உடல் எடையை குறைக்கும் டீ..!

உடல் எடை என்பது இன்றைய தலை முறையினரை பெரிதும் பாதிக்க கூடிய விஷயம். இதனால் பெண்கள் தான் அதிகம் பாதிக்க படுகிறார்கள். நினைத்த உடை அணிய முடியாமல், மற்றவர்களை போல் இருக்க முடியவில்லை என ஏங்கி தவிக்கிறார்கள். இதற்கு காரணம் நாகரிகம் எனும் பெயரில் உண்ணும் துரித உணவுகள் தான். நாம் அன்றாட உணவுகளில் இருக்கும் கலப்படம் மற்றம் இராசனங்களும் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இங்கு உடல் எடையை குறைக்கும் வழிகளை பார்க்கலாம்.  

ஏனெனில் இந்த டீயில், உடலின் மெட்டாபாலிசத்தை அதிகரிக்கும் மசாலாப் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் அதிகப்படியான கலோரிகள் கரைவதோடு, இந்த டீயைக் குடித்தால் செரிமான மண்டலம் சீராக செயல்படும். குறிப்பாக இந்த டீயை ஒரு நாளைக்கு மூன்று கப் குடித்து வந்தால், விரைவில் இடுப்பளவும், உடல் எடை குறைவதையும் நீங்கள் காண முடியும்.

தேவையான பொருட்கள்

தண்ணீர் – 800 மிலி

க்ரீன் டீ பவுடர்- 1 டேபிள் ஸ்பூன்

பட்டை – 1 துண்டு

பிரியாணி இலை – 3

தேன் – சுவைக்கேற்ப

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதில் பட்டை, பிரியாணி இலை, க்ரீன் டீ பவுடர் ஆகியவற்றை சேர்த்து மூடி வைத்து 15 நிமிடம் ஊற வைத்து, பின் வடிகட்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்.

முதலில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மற்ற இருமுறை நீங்கள் சாதாரணமாக டீ பருகும் நேரங்களில் பருகலாம்.

உங்கள் இடுப்பளவு மற்றும் உடல் எடை வேகமாக குறைய வேண்டுமானால், இந்த டீயை தினமும் குடிப்பதோடு, தவறாமல் உடற்பயிற்சியையும், டயட்டையும் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் நல்ல மாற்றத்தை விரைவில் காண முடியும்.

உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, கல்லீரல் அதிகப்படியான சர்க்கரையை கொழுப்புக்களாக மாற்றி உடலில் தங்க வைக்கும். ஆனால், பட்டை உடலில் கொழுப்புக்களின் தேக்கத்தைக் குறைக்கும். மேலும் பட்டை உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து அதிகப்படியான சர்க்கரையை உடைத்து, கொழுப்புக்களை கரைத்து உடலுக்கு ஆற்றலாக வழங்கும்.

பிரியாணி இலை உடலில் உள்ள அதிகப்படியான நீர்மத்தை வெளியேற்றும், செரிமானத்தை மேம்படுத்தும், வயிற்று உப்புசத்தைக் குறைக்கும், வாய்வு தொல்லையைத் தடுக்கும். முக்கியமாக இந்த பிரியாணி இலையில் உள்ள லிமோனைன் என்னும் பொருள், பட்டையுடன் சேரும் போது, உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புக்களை வேகமாக கரைக்க உதவும்.

இந்த டீயை கர்ப்ப காலத்திலோ அல்லது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலங்களிலோ பருகக்கூடாது. குழந்தைகளுக்கும், பெருங்குடல் பிரச்சனைகளைக் கொண்டவர்களும் இந்த டீயைக் குடிக்கக்கூடாது.

Leave a Reply

%d bloggers like this: