Anomaly Scan என்றால் என்ன?

Anomaly Scan என்பது கர்ப்பத்தின் இரண்டாவது 3 மாதகால கட்டத்தில் எடுக்கப்படும்; 18-20 வர காலத்தில் இது எடுக்கப்படும். Anomaly Scan இதன் மூலம் கருவறையில் உள்ள குழந்தையை காணலாம் மற்றும் குழந்தை நன்றாக வளர்கிறதா அதன் வளர்ச்சியையும், அது அமைந்திருக்கும் இடத்தையும் அறியலாம்.

இந்த Anomaly Scan, கர்ப்பிணியின் வயிற்றில் ஜெல் போன்ற திரவத்தை தடவி, transducer எனும் கருவியை, வயிற்றின் மீது நகர்த்தும் போது, இக்கருவியிலிருந்து, ultrasound எனும் சத்தம், குழந்தையின் உடல் பாகங்களில் பட்டு எதிரொலிப்பதால், குழந்தையின் உடல் பாகங்களை கணினித் திரையில் காணலாம். மேலும் ஏதேனும் விபரங்கள் தேவைப்பட்டால், கர்ப்பிணியின் பிறப்புறுப்பு வாயிலாக Scan செய்யப்படும்.

Anomaly Scan-ன் மூலம் என்னென்ன தெரிந்து கொள்ள முடியும்.??

1. கருவறையில் எத்தனை குழந்தைகள் உள்ளனர், என்பதை 20 வார கால கர்ப்பத்தில் காணலாம்.

2. குழந்தையின் தலை எந்த அமைப்பில் உள்ளது மற்றும் ஏதேனும் மூளைக் குறைபாடுகள் உள்ளனவா என்பதை அறியலாம்.

3. இதயம், இதய அறைகள், இதய இரத்தக்குழாய்களின் அமைப்பு போன்றவற்றை மருத்துவர் அறிவார்.

4. குழந்தையின் வயிறு பற்றி அறியலாம்; எதையேனும் விழுங்கி உள்ளதா என கண்டுபிடிக்கலாம்.

5. குழந்தையின் சிறுநீரகங்கள், முதுகெலும்புத் தொடர் குறித்த தகவல்களை அறிய முடியும்.

6. குழந்தையின் முகம் மற்றும் அதிலுள்ள உறுப்புகளின் வளர்ச்சியைக் கண்காணிக்கலாம்.

7. அடிவயிற்றுப்பகுதி மற்றும் உள்ளுறுப்புகளைக் குறித்து அறியலாம்.

8. கை, கால்கள் போன்றவற்றின் வளர்ச்சி பற்றி அறியலாம்.

* அம்னோடிக் திரவம்,

* நஞ்சுக்கொடி,

* தொப்புள் கொடி போன்றவை குறித்தும் மருத்துவரால், அறிய இயலும்.

நஞ்சுக்கொடி

இது கருவறையின் முன்போ அல்லது பின்போ அமைந்திருக்கும்; இது சிறுநீர்ப்பையின் மேல் அமைந்திருக்கும். இந்த நஞ்சுக்கொடி கருப்பையின் கழுத்தை இறுக்கும் அபாயம் உண்டு. ஆகையால் இதனை நன்கு கண்காணிக்க வேண்டும்.

தொப்புள் கொடி

இந்த தொப்புள் கொடியில் 3 இரத்தக்குழாய்கள் ( 2 தமனிகள், 1 சிரை) உள்ளனவா என்று பரிசோதிக்க வேண்டும்.

மருத்துவர்கள் இந்த பரிசோதனை மூலம் குழந்தையின் உடல் எடையை அளந்தறிவர் மற்றும் உடல் பாகங்களின் அளவுகளை கண்டறிவர். கீழ்க்கண்ட அளவுகளை 

1. தலையின் சுற்றளவு மற்றும் விட்ட அளவு

2. அடிவயிற்றின் சுற்றளவு

3. தொடை எலும்பின் நீளம்

ஆபத்து உள்ளதா?

குழந்தையின் வளர்ச்சி நிலை குறித்து இந்த பரிசோதனை மூலம் அறியலாம். ஏதாவது பிரச்சனைகள் இருக்குமானால், மருத்துவர்கள் உடனே கூறிவிடுவர்.

இப்பரிசோதனை மூலம் பல தகவல்களை அறியலாம்; ஆனாலும் 100% அனைத்தையும் அறிய முடியாது. குழந்தை குறையுடன் இருக்குமேயானால், அதை கண்டுபிடிக்க வாய்ப்பு அதிகம்; கருவிலேயே அதை சரிசெய்யவும் முயற்சிக்கலாம்.

சில சமயங்களில் மருத்துவரின் ஆலோசனையை, அலட்சியம் செய்யும் பட்சத்தில், தாய் மற்றும் சேய்க்கு பாதிப்பு ஏற்படலாம். ஆகையால், மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்றி, அனைத்து பரிசோதனைகளையும் செய்து கொள்வது நல்லது.

Leave a Reply

%d bloggers like this: