குழந்தை தலையின் வளர்ச்சி

உங்கள் குழந்தை பிறந்தவுடன் அவர்களின் தலை தோராயமாக 13.5 இன்ச் மட்டுமே இருக்கும். குழந்தையின் உடலை விட தலை பெரியதாக இருப்பது இயற்கையானதாகும். குழந்தை பிறந்த நாளிலிருந்து ஒரு வயதை எட்டும்வரை குழந்தையின் தலை மற்றும் மூளை வளர்ந்துகொண்டே இருக்கும். முதல் வயது என்பது உங்கள் குழந்தையின் வளர்ச்சியின் மிகவும் முக்கியமான நிலையாகும். 

பிரசவத்தின்போது உங்கள் குழந்தையின் தலை மிகவும் மென்மையானதாக இருக்கும். அதற்கு காரணம் தலை மிருதுவாக இருந்தால்தான் பிரசவ நேரத்தின் போது உங்களால் குழந்தையை வெளியே தள்ள முடியும். குழந்தை பிறந்த சில மாதங்களில் அவர்களின் தலை சரியான வடிவத்தில் வளர தொடங்கிவிடும்.

உங்கள் குழந்தையின் தலையினுடைய மிருதுவான பகுதி 18 மாதத்திற்கு பின்தான் முழுமையாக வளர்ச்சியடையும். உங்கள் குழந்தை மிருதுவான இரண்டு பகுதிகளை தலையில் கொண்டிருக்கும். ஆனால் அவை நன்கு தசைகளால் மூடப்பட்டிருக்கும். எனவே, குழந்தை ஒருவேளை கீழே விழ நேர்ந்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.

குழந்தையின் உச்சந்தலை அவர்களின் மூளையின் வளர்ச்சியை குறிக்கும். இது மூளை சம்பந்தப்பட்ட நோய்களையும் உணர்த்த கூடியது. அமிழ்ந்த உச்சந்தலையானது குழந்தையின் உடலில் நீரின் அளவு குறைந்தற்கான அறிகுறி ஆகும். குழந்தை பிறந்த சில வாரங்கள் வரை மருத்துவர்களால் மூளையின் வளர்ச்சியை கண்டறிய இயலாது. ஏனெனில், இந்த சமயத்தில்தான் மூளை முழுவளர்ச்சி அடையக்கூடும்.

உங்கள் குழந்தையின் தலையின் வடிவம் பிறந்தது முதல் ஒரு வயதுக்குள் அதீத வளர்ச்சி அடைந்திருக்கும். சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த வளர்ச்சி சீராக இருக்கும். மற்ற குழந்தைகளுக்கு சீரான வளர்ச்சி ஏற்பட சிறிது காலம் தேவைப்படும். தூங்கும் முறைகள், தூங்கும் நேரம் மற்றும் சரியான தலையணை மூலம் தலையின் வளர்ச்சியை சீராக்கலாம். தூங்கும்போது குழந்தையை ஒருபுறமாக தூங்கவையுங்கள் இது தலை தட்டையான வடிவமாக மாறுவதை தடுக்கும்.

Leave a Reply

%d bloggers like this: