அம்மாக்களே சிறந்தவர்கள் என்று உணர்த்தும் 5 தருணங்கள்

உங்கள் அம்மா என்ன சொல்ல வருகிறார் என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? உங்கள் நினைவுக்கு வருவதெல்லாம் அவர்களின் கண்டிப்பும், நீங்கள் செய்ய விரும்பியதை தடுத்ததும்தான். உங்களை கஷ்டப்படுத்தி, நீங்கள் அழுவதை பார்க்கவே அவர்கள் விரும்புகிறார்கள் என்று தவறாக எண்ணியிருப்பீர்கள். இப்போது நீங்களே ஒரு அம்மா. உங்கள் கடந்தகாலத்திற்கு சென்று அவர்களை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். உங்கள் அம்மாதான் எப்போதுமே சரி என்று உணர இந்த 6 தருணங்கள் போதும். 

1 காலையில் எழுப்புதல்

நீங்கள் நன்றாக தூங்கி தாமதமாக எழ ஆசைப்பட்டுருப்பீர்கள். ஆனால் நீங்கள் பள்ளியை தவறவிடுவதை எவ்வாறு அம்மாவால் அனுமதிக்க முடியும். அனைத்து வழிகளிலும் உங்களை எழுப்ப முயற்சிப்பார்கள். நம்மில் பெரும்பாலானோர் முகத்தில் நீர் ஊற்றுவதை அனுபவத்திருப்பிப்போம். இப்போது அது தேவைப்படாது. ஏனெனில் உங்களுக்கும் இப்போது குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களின் நோக்கமும், வலியும் இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

2 உங்கள் வேலைகள் செய்தல்

சிறு வயதில் உங்கள் வேலைகளை தவிர்த்துவிட்டு வேலைக்கு ஓடிவிட்டு, மாலை நேரம் நண்பர்களுடன் நேரத்தை செலவழித்து, இரவு வீட்டிற்கு தாமதமாக வந்திருப்பீர்கள். இப்போது அதைதான் உங்கள் குழந்தைகளும் செய்கிறார்கள். வாழ்க்கை சக்கரம் இப்போது திரும்பிவிட்டது. உங்கள் குழந்தைக்கு பொறுப்புணர்ச்சியை கொண்டுவர பெரிதும் சிரமப்படுவீர்கள். ஆனால் அவை வீண்தான். ஏனென்றால் அவர்கள் உங்கள் குழந்தை அல்லவா உங்களை போலத்தான் இருப்பார்கள்.

3 உணவை தவிர்த்தல்

உங்கள் குழந்தைகள் உணவை சரியாக உண்ணமாட்டார்கள் அதுமட்டுமின்றி பச்சை காய்கறிகளை பார்த்தாலே ஓடுவார்கள். இது உங்கள் குழந்தைபருவத்தை நியாபகப்படுத்தும். உணவை தவிர்ப்பதற்கு நீங்கள் செய்த வேலைகள் அனைத்தையும் உங்கள் குழந்தைகளும் செய்வார்கள். பால்தான் உங்கள் முதல் எதிரியாய் இருந்திருக்கும் அவர்களும் அதையே பின்பற்றி உங்கள் பொறுமையை சோதிப்பார்கள். அம்மாவை போல் பிள்ளை..

4 குளிர்கால உடைகளை தவிர்த்தல்

ஸ்வெட்டர் அதை நீங்கள் குளிர்காலத்தில் போட்டிருக்கவே மாட்டீர்கள். உங்கள் குழந்தை ஒருபடி மேலே சென்று ஷாக்ஸ் கூட அணியாமல் பாடாய்படுத்துவார்கள். எப்படியும் காலையில் எந்திரிக்கும்பொழுது ஜலதோஷத்துடனே எழுந்திருப்பீர்கள். இப்போதும் அதேதான் தொடரும். ஆடைகளின்றி சுற்றுவது சரியானது அல்ல என்று இப்போது உணர்ந்திருப்பீர்கள்.

5 சீக்கிரம் தூங்குதல்

விளக்குகளை அணைத்த பின்னும் பின்னிரவு வரை டிவி பார்ப்பது உங்களுக்கு பிடித்த ஒன்றாக இருந்திருக்கும். அந்த சமயங்களில் உங்களின் பொம்மை பட கதாபாத்திரங்களே உங்களுக்கு உற்ற நண்பனாய் இருந்திருக்கும். ஆனால் அதற்கு அடுத்த நாள் சோம்பலுடன் தூங்கிவிழுந்து வகுப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட அனுபவம் கண்டிப்பாய் அனைவருக்கும் இருக்கும். அனைத்தையும் போலவே உங்கள் குழந்தையும் இதையே செய்து ஆசிரியர்களிடம் உங்களை திட்டு வாங்க வைப்பார்கள்.

Leave a Reply

%d bloggers like this: