குழந்தைகள் தாய்ப்பாலை மறக்க உதவும் 3 உணவுகள்..!

குழந்தைகளுக்கு தாய்ப்பாலை மறக்க செய்வது என்பது தாய்மார்களுக்கு அவ்வளவு சுலபமான வேலை இல்லை. தாய்ப்பாலை மறக்கடிக்க முயற்சி செய்யும் அதே நேரத்தில், அவர்களை புதிய உணவுகளுக்கும் பழக்கப்படுத்த வேண்டும். என்னதான் இது சாதாரண வழக்கமாக இருந்தாலும், குழந்தைகளின் பிடிவாதமும் அழுகையும் தாய்மார்களை உணர்ச்சிவசப்பட வைக்கும். 

குழந்தைகள் வளர வளர அவர்களுக்கு போதிய சத்துக்கள் தேவைப்படும். தாய்ப்பாலை தவிர்த்து மற்ற உணவுகளில் இருந்தும் அவர்களுக்கு சத்துக்கள் தேவை. அதனால் அவர்களுக்கு தாய்ப்பாலை மறக்கடிக்க செய்வது மிகவும் அவசியமான ஒன்று. குறிப்பாக தாய்ப்பால் குறைவாக சுரக்கும் தாய்மார்கள் கண்டிப்பா குழந்தைகளை பவுடர் பாலில் இருந்து திட உணவுகளுக்கு பழக்கப்படுத்த வேண்டும்.

எப்போது தாய்ப்பாலை மறக்கடிப்பது?

குழந்தைகளுக்கு ஆறு மாதங்கள் ஆன பிறகு பெரியவர்கள் சாப்பிடும் உணவுகளின் மேல் ஆர்வம் காட்ட தொடங்குவார்கள். அந்த நேரத்தில் அவர்கள் தலையும் நின்று விடும். சில குழந்தைகள் உட்காரவும் முயற்சி செய்வார்கள். பெரும்பாலான குழந்தைகளுக்கு அப்போது பல் முளைக்கவும் ஆரம்பித்துவிடும்.

குழந்தைகள் திட உணவுகள் சாப்பிட தயாராகி விட்டார்கள் என்பதற்கு சில அறிகுறிகள் உள்ளன. உங்கள் கையில் இருக்கும் உணவுகளை பறிக்க முயல்வார்கள், நீங்கள் சாப்பிடும் போது அவர்களுக்கும் வேண்டும் என்று கேட்பார்கள், தங்கள் பசியை வெளிப்படுத்த தீவிரமாக அழுவது, கை சூப்புதல் போன்றவையாகும்.

தவறான சமிக்ஞைகள்

குழந்தைகள் திட உணவுகளுக்கு தயாராகும் வரை தாய்மார்கள் பொறுமையாக இருக்க வேண்டும். திடீரென்று தாய்ப்பாலை நிறுத்தி விட்டு திட உணவை குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களுக்கு வயிற்று போக்கு மற்றும் சுவாச நோய்கள் வர வாய்ப்பிருக்கிறது.

குழந்தைகள் இரவில் அடிக்கடி முழித்துக்கொண்டாலோ அல்லது அதிகமாக பால் குடித்தாலோ அல்லது அதன் கையை மெல்ல ஆரம்பித்தாலோ அதை தாய்ப்பாலை மறக்கடிக்க வேண்டிய சமிக்ஞைகளாக எடுத்துக்கொள்ள கூடாது. குழந்தைகள் என்றால் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து அடிக்கடி எழுவார்கள். திட உணவு கொடுப்பதால் அவர்களின் தூக்கத்தின் நிலை மாறாது. கைகளை மெல்லுவதும் அதிகம் பால் குடிப்பதும் குழந்தைகள் இயல்பாக செய்வது.

மூன்று சமையல் குறிப்புக்கள்

நம்மால் குழந்தைகளுக்கு சரியாக ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவை மட்டுமே ஊட்ட முடியாது. வெவ்வேறு வேளைகளில் பல உணவுகளை ஊட்டலாம். தாய்ப்பாலை மறக்கடிப்பது குழந்தைகளுக்கு திட உணவை அறிமுகப்படுத்த மட்டுமில்லை. பல தரப்பட்ட சுவைகளை அறிமுகப்படுத்தவும் தான். இங்கே பல தாய்மார்களால் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்ட சில சமையல் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1 பழம் மற்றும் காய்கறிகள்

இயற்கை உணவுகளே குழந்தைகளுக்கு சிறந்தது. வேகவைத்த ஆப்பிள், மசித்த வாழைப்பழம், மசித்த அவகேடோ, வேகவைத்த மசித்த சக்கரைவள்ளிக்கிழங்கு, வேகவைத்த மசித்த கேரட் மற்றும் வேகவைத்த உருளைக்கிழங்கு. இவற்றில் சிறுது உப்பு மற்றும் சக்கரை சேர்த்து கொள்ளலாம். ஆனால், அதில் கவனம் தேவை. ஏனென்றால், குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 2 கிராம் உப்பு மாற்றும் 13 கிராம் சக்கரை மட்டும் தான் சேர்க்க வேண்டும் . பழச்சாறுகளை அதிகம் கொடுக்காதீர்கள். இதனால் பற்சொத்தை உண்டாக வாய்ப்புகள் உள்ளது.

2 வேகவைத்த ரவை

ரவையை தண்ணீர் அல்லது பாலில் சமைத்து சிறிது உப்பு அல்லது சக்கரை சேர்த்து அதோடு சிறிது நெய் சேர்த்து கொடுக்கலாம். எக்காரணத்தை கொண்டும் காரம் சேர்க்காதீர்கள்.

3 சாதம்

எப்போதும் போல் சாதத்தில் உப்பு மற்றும் நெய் அல்லது சக்கரை மற்றும் நெய் சேர்த்து கொடுக்காமல் அதற்கு மாற்றாக இட்லி அல்லது தோசை கொடுக்கலாம். எதுவாக இருந்தாலும் நன்கு மசித்து கொடுங்கள்.

மேலும், கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளுக்கு தேங்காய் தண்ணீர், வேகவைத்த பருப்புகள், பழம் மற்றும் காய்கறிகள் கொடுக்கலாம். திட உணவுகளுக்கு பழக்கப்படுத்தும் இக்காலகட்டத்தில் குழந்தைகளிடம் ஏதேனும் அசௌகரியம் தெரிகிறதா என்பதை தாய்மார்கள் கவனிக்க வேண்டும்.

சில உணவுகள் அலர்ஜி உண்டாக்கலாம். அதனால், குழந்தைகளிடம் ஏதேனும் அசௌகரியம் தென்பட்டால், எடுத்துக்காட்டாக, உணவை துப்பினால் குழந்தைகள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது சாலச்சிறந்தது. குழந்தைகள் உணவு சாப்பிடவில்லை என்றால் உணவை திணிக்கக்கூடாது. தலைப்பாலை மறக்கடிக்க செய்யும் இக்காலகட்டத்தில் தான் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.

Leave a Reply

%d bloggers like this: