குழந்தைகளுக்கான 7 வகை உணவின் செய்முறை..!

புதிதாக அம்மா ஆனவர்களுக்கும், அம்மா ஆக விரும்புவர்களுக்கும் உள்ள பெரிய கவலையே தாய்ப்பாலை தவிர்த்து குழந்தைக்கு வேறு என்ன உணவு கொடுக்கலாம் என்பதே. இந்த கவலையோடு சேர்ந்து கொள்வது அந்த உணவுகளின் தன்மை பற்றிய சந்தேங்கங்களும், அதில் உள்ள செயற்கை பொருட்கள் பற்றிய பயமும்தான். உங்களின் இந்த கவலையை போக்கவே, இங்கே எளிதாக வீட்டிலேயே செய்யக்கூடிய சத்தான உணவுகளின் செய்முறைகள் தரப்பட்டுள்ளது. இது உணவு குறித்த உங்களின் பயத்தையும் நீக்கும். 

முதலில் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது குழந்தைக்கு என்ன உணவுகள் கொடுக்க கூடாது என்பதுதான். கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகள் குழந்தைக்கு அலர்ஜியை உண்டாக்கலாம்.

1 முட்டை

2 மீன்

3 மட்டிமீன்

4 சோயா

5 கோதுமை

6 விதைகள்(நட்ஸ்)

இயற்கை உணவுகளே உங்கள் குழந்தைக்கு கொடுக்க கூடிய சிறந்த உணவாகும். உதாரணமாக, பழங்கள், சில காய்கறிகள் குறிப்பாக உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய் போன்றவை,

இதோ 4-6 மாத குழந்தைக்கு இந்திய அம்மாக்களால் வீட்டிலே செய்து தரப்படும் 7 சத்தான உணவுகள்.

1 பால் ஓட்ஸ் கஞ்சி

இதை செய்ய, தேவையானது 1/4 கப் இயற்கை ஓட்ஸ், 3/4 கப் தண்ணீர் , இனிப்பு பொருள் எதாவது மற்றும் பால்.

4-6 மாத குழந்தைக்கு ஓட்ஸை நன்கு பொடியாக்கி தண்ணீரில் கலக்க வேண்டும். பின் மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்தவுடன் பாலை கலந்து குழந்தைக்கு கொடுக்கலாம்.

2 பட்டாணி கஞ்சி

இதற்கு தேவையானது, மூன்று கப் இயற்கை பட்டாணி மற்றும் 2 ஸ்பூன் தண்ணீர் மட்டும்தான். பட்டாணியை ஊறவைத்து பின் 2 நிமிடம் வேகவைக்க வேண்டும். பின் தண்ணீர் கலந்து பதமாக வந்தவுடன் குழந்தைக்கு ஊட்டுங்கள்.

3 மசிக்கப்பட்ட வாழை

இது மிகவும் எளிமையான ஒன்று. உங்களுக்கு தேவையெல்லாம் வாழைப்பழங்கள் மட்டும்தான், பழங்களை உரித்து நன்கு பிசைந்துகொள்ள வேண்டும். 4-6 மாத குழந்தைகளுக்கு இது மிகவும் உகந்த உணவாகும்.

4 கேரட் கூழ்

இதை செய்ய முதலில் கேரட்டை கழுவி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பின் அதை அரைமணி நேரம் நன்கு வேகவைக்கவும். நன்றாக வெந்தபின் அதை மசித்து கொள்ளவேண்டும். இதை 6 மாதத்திற்கு குறைவான குழந்தைக்கு கூட கொடுக்கலாம்.

5 அவோகேடோ

இதுவும் வாழைப்பழ மசியல் போன்றதுதான். இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் அவோகேடாவை நன்கு சுத்தம் செய்து விதைகளை எடுக்க வேண்டும். தோலை உரித்த பின் நன்கு பிசைந்துகொள்ள வேண்டும். 10-12 மாத குழந்தைகளுக்கு சற்று சிறிய துண்டுகளாக கொடுக்கலாம் ஆனால் 4-6 மாத குழந்தைகளுக்கு கூல் போல பிசைந்து கொடுக்கவேண்டும்.

6 சர்க்கரைவள்ளி கிழங்கு

இது குழந்தைகளுக்கு மிகவும் சுவையான மற்றும் சத்தான உணவாகும். இதை செய்ய முதலில் கிழங்கின் தோலை சீவி, நன்கு கழுவ வேண்டும். பின் அதை பாத்திரத்தில் போட்டு மென்மையாக வேகும்வரை கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் வற்றியவுடன் கிழங்கை எடுத்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். எந்த அளவு முடியுமோ அவ்வளவு கூல் போல பிசைந்து குழந்தைக்கு ஊட்ட வேண்டும்.

7 ஆப்பிள் கூழ்

இது மிகவும் விரைவாக செய்யக்கூடிய சுவையான உணவாகும். முதலில் ஆப்பிளை நான்காக வெட்டி விதைகளை எடுத்துக்கொள்ளுங்கள். பின் இந்த துண்டுகளை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கொடுக்க வையுங்கள். 10-15 நிமிடம் கழித்து ஆப்பிள் துண்டுகளை எடுத்து நன்கு ஆறவையுங்கள். இதை நன்கு பிசைந்து பிரிட்ஜ்-ல் வைத்து வேண்டும்பொழுது எடுத்து குழந்தைக்கு ஊட்டுங்கள்.

ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைக்கு நீங்கள் வேறு வகையான உணவுகள் கொடுக்கலாம். அவை ஸ்வீட் கார்ன் சூப், காய்கறி சூப் போன்றவையாகும். எந்த உணவாக இருந்தாலும் நன்கு மசித்த பின்னரே கொடுக்கவேண்டும். குறிப்பாக ஆப்பிள் கூழ், அவோகேடோ கூழ் போன்றவை கொடுக்கப்படும்போது சிறிய அளவு தோல் கூட அதில் இருக்கக்கூடாது. ஏனெனில் சிறிய தோல் கூட உங்கள் குழந்தையின் மென்மையான வாயில் காயத்தை ஏற்படுத்தும்.

Leave a Reply

%d bloggers like this: