் கொள்ளுங்கள்; இது உங்களிடையே உள்ள பிணைப்பினை அதிகப்படுத்தும்.
9. குழந்தை வளர்ப்பு..!
குழந்தையை வளர்க்கும் முறைகள் பற்றியும், குழந்தை பற்றிய முக்கிய முடிவுகளையும் இருவரும் பேசி முடிவெடுங்கள்.
10. வாரவிடுமுறை.!
உங்களது வார விடுமுறையை, கணவருடன் தனித்து நேரம் செலவிடும் வகையில், திட்டமிட்டு வார விடுமுறையை வசந்த காலமாக்க முயலுங்கள்.
11. வேலை..!
வீட்டிலோ வெளியிலோ முடிந்த வரை இருவரும் சேர்ந்து வேலை செய்ய முயலுங்கள்; இது உங்களுக்கு அதிக நேரத்தை, சேர்ந்து செலவிட உதவும்.
12. டைரி..!
உங்களுக்கு டைரி எழுதும் பழக்கம் இருந்தால், அதில் உங்கள் கணவரை பற்றிய காதலை பதிவிட்டு இருந்தால், அதை கணவருக்கு காண்பித்து மகிழ்ச்சிப்படுத்துங்கள்.
13. அறிவுரை..!
நீங்கள் செய்யும் வேளைகளில், உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதை உங்கள் கணவரிடம் கேட்டறிந்து, அவரின் அறிவுரை பெற்று பணியாற்றுங்கள். இது கணவருக்கு, மனைவிக்கு நம் உதவி தேவைப்படுகிறது, அவள் நம்மை மறக்கவில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.