புதிய தாய்மார்கள், வயிற்றுப் பகுதி சதையைக் குறைக்க 6 வழிமுறைகள்..!

உலகில் பெரும்பாலான பெண்களுக்கு, ”பிரசவத்தால் ஏற்பட்ட வயிற்றுப் பகுதி சதையை எவ்வாறு குறைப்பது..?” என்பதே பெரும் கவலை. இவ்வித கவலையால் பெண்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி, தன் உடல் நலன் மற்றும் குழந்தையின் நலனையும் கவனிக்கத் தவறுகின்றனர். 

இம்மனஅழுத்தத்திலிருந்து விடுபட 6 எளிய வழிமுறைகள்….

தாய் பாலூட்டுதல்:

’பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதால், மேனியழகு குறையும்’ – என்ற தவறான கருத்து, இன்றைய இளம் தாய்மார்கள் மத்தியில் பரவியுள்ளது. ஆனால், உண்மையில் பாலூட்டுதல் மூலம் நாள் ஒன்றுக்கு, 300 முதல் 500 கலோரிகள் வரை உடல் எடையை குறைக்க இயலும் – என்று ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான உணவு முறை:

இளம் தாய்மார்கள், பச்சை காய்கறிகள் மற்றும் பழ வகைகளை உட்கொள்ள வேண்டும். இனிப்பு, எண்ணெய் உணவுப் பொருட்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். நெகட்டிவ் கலோரி காய்கறிகளான முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் மற்றும் நெகட்டிவ் கலோரி பழமான ஆப்பிள் வகைகளை உட்கொண்டால் உடல் எடையை எளிதாகக் குறைக்கலாம்.

உடற்பயிற்சி:

எளிமையான உடற்பயிற்சி மற்றும் எளிய யோகா முறைகள் மூலம் உடல் எடையை சீர் செய்யலாம். உடற்பயிற்சியினை எளிய நடைபயிற்சி மூலம் தொடங்குவது நல்லது.

கருப்பை தசையை சுருக்குதல்:

மகப்பேறு காலத்தில், குழந்தை கருத்தரித்த பின் கையளவு இருக்கும் கருவறை ஒரு பானையளவு பெரிதாகும். அவ்வாறு பெரிதாகிய கருவறையை சுருங்கச் செய்ய மூச்சுப் பயிற்சியை மேற்கோள்ள வேண்டும்.

உறக்கம்:

”உறக்கத்தால் உடல் எடை கூடும் என கேள்வியுற்றிருப்போம்” –ஆனால், பிரசவித்த பெண்களைப் பொறுத்த வரை உறக்கம் கொள்வது ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மை அளிப்பதோடு, உடல் எடையை குறைக்கவும் பேருதவி புரிகிறது.

வீட்டு வேலைகள்:

அன்றாடம் வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளை, இளம் தாய்மார்கள் மேற்கொள்வதனால், உடல் எடை குறையும்; இது ”ஒரு கல்லில் இரு மாங்காய்கள்” போல், வேலையை செவ்வனே செய்து முடிப்பதோடல்லாமல், உடற்பயிற்சியாய் அமைந்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

Leave a Reply

%d bloggers like this: