உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை வழிகள்..!

உடல் எடை என்பது இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலானோர் சந்திக்க கூடிய முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். உடல் பருமன் என்பது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. ஆனால் அதனால் ஏற்பட கூடிய பாதிப்பு ஒன்று தான். உடல் பருமனால் பலவிதமான கேலி, கிண்டல்கள், மன அழுத்தம் மற்றும் நினைத்த உடையை அணிய முடியாமல் வருந்துவது போன்றவை ஏற்படுகிறது. இதனால் உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகளை பின்பற்றுகிறார்கள். சில மருந்துகளை உபயோகிக்கிறார்கள். இதனால் பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. அவற்றை தவிர்த்து இயற்கை முறைகளை பின்பற்ற சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

1 சாப்பாடு சாப்பிடும்போது, நன்றாக மென்று கூழாக்கி விழுங்க வேண்டும்.

2 கோபம், கவலை இருக்கும் சமயங்களில் மனதைக் கட்டுப்படுத்தி, அளவாகச் சாப்பிட வேண்டும். அல்லது கோபம் தணிந்த பிறகு சாப்பிடவும்.

3 கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்தலாம்.. கைக்குத்தல் அரிசியில் உடலை வலுவாக்கும் சத்துக்கள் இருக்கின்றன. வாழைப்பூ, வாழைத்தண்டு, வெண்டைக்காய் ஆகியவற்றை உண்பது உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு நல்லது.

4 நீர்ச்சத்து நிறைந்த பூசணிக்காய், தர்பூசணி,வெள்ளரி போன்றவற்றைச் சாப்பிடலாம்.

5 மைதா, கிழங்கு, எண்ணெயில் பொரித்த உணவுகள், மா, பலா, வாழைப்பழம், இனிப்பு, உப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

6 காலை வெறும் வயிற்றில் சூடான தண்ணீரில் எலுமிச்சைச்சாறு, தேன் கலந்து சாப்பிட்டுவர, உடல் எடை குறையும்.

7 முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கு வறுவல், வாழைக்காய் வறுவல் போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும்.

8 அதிகமாக மோர் குடிக்கவும். தயிர் அடிக்கடி சாப்பிடக் கூடாது. பால் அளவாக அருந்த வேண்டும். சீஸ் தவிர்க்க வேண்டும்.

9 பழச்சாறு, காய்கறிகள், முளைகட்டிய பயறு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

10 கொள்ளு சூப், கொள்ளு துவையல், வறுத்த கொள்ளு, வேகைவைத்த கொள்ளு போன்றவற்றை வாரம் மூன்று முறை எடுத்துக்கொள்ளவும். கொள்ளு சாப்பிட்டால் உடலில் தேவையற்ற கொழுப்பு சீக்கிரம் கரைந்துவிடும். கொள்ளு ரசத்தைக் குளிர்காலங்களில் பயன்படுத்தவும். சூடான உடல்வாகு கொண்டவர்கள் கொள்ளைத் தவிர்ப்பது நல்லது.

11 உணவுக்கட்டுப்பாடுடன் யோகா, நீராவிக் குளியல் ஆகியவை செய்வது உடல் எடை குறைய வழி வகுக்கும்.

Leave a Reply

%d bloggers like this: