உங்கள் தொப்பை குறையாததற்கான 7 காரணங்கள்..!

தொப்பை என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் இருக்க கூடிய ஒன்று. அதை குறைப்பதற்கு பலவற்றை முயற்சிப்பார்கள். ஆனால், இறுதியில் குறைக்க முடியாமல், மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். இங்கு தொப்பை குறையாததற்கான காரணங்களை பார்க்கலாம். 

1 பிரசவத்திற்கு பின் ஏற்படும் மனஅழுத்தம்

ஆய்வுகளில், மனஅழுத்ததில் இருப்பவர்களுக்கு தொப்பை உண்டாகுகிறது என்று கண்டுபிடித்துள்ளார்கள். இதற்கு, பசியின்மை, சரியான உடற்பயிற்சி இல்லாமை, ஊக்கமின்மை அல்லது பதப்படுத்தப்பட்ட வகை உணவுகளை அதிகமாக உட்கொள்ளுதல் கூட காரணமாக இருக்கலாம். குறிப்பாக, பெண்கள் பிரசவத்திற்கு பின் மனஅழுத்தத்திற்கு உள்ளாவார்கள். இதிலிருந்து மீள உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இதனால் உங்கள் உடலில் சில ஹார்மோன்கள் உற்பத்தி ஆகி சரியான வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும்.

2 உணவு

உங்கள் தொப்பை குறையாததற்கு நீங்கள் உட்கொள்ளும் உணவுகள் கூட காரணமாக இருக்கலாம். நீங்கள் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால், எவ்வளவு உடற்பயிற்சி செய்தும் அது பலனளிக்காது. நிறைவுற்ற கொழுப்பு ( saturated fats ) உங்கள் தொப்பையை அதிகரிக்கும். ஆனால், மற்ற வகை கொழுப்புகளான நிறைவுறா கொழுப்புகள் ( unsaturated fats ) உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும். ஆனால், இவை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். சமீபத்திய ஆய்வுகளில், உங்கள் உணவில் மெக்னீசியம் சரியான அளவில் இருந்தால், அது உடல் எடையை குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

3 உடற்பயிற்சி

நீங்கள் பல விதமான உடற்பயிற்சிகள் செய்தாலும் உங்கள் தொப்பை குறையாமல் இருக்கும். இதற்கு காரணம் நீங்கள் தவறான உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கலாம். அதனால், தொப்பையை குறைத்து உடலை கட்டுக்குள் வைத்திருக்கும் சரியான உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

4 வயது

வயது ஆக ஆக உங்கள் உடம்பு எரிக்கும் கலோரிகளின் அளவு குறைந்துவிடும். உடற்பயிற்சி செய்வதில் கஷ்டப்படுவீர்கள்.

5 பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் நிறைவுற்ற கொழுப்புகள் ( saturated fats ) அதிகமாக இருப்பதால், அது உங்கள் தொப்பையை குறைக்க உதவாது. குறிப்பாக கர்ப்பமாக இருக்கும்போது கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட தோன்றும். அதனால் பிரசவத்திற்கு பிறகு தொப்பை உண்டாகும். இதை குறைக்க, நிறைய காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ளலாம்.

6 தூக்கம்

தூக்கமின்மையும் தொப்பை குறையாததற்கான காரணமாகும். குறிப்பாக பிரசவத்திற்கு பிறகு, குழந்தையை ககவனித்துக்கொள்ள நேரம் சரியாக இருக்கும் என்பதால், தாய்மார்களுக்கு இது மிகவும் சிரமமான காரியம்.

7 மனஅழுத்தம்

தாய்மார்கள் குழந்தைகள் மற்றும் வீடு ஆகியவை பார்த்துக்கொள்ள வேண்டிய காரணத்தால், அவர்களுக்கு மனஅழுத்தம் உண்டாகும். இதனால் கார்டிசோல் என்ற ஹார்மோன் அதிகளவில் உற்பத்தியாகும். இது உங்களின் கொழுப்பு செல்களை பெரிதாக்கி தொப்பை குறைப்பதை கடினமாக்குகிறது. 

Leave a Reply

%d bloggers like this: