அம்மாக்களுக்கான கடிதம் கட்டாயம் படியுங்கள்..!

அன்புள்ள வீட்டில் இருக்கும் அம்மாவிற்கு,

எல்லோரும் கேட்பார்கள் நாள் முழுவதும் வீட்டில் என்ன செய்கிறாய் என்று. எனக்கு தெரியும் நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீர்கள் என்று. ஏனென்றால் நானும் இப்போது ஒரு அம்மாதான் நானும் சில காலம் அவற்றை செய்தேன். 

நீங்கள் ஊதியமில்லா வேலையை செய்கிறீர்கள், பெரும்பாலும் அதற்கு நன்றி கூட எதிர்பார்க்கமாட்டீர்கள். காலை எழும் நேரத்தில் தொடங்கும் வேலை நீங்கள் உறங்க செல்லும் வரை தொடர்ந்துகொண்டே இருக்கும். உங்களுக்கு வார விடுமுறையும் இல்லை ஓய்வு எடுக்க நேரமும் இல்லை. நீங்கள் எதிர்பார்க்கும் ஊதியம் இல்லத்தின் மகிழ்ச்சி மட்டுமே. 

நமது வாழ்க்கைமுறை முற்றிலும் வேறானது. நான் அலுவலகத்தில் வேலை செய்கிறேன். நீங்கள் வீட்டில் வேலை செய்கிறீர்கள். என் பணி கூட்டங்கள், மின்னஞ்சல்கள், விரிதாள்கள் மற்றும் பவர்பாயிண்ட் என்றே இருக்கும். உங்கள் வேலையோ குழந்தையை பராமரித்தல், தரையை துடைத்தல், சமையல் செய்தல் என்று இருக்கும். நான் குறிப்பிட்ட நாட்களே குழந்தையுடன் நேரம் செலவிட்டேன். நீங்களோ நாள் முழுவதும் குழந்தையுடன் இருந்து சண்டை போட்டு, கொஞ்சி விளையாடி மகிழ்ச்சியாக நேரத்தை செலவழிக்கிறீர்கள்.

எனக்கு தெரியும் உங்கள் வேலைக்கு முடிவே இல்லை. மதிய உணவிற்காக கண்டிப்பாக ஒரு மணி நேரத்தை ஒதுக்கி வைத்துவிடுங்கள் இல்லையெனில் ஓய்விருக்காவது, அந்த ஒரு மணி நேரத்தையும் செலவிட்டுவிடுவீர்கள். சிலசமயம் உங்கள் கணவர் மாலை வேலை முடிந்து வந்து சரியாக உங்கள் ஓய்வு நேரத்தை கெடுப்பார், அந்த சமயம் உங்களை அழ கூட வைக்கலாம். உங்கள் வேலையில் உங்களுக்கு ஊதியமும் இல்லை, விடுமுறையும் இல்லை. நீங்கள் நீங்களாக இருக்க முடியவில்லையே என்றும் வருந்துவீர்கள். ஆனால் இந்த கடினமான வேலையை நீங்கள் தவிர்க்க இயலாது.

இந்த சமூகம் பெண்கள் மீது முட்டாள்தனமான பல கோட்பாடுகளை திணித்துள்ளது. நாம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தால் நமது திறமையை வீணடிக்கிறோம் என்பார்கள். வேலைக்கு சென்றால் குழந்தைகளை மறந்துவிட்டோம் என்பார்கள். இரண்டுமே முட்டாள்தமானவைதான். ஆனால் நீங்கள் குடுமபத்தை பார்த்துக்கொள்ள வீட்டில் இருக்கும் நல்ல முடிவை எடுத்துள்ளீர்கள்.

நான் உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் நீங்கள் வெறும் குழந்தையை பார்த்துக்கொள்பவர் மட்டுமல்ல. நீங்கள் செய்யும் வேலை உங்கள் செல்லக்குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைப்பதோடு அவர்களுக்கான உலகத்தையும் உருவாக்குவதாகும். எந்தவித ஊதியமோ, பாராட்டோ, வெகுமதியோ எதிர்பார்க்காமல் நீங்கள் வேலை செய்வதை நான் ரசிக்கிறேன்.

நமது வாழ்க்கைமுறை வேறாக இருக்கலாம் ஆனால் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு நமக்குள் ஒற்றுமைகள் இருக்கிறது. நாம் இருவருமே குழந்தைகளை நேசிக்கிறோம், அவர்களுக்கு சிறந்தவைகளை மட்டுமே செய்ய வேண்டுமென விரும்புகிறோம். தாய்மை என்பது கடினம்தான், ஆனால் நாம் அதை எப்படி செய்கிறோம் என்பதில்தான் அதன் பெருமை உள்ளது.

நீங்கள் இதை புரிந்துகொள்ளவேண்டுமென்றுதான் விரும்புகிறேன். நாம் இருவருமே மக்கள்தான். உங்கள் சிறந்த பணியை தொடருங்கள்.

இப்படிக்கு,

வேலைக்கு செல்லும் அம்மா 

Leave a Reply

%d bloggers like this: