புதிதாக குழந்தை பெற்ற அம்மாக்கள் தங்களின் குழந்தைக்கு தாய்ப்பால் தருவது மிகவும் அவசியமாகும். இது ஒரு உடலியல் செயல்முறை என்றாலும், சில உணவுகள் தாய்ப்பால் சுரப்பை சுரப்பை அதிகமாக்கும். அம்மாக்கள் சாப்பிடவேண்டிய உணவுகள் இங்கே தரப்பட்டுள்ளன.
1 வெந்தயம்
வெந்தயமானது தாய்ப்பால் சுரப்பை அதிகமாக்குவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. எனவேதான் மருத்துவர்கள் புதிதாக குழந்தைப்பெட்ற அம்மாக்களை உணவில் வெந்தயத்தை சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கிறார்கள்.
2 சோம்பு
வெந்தயத்தை போல சோம்பும் தாய்ப்பால் உற்பத்தியை அதிகமாக்குகிறது. தொடர்ச்சியாக உணவில் சோம்பு சேர்க்கும்போது செரிமான கோளாறுகள் குணமாவதுடன் பிரசவத்துக்கு பின்னர் வரும் மலச்சிக்கலும் குணமாகும்.
3 பூண்டு
பூண்டு ஒரு சிறந்த சிகிச்சைப்பொருள் என்று அனைவரும் அறிவார்கள், அதேபோல் பூண்டு அம்மாவின் தாய்ப்பால் சுரப்பிலும் முக்கியப்பங்கை வகிக்கிறது. சில ஆய்வுகள் பூண்டு அதிகம் உட்கொள்ளும் தாய்மார்கள் அதிக நேரம் குழந்தைகளுக்கு பாலூட்டலாம் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
4 சீரகம்
சீரகம் பாலூட்டும் தாய்மார்களின் பால் உற்பத்தியை அதிகளவில் தூண்டுகிறது. மேலும் பிரவத்திற்கு பின் அம்மாக்களை வலுப்படுத்தும் இரும்பு சத்தை அதிகளவில் கொண்டுள்ளது.
5 எள்
வெள்ளை மற்றும் கருப்பு எள்ளு இரண்டுமே காப்பர் மற்றும் கால்சியம் அதிகளவில் உள்ள அற்புத பொருளாகும். இது மட்டுமின்றி தாய் மற்றும் குழந்தை இருவர்க்கும் பயனுள்ளதாக இருக்கும் பல ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது.
6 ஓமம்
பெரும்பாலும் அனைவரின் வீட்டிலும் இருக்கும் ஓமம் செரிமானத்திற்கு உதவுவதோடு மலச்சிக்கலையும் குணப்படுத்தும். பாலூட்டும் தாய்களின் பால் உற்பத்தியை அதிகரிக்கவும் இது உதவுகிறது.
7 ஓட்ஸ்
காலை உணவுக்கு ஓட்ஸ் ஒரு சிறந்த தேர்வாகும். இதில் கால்சியம் மற்றும் இரும்புசத்து நிறைந்துள்ளது. காலை நேரத்தில் ஒரு கிண்ணம் ஓட்ஸ் பலூட்டுதலுக்கு மிகவும் நல்லதாகும்.
8 பச்சை காய்கறிகள்
பெரும்பாலும் பலரால் நம்பப்படும் ஒன்று சுரைக்காய், பாகற்காய் மற்றும் கோவக்காய் போன்ற பச்சை காய்கறிகள் பிரசவத்தின் பின் பால் உற்பத்தியை அதிகமாக்கும். அது மட்டுமின்றி, இவை எளிஜீரணமாவோதோடு அதிக ஊட்டச்சத்துகளையும்
9 சிகப்பு காய்கறிகள்
சர்க்கரைவள்ளி கிழங்கு, கருணைக்கிழங்கு, கேரட் மற்றும் பீட்ருட் போன்றவை அம்மாக்களின் உணவில் நிச்சயமாக சேர்க்கப்பட வேண்டும். மார்பக பால் அதிகரிப்பதைத் தவிர, கல்லீரலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், பிரசவத்திற்கு பின் தாய்க்கு ஏற்படும் இரும்புசத்து குறைபாட்டை சரிசெய்யவும் உதவுகிறது.
10 உலர் பழங்கள்
உலர் பழங்களின் சத்துக்களை பெற அதை இனிப்பு பொருட்களிலோ, பருப்பு போன்ற உணவுகளிலோ சேர்த்து சமைத்து உண்ணலாம்.