விரைவாகக் குழந்தை கருத்தரிக்க 7 குறிப்புகள்..!

திருமணம் முடிந்து, “நாம் இருவர் நமக்கேன் ஒருவர்” என வாழ்ந்து முடித்து, கடைசியாய் “நாம் இருவர் நமக்கு ஒருவர்” என்ற முடிவுக்கு வந்த தம்பபத்தியரா நீங்கள்.? விரைவில் குழந்தை கருத்தரிக்க 7 குறிப்புகள் இப்பதிப்பில் தரப்பட்டுள்ளன. இப்பதிப்பு உங்களுக்காக..! படித்து குழந்தைச் செல்வம் பெற்று வாழ்க்கையை வழிநடத்துவீராக!!

1#நேரம்..

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சியே கருவுறுதலுக்கு ஆதாரம். இம்மாதவிடாய் சுழற்சியில் பெண்ணின் கருப்பையில் அண்டம் அதாவது பெண் முட்டை வெளியேறி ஆண் விந்துவிற்காக காத்து நிற்கும். ஆண் விந்து அந்த சமயம் உள்நுழைந்து விட்டால், கரு உருவாகும்; இல்லையேல் உதிரப்போக்கு ஏற்பட்டு இரத்தம் வெளியேறும்.

இதன் அடிப்பையிலேயே கருவுறுதல் நிகழும். பெண்கள் தங்களின் மாதவிடாய் நாட்களை கவனத்தில் கொள்ள வேண்டும்; அந்நாட்கள் தொடங்குவதற்கு முன் உடலின் வெப்பம் அதிகரிக்கும்; இந்த வெப்பத்தையும் பெண்களால் உணர முடியும். இந்த மாதிரியான மாற்றங்களை உணர்கையில் கருத்தரிக்க முயல வேண்டும்.

2#மனஅழுத்தமும் மாத்திரைகளும்..

ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று மனஅழுத்தம். சில சமயங்களில் அதிக மனஅழுத்தம் கொள்வது கூட குழந்தை கருத்தரிப்பதை தாமதப்படுத்தலாம்.

பிறப்புக்கட்டுப்பாட்டுக்கு என நீங்கள் மாத்திரைகள் எடுத்திருந்தால், அதுவும் குழந்தை கருத்தரிப்பை தாமதப்படுத்தும் காரணியாக அமைகிறது.

3#ஆரோக்கியமான விந்துக்கள்..

ஆண்களின் விந்து உற்பத்தி சரியானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்தால் தான், கருத்தரிப்பு எளிதில் நிகழும். இதற்கு ஆண்கள் மது மற்றும் புகை பழக்கம் இல்லாதவர்களாக அல்லது குறைந்த அளவில் எடுத்துக் கொள்பவராக இருத்தல் அவசியம். வெந்நீர் அதிகம் உபயோகிக்கும் ஆண்களுக்கு விந்து உற்பத்தியில் தடை ஏற்படும்; வெந்நீர் குடிப்பது, அதில் குளிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

சரியான சரிவிகித உணவு மற்றும் சரியான உடல் எடை ஆகியவையும் அவசியம்.

4#உடலுறவு..

கருத்தரிக்க வேண்டுமெனில், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறைகள் உடலுறவு அவசியம் கொள்ள வேண்டும். தூங்கும் முன் உடலுறவு கொள்வது நல்லது. உடலுறவு கொண்டபின் பெண்ணின் பிறப்புறுப்பில், ஆணின் பிறப்புறுப்பு விந்துக்களை செலுத்துமாறு சிறிது நேரம் ஓய்வாக படுத்திருக்க வேண்டும். கருத்தரிக்கும் வரை, தினமும் கூட உடலுறவு கொள்ளலாம்.

5#செய்யக்கூடாதவை…

கருத்தரிக்க என எந்த செயற்கை பொருட்களையும் உபயோகிப்பது நல்லதல்ல. மருத்துவ ஆலோசனையின்றி எவ்வித மருந்துகளையும், ஊசிகளையும் எடுத்துக் கொள்வது நல்லதல்ல.

6#உடற்பயிற்சி..

கருத்தரிக்க சரியான உடல் எடை மற்றும் சரியான தேக பலம் அவசியம்; ஆகையால் உடற்பயிற்சிகளை தினமும் செய்து, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது நல்லது. இது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் பொருந்தும்.

7#உணவு முறை..

கருத்தரிப்பில், சரியான, ஆரோக்கியமான உணவும் முக்கிய பங்கு வகிக்கிறது. கருத்தரிக்க எண்ணும் தம்பதியர், சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள், பருப்பு மற்றும் தானிய வகைகளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் பி உள்ள உணவுகளையும் கடல் மீன்களையும் உண்பது நல்லது. நச்சுத்தன்மையுள்ள மீன்களையும், பெண்கள் காஃபின் உட்கொள்வதையும் தவிர்ப்பது நல்லது.

Leave a Reply

%d bloggers like this: