குழந்தைகளுக்கு சளி பிடித்திருக்கும் போது கொடுக்க வேண்டிய 10 உணவுகள்

உங்களது செல்ல குழந்தை மீது அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். புதிதாக அம்மாவாகி இருக்கும் உங்களுக்கு குழந்தை மீது விழும் சிறுதூசி கூட கவலையை கொடுக்கும். இந்த சூழ்நிலையில் உங்கள் குழந்தைக்கு முதல் முறையாக ஜலதோஷம் பிடிக்கும் போது, உங்கள் நிலைமை என்னவாகும்? இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஆனால், நீங்கள் தரும் உணவின் மூலம் இதை குணப்படுத்தலாம். 

1 பால்(6 மாதம் வரை)

6 மாதத்திற்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு சளி குணமாக தாய்ப்பால் தருவதே சிறந்தது. அவர்களுக்கு எந்த உணவும் இப்போது செரிக்காது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் சளியை குணப்படுத்த உதவும்.

2 அரிசி கஞ்சி(6-12 மாதம்)

அரிசி கஞ்சி 6 மாதம் நிறைவடைந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இரண்டு ஸ்பூன் அரிசியை இரண்டு கப் நீரில் நன்கு வேகவைத்து ஆறியவுடன் சூப் போல குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

3 மஞ்சள் கலந்த பால்(1+ வருடம்)

ஒரு வருடத்திற்கு மேலானா குழந்தைக்கு நீங்கள் மஞ்சள் கலந்த பால் வழங்கலாம். இது சளி மற்றும் உலர்ந்த தொண்டையை குணப்படுத்தும் ஒரு இயற்கை ஆண்டிபயாடிக் ஆகும். உங்கள் பிள்ளை ஏற்கனவே நுண்ணுயிர் பாதிப்பில் இருந்தால், மருத்துவரை அணுகிய பின் இதை கொடுக்கவும்.

4 சூப்(1.5 + வருடம்)

குழந்தைகள் நோய்த்தொற்று மூலம் தங்களின் ஆற்றலை இழந்திருக்கலாம். எனவே சத்தான உணவுகளை தரவேண்டியது உங்கள் கடமையாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பு, உலர் தொண்டை போன்றவற்றிற்கு காய்கறிகள் அல்லது சிக்கன் சூப் கொடுக்கலாம். அது மட்டுமின்றி கேரட் சூப், மட்டன் சூப் போன்றவையும் கொடுக்கலாம்.

5 ஆப்பிள் மேஷ் (6-9 மாதம்)

ஆப்பிள் சத்துக்கள் நிறைந்த மற்றும் எளிதில் செரிமானமாக கூடிய உணவாகும். ஆப்பிள் தோல் மற்றும் விதைகளை நீக்கி நன்கு வேகவைக்கவும். பின்னர் மாவுபோல் பிசைந்து குழந்தைக்கு கொடுக்கவும்.

6 மாதுளை ஜூஸ்(6+ மாதம்)

மாதுளைபழம் ஊட்டசத்துக்கள் நிறைந்த பழமாகும். இதில் உள்ள சத்துக்கள் சளியை எதிர்த்து போராடும். குழந்தைக்கு கொடுக்கும் முன் சிறிது இஞ்சி அல்லது மிளகு சேர்த்து கொடுக்கவும்.

7 மசித்த உருளைகிழங்கு(8+ மாதம்)

உருளைக்கிழங்கு கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் உணவு நார் நிறைந்திருக்கும், அவை உங்கள் குழந்தையின் நோய்க்கு எதிராக போராட அவசியமாகும். இது குழந்தைகளுக்கும் பிடித்தமான ஒன்றாகும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி நன்கு வேகவைத்து மாவுபோல் பிசைந்து ஊட்டவும்.

8 கேரட் ஜூஸ்(6+ மாதம் )

கேரட் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுகிறது, குழந்தைக்கு சளி இருக்கும்போது உங்கள் குழந்தையின் உணவில் கேரட் இருப்பது அவசியம். உங்கள் குழந்தைக்கு வேகவைத்த கேரட்டுகளையும் ஊட்டலாம்.

9 தேன் கலந்த வெந்நீர்(8+ மாதம்)

தேன் தொண்டை சம்பந்தப்பட்ட கோளாறுகளை சரிசெய்யும். தேன் கலந்த லெமன் டீ அல்லது வெந்நீரில் தேன் கலந்தோ கொடுக்கலாம்.

10 காய்கறி கிச்சடி(1 வருடம்+)

கிச்சடி எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவாகும். இதில் கேரட், தக்காளி போன்ற காய்கறிகளை சேர்த்து சமைத்து குழந்தைக்கு ஊட்டவும்.

Leave a Reply

%d bloggers like this: