குழந்தையை ஒழுக்கமாக வளர்க்க உதவும் 6 வழிகள்..!

உங்கள் குழந்தை நடை பயில ஆரம்பிக்கும் போதே, அவர்களின் நடத்தைக்கு சில எல்லைகளை வரையறுப்பது மிகவும் அவசியம். இதை நீங்கள் எவ்வளவு விரைவாக செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவர்கள் ஒழுக்கமான பிள்ளையாக வளர்வார்கள். குழந்தைகளின் சேட்டையை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது என்றாலும், அதை முடிந்த அளவு கட்டுப்படுத்தலாம். குழந்தைகள் சேட்டை செய்யவில்லை என்றாலு ம் நமக்கு சலிப்பு தட்டும். இங்கே உங்கள் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க உதவும் சில எளிய நடைமுறைகளை பார்க்கலாம்.

1 குழந்தைகளை அடிக்காதீர்கள்

எந்த சூழ்நிலையிலும் உங்கள் குழந்தைகளிடம் கை ஓங்காதீர்கள். நீங்கள் அவர்களை அடிக்க அடிக்க அவர்கள் உங்களுக்கு எதிராக திரும்புவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அடிப்பதற்கு பதிலாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஆக்கப்பூர்வமான வழிகளில் எடுத்து சொல்லுங்கள். எக்காரணத்தை கொண்டும் அவர்களை அடிக்காதீர்கள். உங்கள் குடும்பத்தினரும் அவர்களை அடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

2 உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துங்கள்

உங்கள் குழந்தை உங்கள் பேச்சை கேட்கவில்லை என்றால் கண்டிப்பாக உங்களுக்கு கோபம் வரும். அதை அவர்கள் மீது காட்டாமல் கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள் . இல்லையெனில், அதுவே, அவர்களை மேலும் மேலும் உங்களுக்கு எதிராக திருப்பிவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

3 நல்ல நடத்தையை வெளிப்படுத்துங்கள்

உங்கள் குழந்தைகள் உங்களை பார்த்து தான் கற்றுக்கொள்வார்கள். உங்கள் அனைத்து பண்புகளையும் பின்பற்றுவார்கள். அதனால், குழந்தைகள் வளர வளர, நல்ல நடத்தையை நீங்கள் வெளிப்படுத்துவது மிகவும் அவசியம். இதனால், உங்கள் நல்ல குணங்களை குழந்தைகளும் பின்பற்றுவார்கள். உங்களுக்கும் வேலை மிக எளிதாகிவிடும்.

4 நல்ல நடத்தையை அங்கீகரியுங்கள் (பாராட்டுங்கள்)

உங்கள் குழந்தை நல்ல நடத்தையை வெளிப்படுத்தினால் அவர்களை பாராட்ட தவறாதீர்கள். இது ஒரு லஞ்சம் போல் தோன்றினாலும் குழந்தைகளை நல்வழிப்படுத்த இது தான் சிறந்த வழியாகும். குழந்தைகளும் தங்கள் செய்த நன்மைக்கு கிடைத்த பலனை எண்ணி மகிழ்வார்கள். அதோடு, மேலும் நன்மை செய்ய ஊக்கமும் பெறுவார்கள்.

5 போதுமான கவனம்

சில குழந்தைகள் ஒழுக்கமில்லாமல் இருப்பதற்கு, பெற்றோர் அவர்கள் மீது போதிய கவனம் செலுத்தாதது கூட காரணமாக இருக்கலாம். எக்காரணத்தை கொண்டும் வளரும் குழந்தையை புறக்கணிக்காதீர்கள். அப்படி செய்தால் அவர்கள் வளர்ந்த பிறகு நீங்கள் வருத்தப்படுவீர்கள். பிள்ளைகள் பருவ வயதை எட்டிய பிறகு அவர்களை நல்வழிப்படுத்துவது முடியாத காரியம் என்பதால் உங்களால் முடிந்த பொழுதே அதை செய்யுங்கள். அவர்கள்மேல் போதுமான கவனம் செலுத்துங்கள்.

6 சிறிது இடைவேளை கொடுங்கள்

இது குழந்தைகளை நல்வழிப்படுத்த நினைக்கும் பெற்றோர்களிடம் இருக்கும் பிரபலமான ஒன்று. உங்கள் குழந்தைகளை சிறிது காலத்திற்கு தனிமையில் விட்டுவிடுங்கள் . இது, குழந்தைகள் தங்கள் நடத்தையில் உள்ள தவறுகளை உணர்ந்துகொள்வதற்கு உதவுகிறது. மேலும் நீங்களும், அவர்களின் தவறுகளை உணர்ந்து அதற்கு மன்னிப்பு கேட்கும்படி அவர்களை ஊக்கப்படுத்துங்கள். இடைவேளை என்பது வேண்டும் தான், அதற்காக அவர்களை நீண்ட நாட்கள் தனிமையில் விட்டுவிடாதீர்கள். இதனால் உங்களிடம் அவர்களின் அணுகுமுறை மாற வாய்ப்பிருக்கிறது.

Leave a Reply

%d bloggers like this: