ஆண் குழந்தைகளுக்கான சிறந்த 10 பெயர்கள்..!

தம்பதியராய் இருந்த உங்கள் வாழ்க்கையின் தடத்தை மாற்றியமைத்த உங்கள் செல்ல வாரிசுக்கு பெயர் வைப்பது என்று முடிவு செய்து விட்டீர்களா? குழப்பமாக உள்ளதா எந்த பெயரை தேர்வு செய்வதென? உங்களுக்கு உதவவே, உங்கள் குழப்பத்தைப் போக்கவே இந்த பதிப்பு..! பதிப்பை படித்து, குழந்தைக்கு பெயரை தேர்வு செய்யுங்கள்..! 

1. ஆருஷ்..!

ஆர்நா என்பது தமிழ் பெயர்; இது குளிர்கால சூரியனின் முதல் கதிர் என்ற பொருளைக் கொண்டது, உங்கள் குழந்தைச் செல்வம் வாழ்வில் எப்பொழுதும் முதல் இடத்தைப் பிடித்து முன்னேறிக் கொண்டே இருக்கும்.

2. ஜாவியன் ..!

ஜாவியன் என்பதற்கு ஒளி பொருந்தியது, புத்திசாலி என்று பொருள். உங்கள் அன்பு புத்தொளிக்கு இந்த ஒளியின் பெயரை வைத்து மகிழுங்கள்..

3. யாஷ்மித்..!

யாஷ்மித் என்பதுபுகழ்பெற்றவர் என்ற பொருள் கொண்டது. உங்கள் குழந்தை புகழ் பெற்று விளங்க இந்த பெயர் ஏற்றது.

4. உதிப்..!

உதிப் என்பது ஒளியை அளிப்பவர், வெள்ளத்திற்கு இணையான ஆற்றல் கொண்டவர் போன்ற அர்த்தங்களைக் குறிக்கும். உங்கள் குழந்தை மற்றவர் வாழ்வு வளம் பெற உதவவும், தன் வாழ்வில் வாழ்ந்து வளரவும், இப்பெயர் ஏற்றது.

5. ஹிமேஷ்..!

ஹிமேஷ் என்ற பெயர், பனிப்பிரதேசத்தின் கடவுளைக் குறிக்கும். உங்கள் குழந்தைக்கு வாழ்வில் எத்தனை சங்கடங்கள் மற்றும் தோல்விகள் ஏற்பட்டாலும், தளராது, சோர்ந்து போகாது, எதிர்நிச்சலிட்டு எழும் சக்தியை இப்பெயரின் அலைகள் வழங்கும்.

6. இக்சித்..!

இக்சித் என்பது புலப்படக்கூடிய, குறிக்கோள் கொண்ட, செய்யும் செயலை முழு ஈடுபாட்டுடன் செய்பவர், போன்ற அர்த்தங்களைக் கொண்டது. உங்கள் குழந்தை மனதிருப்தியான, மகிழ்ச்சியான, குறிக்கோள் பொருந்திய வாழ்க்கை மேற்கொள்ள இப்பெயரை குழந்தைக்கு சூட்டுங்கள்..

7. ஜிதின்..!

யாராலும் தோற்கடிக்க முடியாதவர் என்பதைக் குறிக்கும். குறிக்கோளுடன் வாழ்வில் போராடி தான் நினைத்ததை அடைந்தே தீருவார். குழந்தைகளுக்கு வைக்க ஏற்ற பெயர்.

 

8. மேஹித்..!

எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பவர், எதற்கும் வருந்தாதவர் என்ற அர்த்தங்கள் இப்பெயருக்கு உண்டு. குழந்தை பேரோடும் புகழோடும், சிரிப்போடும் வாழ இப்பெயரை சூட்டுங்கள்..

9. மித்ரன்..!

நல்ல செய்கை, நட்பு, அன்பு போன்றவற்றை மித்ரன் என்ற பெயர் குறிக்கும். உங்கள் குழந்தை நன்னடத்தையுடன் அன்பாக, நட்பாக விளங்க இப்பெயர் ஏற்றது.

10. நிமித்..!

நிமித் என்பது குறிக்கோளை நோக்கி நகர்பவர், நிலையான இது போன்ற அர்த்தங்களைக் கொண்டது. இப்பெயர் கொண்ட குழந்தைகள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமாக, நிலையாக வாழ்வர்..!

Leave a Reply

%d bloggers like this: