பொடுகுத் தொல்லையை போக்க

இன்றைய கால கட்டத்தில் ஆண் பெண் என இருவரும், ஏன் குழந்தைகள் கூட பொடுகு தொல்லையால் பாதிக்கபடுகின்றன. அடிக்கடி தலைக்கு குளிப்பது, எண்ணெய் வைக்காமல் விடுவது மற்றும் பல காரணங்களால் தலையில் பொடுகு ஏற்படுகிறது. பொடுகை சரிவு செய்வதற்காக முடிக்கு பயன்படுத்த வேண்டிய மாஸ்க் பற்றி இங்கு பார்க்கலாம்.

இந்த மாஸ்க்கில் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் ஏராளமாக உள்ளது. மேலும் இதில் சேர்க்கப்படும் எலுமிச்சையில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள் இருப்பதால், ஸ்கால்ப்பில் உள்ள தொற்றுக்கள் அழிக்கப்பட்டு, ஸ்கால்ப் சுத்தமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

தயிர் – அரை கப்

எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

தேன் – ஒரு தேக்கரண்டி

டீ-ட்ரீ எண்ணெய் – சில துளிகள்

தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் 1/2 கப் தயிரை எடுத்து, அதில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து 1 டேபிள் ஸ்பூன் தேனை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பலரும் தேன் முடியை வெள்ளையாக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தேன் மயிர்கால்களுக்கு ஈரப்பதமூட்டி, முடியை மென்மையாக வைத்துக் கொள்ளும்.

பின்பு அத்துடன் 3-4 துளிகள் டீ-ட்ரீ எண்ணெயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். டீ-ட்ரீ எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள் உள்ளது. இது பொடுகை எளிதில் அழித்து விரட்டும்.

பின் தலைமுடியை சீப்பால் சீவி, சிக்கு எடுத்துவிட வேண்டும். ஒருவேளை தலைமுடி மிகவும் வறட்சியுடன் இருந்தால், தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவ வேண்டும்.

பின்பு கலந்து வைத்துள்ள கலவையை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி, பின் 1 மணிநேரம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு நன்கு தலைமுடியை அலச வேண்டும்.

Leave a Reply

%d bloggers like this: