பெண்கள் கர்ப்பம் தரித்தது முதல் பிரசவம் நிகழும் வரை பலவித உடலியல் மற்றும் உளவியல் மாற்றங்களுக்கு உள்ளாகின்றனர். இந்த மாற்றங்களால் அவர்களின் உடல் மற்றும் மனம் பலவித மாறுதல்களுக்கு ஆளாகிறது; இதனால், கர்ப்பிணிகளின் கணவர்கள் மற்றும் சுற்றத்தார்கள் பெரும் சிரத்தையோடு கர்ப்பிணிகளை கவனித்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இது குறித்து பெரும்பாலுமான கர்ப்பிணிகள் மனஅழுத்தத்திற்கும், குற்ற உணர்விற்கும் ஆளாகின்றனர். ஆனால், கர்ப்பிணிகள் குற்ற உணர்வு கொள்ளத் தேவையில்லாத சில விஷயங்கள் பற்றி இந்த பதிப்பில் படித்து அறிவோம்..!
1. துரித பால் பொருட்கள்..!
கர்ப்பம் தரித்திருக்கும் போதும், தாய்ப்பால் கொடுக்கும் போதும், பெண்கள் குழந்தைக்கு ஏற்றாற்போல் உணவுகளை உட்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில், துரித பால் பொருட்களான ஐஸ்கிரீம் போன்றவற்றை மிக அரிதாக நீங்கள் உட்கொள்ளலாம். அப்படி உட்கொள்வது பற்றிய எந்தவித குற்ற உணர்வும் நீங்கள் கொள்ளத் தேவையில்லை.
2. எரிச்சல்..!
பிரசவ ஹார்மோன் மாற்றத்தால், உங்கள் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றங்களால் உங்களை சுற்றியுள்ளவர்கள் மீது எரிச்சலைக் காட்ட நேரிடலாம். இது குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
3. பலவீனம்..!
கர்ப்ப காலத்தில் உங்கள் உடலில் பலவீனம் ஏற்படும். உங்கள் பலவீனத்தால், கணவர் மற்றும் சுற்றத்தார் வெளியில் செல்ல எடுக்கும் முடிவுகள் வீணாகலாம்; இது சகஜமே! கவலை வேண்டாம்.
4. பப்ளிமாஸ்.!
கர்ப்ப காலத்தில் அதிகம் உணவு உண்பதால், உங்கள் உடல் எடை கணிசமாக அதிகரித்திருக்கும். இது குறித்து மன வருத்தம் கொள்வதை நிறுத்துங்கள்; குழந்தை பிறந்த பிறகு குறைத்துக் கொள்ளலாம்.
5. தகவல் களஞ்சியம்..!
கர்ப்ப காலத்தில் நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீரோ அது குழந்தையின் செய்கையாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் நீங்கள் அதிகம் படித்து தகவல் களஞ்சியமாக இருக்க வேண்டும்; நீங்கள் படிப்பது குழந்தையை சென்றடையும். இந்த செயல் புரியாமல் இருந்தால், அது குற்றமல்ல. ஆனால் படித்தல், இசை கேட்டல், நல்லதையே எண்ணுதல் குழந்தை ஆரோக்கியமாக வளர உதவும்.
6. உடற்பயிற்சி..!
நீங்கள் மருத்துவர் ஆலோசனையுடன் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். நீங்கள் நினைத்தமாதிரி ஓட முடியவில்லை; தாவ முடியவில்லை என வருத்தம் கொள்ளாதீர்கள்.
7. நேசியுங்கள்..!
உங்களுக்குள் ஏற்படும் கோபம், எரிச்சல் போன்ற மன மாற்றங்களால், உங்கள் கர்ப்பத்தையோ அல்லது கணவர் மற்றும் சுற்றியுள்ளவரை வெறுக்காது, நேசிக்க பழகுங்கள்.
இந்த 7 செயல்கள் குறித்து, நீங்கள் குற்ற உணர்வு கொள்ளத் தேவையே இல்லை கர்ப்பிணிகளே! ஆனந்தமாக இருங்கள்; மனதை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க வளமுடன்..!